இலங்கைக்கு அதிவேக படகுகளை வழங்கிய ஆஸ்திரேலியா

/files/detail1.png

இலங்கைக்கு அதிவேக படகுகளை வழங்கிய ஆஸ்திரேலியா

  • 0
  • 0

இலங்கை கடலோரக் காவல்படைக்கு Stabicraft என்ற மூன்று அதிவேக படகுகளை ஆஸ்திரேலியா பரிசளித்துள்ளது. 

கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் பிரஸ் ஹச்யெசன் இப்படகுகளை இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவன் விஜயவர்த்தனேவிடம் ஒப்படைத்தார். 

முன்னதாக, கடந்த 2017ம் ஆண்டு இலங்கைக்கு முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் வருகை தந்திருந்த பொழுது, அதிவேக படகுகளை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். அந்த உறுதியின் அடிப்படையில் தற்போது இப்படகுகள் வழங்கப்பட்டுள்ளன. 

இப்படகு 6.6மீட்டர் நீளமும் அதிவேக திறனையும் அத்துடன் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் ரேடாரையும் கொண்டுள்ளது. 

இது குரித்து கருத்துக் கூரிய மால்கம் டர்ன்புல், இரு நாடுகளிடையே பொருளாதார மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்வதற்கான விவாதங்களை எதிர்ப்பார்க்கிறேன் என்றும் நாடுகளிடையேயான குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையில் குறிப்பாக ஆட்கடத்தலை தடுப்பதில் இணைந்து பணியாற்றவதற்கான விவாதங்களை எதிர்ப்பார்ப்பதாகவும் கூறியிருந்தார். 

அந்த அடிப்படையில், ஆட்கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில், ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சென்று தஞ்சம்கோரிய இலங்கையர்களை திரும்பப் பெற்றுக் கொள்வதில் ஆஸ்திரேலியாவுடன் இலங்கை இணக்கமான போக்கை கையாண்டு வந்தது. அதன் பலனாக, இலங்கைக்கு மூன்று படகுகளை ஆஸ்திரேலியா பரிசளித்துள்ளதாக கூறப்படுகின்றது. 

2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகின்றது. கடந்த காலங்களில், இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியா அடையும் முயற்சிகளை ஈழத்தமிழ் அகதிகள் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் மேற்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கையை பொறுத்த வரையில், 2013ம் ஆண்டு முதல் ஆட்கடத்தல் தொடர்பில்  489 கைதுகள் நடந்துள்ளன. 

Leave Comments

Comments (0)