சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர் மரணம்

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர் மரணம்

  • 5
  • 0

 

ஆதிக்க சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட திட்டக்குடி அருகில் இருக்கும் இறையூரைச் சேர்ந்த தலித் இளைஞர் புனேவில் உயிரிழந்திருக்கிறார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இருக்கும் இறையூரைச் சேர்ந்தவர் பரந்தாமன். இவர் கல்லூரியில் படிக்கும்போது மதுரை மாவட்டம் பாரப்பட்டியை சேர்ந்த  பிற்படுத்தப்பட்ட சமூக பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பிறகு கடந்த 9 மாதங்களாக இறையூரில் வாழ்ந்து வந்த தம்பதிக்கு பெண்ணின் வீட்டிலிருந்து பல்வேறு இடையூறுகளை வழங்கியுள்ளனர். திருமணத்துக்கான வயதை எட்டாத பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்துக்கொண்டதாக பரந்தாமன் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம், காவல்துறை பரந்தாமன் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிகிறது.

alt text

அதனோடு பல்வேறு வகையில் ஆதிக்க சாதி பெண் வீட்டினரால் பரந்தாமன் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்ட பரந்தாமனின் மனைவி மீண்டும் இறையூருக்கு வந்திருக்கிறார். இந்நிலையில், வேலைக்காக புனே சென்ற பரந்தாமன் நேற்று முன்தினம் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சாதி ஆணவத்தால் கொல்லப்பட்டிருக்கும் பரந்தாமனுக்கு நீதி கேட்டு நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பரந்தாமனின் மரணம் கொலையாகவும் இருக்கலாம், இதுதொடர்பில் விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞர் சாதி ஆணவத்தால் கொல்லப்பட்டிருப்பது தமிழகத்தில் மற்றொரு சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

alt text

Leave Comments

Comments (0)