காஷ்மீர் விவகாரத்தை ஜனநாயக முறையில் அணுகவில்லை என்றால் இதற்குத் தீர்வே இல்லாமல் போகும்- அமர்த்தியா சென் 

/files/detail1.png

காஷ்மீர் விவகாரத்தை ஜனநாயக முறையில் அணுகவில்லை என்றால் இதற்குத் தீர்வே இல்லாமல் போகும்- அமர்த்தியா சென் 

  • 0
  • 0

 

காஷ்மீர் விவகாரத்தில் காஷ்மீர் மக்கள்தான் முடிவெடுக்கவேண்டும் என்று பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில், காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்துள்ளதோடு, காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு உரிமைகளை வழங்கக்கூடிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவையும் ரத்து செய்துள்ளது. இந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப் பல நாட்களாகத் திட்டம் தீட்டிய பாசிச பாஜக, காஷ்மீரில்  முழு ஊரடங்கு உத்தரவைப் பிறபித்து, இண்டெர்னெட் உட்பட அனைத்து தகவல் தொடர்புகளும்  துண்டிக்கப்பட்டு, முன்னாள் முதல்வர்கள் வீட்டுக் காவலில் வைத்து இந்த சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. பாஜகவின் இந்த நடவடிக்கை 'காஷ்மீர் மக்களின் மாநில உரிமையை அபகரிப்பது என்று பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இதுகுறித்து அமர்த்தியா சென் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ”காஷ்மீர் விவகாரத்தில் காஷ்மீர் மக்கள்தான் முடிவெடுக்கவேண்டும். ஏனெனில் அது அவர்களின் நிலம். காஷ்மீர் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை  வீட்டுக் காவலில் வைத்துவிட்டு இச்சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார்கள். இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டு உண்மையை நிலைநாட்டுவதாகச் சொல்கிறார்கள். அது எப்படி முடியும்.  அரசு எடுத்த இந்த நடவடிக்கையில் பல்வேறு கோளாறுகள் உள்ளன. இந்த விவகாரத்தை ஜனநாயக முறையில் அணுகவில்லை என்றால் இதற்குத் தீர்வே இல்லாமல் போகும்”என்று கூறினார்.  

Leave Comments

Comments (0)