தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவனை பிளேடால் கிழித்த ஆணவ சாதி மாணவன்

/files/detail1.png

தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவனை பிளேடால் கிழித்த ஆணவ சாதி மாணவன்

  • 0
  • 0

மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்தும் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவனின் முதுகில் ஆணவ சாதியைச் சேர்ந்த மாணவன் பிளேடால் கிழித்துள்ள சம்பவம் நடந்திருக்கிறது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், பாலமேடு அருகே உள்ளது மறவப்பட்டி. இந்த கிராமத்தில் வசித்துவரக்கூடிய தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர் பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் நேற்று (அக்டோபர் 11) அதே பள்ளியில் படிக்கும் மோகன்ராஜ் என்ற மாணவரின் பள்ளி பையை மகா ஈஸ்வரன் என்ற மாணவன் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு தேட வைத்துள்ளார். இதனையடுத்து சரவணகுமாரும், மோகன்ராஜும் சென்று மகா ஈஸ்வரனிடம் பையை எங்கு வைத்துள்ளாய் என்று கேட்டுள்ளனர். இதில் கோபமடைந்த மகா ஈஸ்வரன், சரவணகுமாரைப் பார்த்து ”ஏண்டா சக்கிலிய கூ**மகனே நீயெல்லாம் என்னை எதிர்த்து பேசுவியா” என்று கூறி பிளேடால் சரவணகுமாரின் முதுகில் கிழித்துள்ளார்.

இதில் சரவணகுமாரின் முதுகுபகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து சரவணகுமார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

சமத்துவத்தைப் போதிக்கும் கல்விக்கூடங்களில் தீண்டாமை கொடுமைகள் சமீப காலமாகவே அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது. 

Leave Comments

Comments (0)