திருப்பு முனையை ஏற்படுத்தியதா ? சென்னை சர்வதேச திரைப்பட விழா !
February 26, 2021 - selvamani T
February 27, 2021,3:26:49 AM
-சித்தார்த் பிரபு
\r\nதன் விமர்சகர்களால், வாசிக்கப்படாமல் ஓரளவே புரிந்துகொள்ளப்படும் தத்துவவாதியும் சிந்தனையாளருமான கார்ல் மார்க்சின் இருநூறாம் ஆண்டு விழாவை 2018 குறிக்கிறது. மார்க்சுக்கு வெளிப்படையான விமர்சகர்கள் இல்லாமலில்லை. எனினும் என்னுடைய கருத்தில், இந்திய சமுதாயத்தையும் இனிமேல் உள்ளதையும் புரிந்துகொள்ள மார்க்ஸ் நமக்கு எவ்வாறு உதவுகிறார் என விவாதிப்பது காலத்தின் கட்டாயமாகும் .
இந்தியா போன்றதொரு நாட்டில், ஆழமாக வேரூன்றிய வர்க்க- சாதிய பாகுபாடுகள் காரணமாக கார்ல் மார்க்சின் பார்வை போதுமான பொருத்தத்தைக் கொண்டுள்ளது. ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்-உடன் இணைந்து அவர் இயற்றிய புகழ்பெற்ற படைப்பானது முதலாளித்துவத்தின் முரண்பாடுகளைப் பற்றி பேசுகிறது. முதலாளித்துவத்தின் இலாபம் தேடும் போக்கு, உபரி உழைப்பை விழுங்கி அதீத உற்பத்தியைத் தவிர்க்கவியலாததாக்குகிறது. முதலாளித்துவம் தொடர்ச்சியான நெருக்கடிகளை எதிர்கொள்வதை இது சுட்டுகிறது.
மார்க்ஸ், வர்க்கப் போராட்டத்தின் கண்ணாடி வழியாக வரலாற்றைப் படித்தார். மார்க்சியத்தில் 'வர்க்கம்' என்பது உற்பத்திக் கருவிகளுடனான ஒருவரின் உறவின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. சோசலிசத்தை மார்க்ஸ் கண்டுபிடிக்கவில்லை. மார்க்சுக்கு முன் சோசலிஸ்டுகள் இருந்தனர். ஆனால், மார்க்ஸும் ஏங்கெல்சும் அதற்குமுன் இருந்த கற்பனாவாத சோசலிசத்துக்கு மாறாக 'அறிவியல்சார் சோசலிசத்தைக்' கொண்டு வந்தனர்.
ஸ்டாலினின் ரஷ்யா மற்றும் போல் போட்டின் கம்போடியா போன்ற கம்யூனிச அரசுகளின்கீழ் லட்சக்கணக்கானோர் மரணமடைந்ததற்காக மார்க்ஸ் அடிக்கடிக் குற்றம்சாட்டப்படுகிறார்.இருப்பினும், அவரது தத்துவங்களின் மோசமான செயல் படுத்தலுக்காக ஒரு தத்துவஞானியைக் குற்றம்சாட்டுவது மிகவும் அநீதியாகத் தோன்றுகிறது (குறிப்பாக அவருடைய எழுத்துக்களில் ஒருமுறை கூட அரசியல் படுகொலைகள் குறிப்பிடப்படவில்லை என்ற நிலையில்). சோவியத் ஒன்றியம் வீழ்ந்து ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாகிவிட்ட நிலையில் இந்த ஆட்சிகளின் சர்வாதிகார த் தன்மைக்காக மார்க்ஸைக் குற்றம்சாட்டுவது நியாயமில்லை. ஒரு பொதுவுடைமைச் சமுதாயம் குறித்த மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் பார்வையானது அத்தகைய சர்வாதிகாரத் திகிலில் இருந்து மிகவும் தூரமாக உள்ளது. புரட்சியின் போது புரட்சிகர பயங்கரவாதம் பயன்படுத்தப்படலாம். ஆனால் புரட்சிக்குப் பின்பும் அதை நிரந்தரமாக்குவது மார்க்ஸோ ஏங்கெல்சோ முன்மொழிந்த கருத்தாக்கமாக எப்போதும் இருந்ததில்லை.
