இலங்கையில் குழந்தைகள் கடத்தப்பட்டனரா? விசாரணை ஆரம்பம்

/files/detail1.png

இலங்கையில் குழந்தைகள் கடத்தப்பட்டனரா? விசாரணை ஆரம்பம்

  • 0
  • 0

இலங்கையில் இருந்து 10,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள்  வெளிநாடுகளுக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த விவகாரத்தில்  குழந்தைகள் கடத்தப்பட்டு தத்துக்கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளமையினால் அது குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1948 ஆம் ஆண்டு சுவிஸர்லாந்தின் சமூக சேவையாளரான Alice Honegger மற்றும் இலங்கையின் சட்டத்தரணி ஒருவரான ருக்மனி தவனேசன் என்பவர்கள் ஒன்றிணைந்து சட்ட ரீதியான முறையில் இலங்கையின் குழந்தைகளை வெளிநாட்டு பெற்றோர்களுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.

அந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இதுவரையில் 11,000 இலங்கை குழந்தைகள் ஐரோப்பிய நாடுகளுக்கும், 700 இலங்கை குழந்தைகள் சுவிஸர்லாந்திற்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த குழந்தைகளை வளர்ப்பதற்காக வெளிநாட்டு பெற்றோர்களுக்கு சட்ட ரீதியான முறையில் அனுப்பப்பட்டிருப்பினும் சில சந்தர்ப்பங்களில் அவற்றில் சந்தேகம் இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக குழந்தைகளை தத்தெடுக்கும்  போது, குழந்தையின் உண்மையான பெற்றோர்களிடம் இருந்து எந்த அடிப்படையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளப்பட்டது என்ற   சந்தேகம்  எழுந்துள்ளது.

இந்நிலையில், குழந்தைகள் கடத்தப்படுதல் மற்றும் உண்மையான பெற்றோர்களுக்கு சரியான தகவல் வழங்கப்படாமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைபாடுகளின் அடிப்படையில்  தற்போது இது குறித்த  விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave Comments

Comments (0)