தலித் பெண் எம்.எல்.ஏ-வை விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொள்ள விடாமல் தடுத்த ஆணவ சாதியினர்

/files/detail1.png

தலித் பெண் எம்.எல்.ஏ-வை விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொள்ள விடாமல் தடுத்த ஆணவ சாதியினர்

  • 1
  • 0

 

ஆந்திராவில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ-வை விநாயகர் சதுர்த்தி பந்தலுக்குள் நுழையவிடாமல் தடுத்துள்ளனர் ஆணவ சாதியைச் சேர்ந்தவர்கள்.

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ஸ்ரீதேவி. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், தலிகொண்டா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி ஆனந்தவரம் கிராமத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்டார் ஸ்ரீதேவி. அப்போது அங்கிருக்கும் ஆணவ சாதியைச் சேர்ந்த மக்கள் ஸ்ரீதேவி இந்த விழாவில் கலந்துகொண்டால் தீட்டு பட்டுவிடும் என்றுக் கூறி அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால்  ஸ்ரீதேவியின் ஆதரவாளர்களுக்கும், ஆணவ சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ”முதன் முறையாகச் சாதிப் பாகுபாடு குறித்த பிரச்னையை எதிர்கொள்கிறேன் என்று வேதனை தெரிவித்துள்ளார்”.
 

Leave Comments

Comments (0)