இந்தியாவில் மார்க்சின் பொருத்தம்
\r\nஉலகிலுள்ள மற்றவர்களைப் போலவே முழுமையற்ற அறிவின் அடிப்படையில் மார்க்சின் கோட்பாட்டை நிராகரிக்கும் சிந்தனையாளர்களும் சமூக கோட்பாட்டாளர் களும் அரசியல் தலைவர்களும் இந்தியாவில் உள்ளனர். மார்க்சின் இந்திய எதிர்ப்பாளர்கள், மார்க்சின் கோட்பாடு குறித்து இரு வகையான கருத்துகளைக் கொண்டுள்ளனர்.
1) மார்க்சின் கோட்பாடு 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவிற்கு மட்டுமே பொருந்தக்கூடியதாக இருந்தது. இன்றைய சூழ்நிலைகள் மிகவும் வேறுபட்டவை.
2) மார்க்சின் கோட்பாடு பிற நாடுகளுக்கு பொருத்தமானதாக இருக்கலாம், இந்தியாவுக்கு அல்ல. ஏனெனில் மார்க்ஸ், சாதிய அமைப்பு பற்றி ஒருபோதும் எழுதவில்லை.
\r\nஆனால் இந்திய சமுதாயத்தின் மீதான சாதியின் மிகத் தீங்கான தாக்கத்திற்கும் உற்பத்தி சார்ந்த உறவுகளுடனான அதன் காரண இணைப்பிற்குமான கூரிய கவனத்தை ஈர்க்கும் முதல் சிந்தனையாளர்களில் ஒருவராக மார்க்ஸ் இருந்தார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. "இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால முடிவுகள்" பற்றிய அவரது புகழ்பெற்ற கட்டுரையில், கார்ல் மார்க்ஸ், இந்திய சாதிகளை "இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் அதிகாரத்திற்கும் மிகவும் தீர்க்கமான தடை" என்று வகைப்படுத்தினார். குறிப்பாக சமூகரீதியில், இந்திய சாதி அமைப்பானது உழைப்பின் பரம்பரைப் பகுப்பை (இந்திய கிராமச் சமுதாயத்தின் மாறாத தொழில்நுட்ப அடிப்படை மற்றும் பிழைப்புநிலைப் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்தது) அடித்தளமாகக் கொண்டுள்ளது என மார்க்ஸ் வாதிட்டார்.
மேலும் பொருளாதார அமைப்பானது உழைப்பை உடலுழைப்பு,மன உழைப்பு என வகைப்படுத்துவதாக அவர் கூறினார். மன உழைப்பு அதிக மதிப்பையும் உடலுழைப்பு குறைந்த மதிப்பையும் கொண்டுள்ளன. பிந்தையது (மன உழைப்பு) எந்தவொரு படிநிலை முறையிலும் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் பெறுகிறது. ஆனால் முந்தையது (உடலுழைப்பு) சமூக அமைப்பின் அடியாழத்தில் வாடுகிறது. உழைப்புச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகம், உடலுழைப்பை மிகத் தீவிரமாகச் சுரண்டுகிறது, குறிப்பாக அடியாழத்தில் உள்ள உடலுழைப்பாளிகளை. எடுத்துக்காட்டாக ஒரு பொறியாளருக்கும் தொழிற்சாலைத் தொழிலாளிக்கும் இடையே கற்பனை செய்ய முடியாத அளவில் வருமானம், சுரண்டல், வாழ்வாதார வேறுபாடுகள் இருக்கும். பெரும்பாலான உயர்சாதி மக்கள் மன உழைப்பிலும் கீழ்சாதி மக்கள் உடலுழைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
சாதி அடிப்படையிலான சமூகங்களை "மூலதனத்தில் சிறியவை, மிகத் தொன்மையானவை" என்றழைத்த மார்க்ஸ் இந்த இந்தியப் பிரச்சனையை அடையாளம் கண்டார். எனினும் அவர் சாதிப் பிரச்சனைக்கு ஒரு உறுதியான தீர்வை வழங்கவில்லை.
இன்று மோடி அரசின்கீழ் நாடுதழுவிய தொழிலாளர் அமைதியின்மை, வேலைகளில்லா வளர்ச்சி, விண்ணைத் தொடும் வேலையில்லாத் திண்டாட்டம், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கிடையே ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கியுள்ள தாராளமயக் கொள்கைகளை விரைவாக கட்டவிழ்த்துவிடல் ஆகியன நிலவுகின்றன. நாட்டின் செல்வத்தில் 73 சதவிகிதம், வெறும் 1% மட்டுமே உள்ள பெரும்பணக்காரர்களிடம் உள்ளது. முதலாளித்துவத்தின் முரண்பாடு மற்றும் நெருக்கடியைப் பற்றிய கார்ல் மார்க்சின் கோட்பாடு, இந்திய ஜனநாயகத்துக்கு சாலப் பொருந்துவதை நாம் உணரவேண்டாமா? சாதி அடிப்படையிலான தொழிலாளர் நியமனம், மார்க்சின் தொழில் கோட்பாட்டுக்கு ஒரு சேர்க்கை. ஆனால் சாதி அடையாளம் ஒரு தீர்க்கமான காரணியாக உள்ள இந்திய சூழலின் படி மார்க்சின் கோட்பாட்டை மாற்றியமைப்பது நமது பொறுப்பல்லவா?
