“யார் வேண்டுமென்றாலும் கோயிலுக்கு செல்லலாம்”: சபரிமலை ஐய்யப்பன் கோயில் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

“யார் வேண்டுமென்றாலும் கோயிலுக்கு செல்லலாம்”: சபரிமலை ஐய்யப்பன் கோயில் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

  • 0
  • 0

-V.கோபி 

வழிபாடு செய்வதற்கான உரிமையை பெண்களுக்கு அரசியலமைப்பு கொடுத்துள்ளது எனவும் அதை யாரும் சட்டத்தை கொண்டு தடை செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 10 முதல் 50 வயதிற்குள்ளான பெண்கள் யாரும் சபரிமலை கோயிலுக்கு செல்ல கூடாது என்ற தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் இக்கருத்தை கூறியுள்ளது. மாதவிடாய் வயதில் இருக்கும் எந்த பெண்களும் சபரிமலை ஐய்யப்பன் சன்னதிக்குள் நுழையக்கூடாது என காலம் காலமாக பின்பற்றி வரும் நடைமுறையாகும்.

ஐந்து நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வரும் இவ்வழக்கில், “அனைத்து பெண்களும் கடவுளால் படைக்கப்பட்டவர்களே. பின் ஏன் வேலைவாய்ப்பிலும் கடவுள் வழிபாட்டிலும் அவர்களுக்கு பாரபட்சம் காட்டுகிறோம். அனைத்து மக்களுக்கும் மனசாட்சியின் படி எந்த மதத்தையும் வெளிப்படுத்தவோ, பின்பற்றவோ, பரப்பவோ முழு உரிமை உள்ளது. அப்படியானால் பெண்கள் வழிபாடு செய்வதற்கு சட்டத்தின் உதவி தேவையில்லை. இது அவர்களுக்கு அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள உரிமை” என ஐந்து நீதிபதிகளில் ஒருவரான நிதிபதி சந்திரசூத் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம், ஐந்து பிரதான கேள்விகளை அடிப்படையாக கொண்டு, அதில் முக்கியமாக, இந்த தடையினால் பெண்களுக்கு எதிராக  பாரபட்சம் காட்டப்படுகிறதா, பெண்களின் அரசியலமைப்பு உரிமை மீறப்படுகிறதா? என கேட்டு இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம். தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் நரிமன், கன்வில்கர், சந்திரசூத் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்குவர்.

இதற்கு முன் இருந்த அரசுகள் எடுத்த நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, “உங்கள் நிலையை மறுபடியும் மாற்றியுள்ளீர்கள். இது நான்காவது முறை இப்படி நடக்கிறது” என கடுமையாக கூறினார்.

இதற்கிடையில், சபரிமலையில் வழிபாடு செய்வதற்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் எனவும் இது தங்கள் கம்யுனிஸ்ட் கட்சியின் நீண்ட நாள் கோரிகையாகும் என்கிறார் கேரள மாநில அமைச்சர் சுரேந்திரன். 


நன்றி https://www.ndtv.com/kerala-news/on-entry-of-women-of-all-ages-in-sabarimala-temple-supreme-court-says-once-you-open-a-temple-everyon-1885468

Leave Comments

Comments (0)