\r\nஇது செய்யப்படவில்லையென்றால் நம் மக்களுக்கு அநீதி இழைத்ததாகிவிடும்.
அரசியல்ரீதியாக இந்தியாவுக்கு (பரிசோதனையின் மூலம் விரிவான ஆய்வை வேண்டுகிற) வலுவான ஆக்க நலக்கொள்கை (welfarism) தேவைப்படுகிறது. இந்தியாவில் முதன் முறையாக, கம்யூனிஸ்டுகளுக்கும் அம்பேத்கரியர்களுக்கும் இடையே ஒரு கூட்டணி நிகழ்ந்துள்ளது. ஒடுக்கப்பட்டோருக்கான புதிய அரசியல் இடத்தை பகுஜன் இடது முன்னணி (BLF) உருவாக்கி வருகிறது. ஏகபோக முதலாளித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ உறவுகளைக் கொண்ட இந்திய சமுதாயம் ஒரு புரட்சியைக் கண்டிராமையால், இந்த அணுகுமுறை மார்க்ஸ் மற்றும் அம்பேத்கர் பற்றிய புரிதலை ஒருங்கிணைக்கிறது. மார்க்சின் வர்க்க ஒழிப்புக் கோட்பாடும் அம்பேத்கரின் சாதி ஒழிப்புக் கோட்பாடும் ஒன்றிணைக்கப்பட்டு இந்திய மக்களை விடுவிப்பதற்காக உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இந்திய இடதுசாரிகள் நேபாள கம்யூனிஸ்டுகளைப் போலவே பரந்த மட்டத்தில் இந்த புரிதலை வடிவமைக்கும் பட்சத்தில் , அம்பேத்கரிய சமூக பொருளாதார சீர்திருத்தத்துடன் மார்க்சிய ஆக்க நலக்கொள்கையை இணைப்பதன் வழியான சில தீவிர முன்னேற்றங்கள் உருவாகும். எளிமையாகக் கூறுவதென்றால் இப் பார்வை, சாதியற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கிலான வர்க்க ஒழிப்பு- சாதி ஒழிப்பு இணைவின் நீட்டிப்பாக இருக்கும்.
முதலாளித்துவமானது அடிப்படையில் மிக மோசமான சமத்துவமின்மையை அடித்தளமாகக் கொண்டுள்ளதால் மார்க்ஸ், இன்றும் பொருத்தமானவராக விளங்குகிறார். இந்தியக் சூழலில் சோஷலிசத்தால் வர்க்க- சாதிப் பிரச்சினைகளுக்கு விடைகாண முடியும். சமத்துவமின்மையின் அடிப்படையிலான எந்தவொரு சமூக ஒழுங்கையும் நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. லெனின், மாவோ, ஹோ சின் மின், காஸ்ட்ரோ போன்ற மார்க்சியப் புரட்சியாளர்கள், அவர்கள் மேற்கொண்ட புரட்சிகளின் தேவைகளுக்கேற்ப மார்க்சின் கருத்துக்களைத் தகவமைத்துக் கொண்டனர் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய ச் சூழல்களுக்கும் இது பொருந்தும். மார்க்சியம் அல்லது அறிவியல்சார் சோசலிசம், இடம் மற்றும் சூழலுக்கேற்ப பயன்பாட்டில் மாறுதலைக் கோரும் சக்தியாக உள்ளதால் மார்க்சியக் கொள்கைகளின் பயன்பாடு எல்லா இடங்களிலும் ஒரேமாதிரியாக இருக்கமுடியாது. இந்த நம்பிக்கையுடன் நாம் சமத்துவச் சமூகம் பற்றிய மார்க்சின் கனவை நனவாக்க விழைவோம்.
நன்றி https://mronline.org/2018/05/18/200-years-later-why-marx-remains-relevant-in-an-indian-context/
\r\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Leave Comments