வீடுகளை - விளை நிலங்களை அழித்து பெட்ரோலியக் குழாய் பதிக்கும் திட்டத்தைக் கைவிடு!

/files/detail1.png

வீடுகளை - விளை நிலங்களை அழித்து பெட்ரோலியக் குழாய் பதிக்கும் திட்டத்தைக் கைவிடு!

  • 0
  • 0

 

கிருட்டிணகிரி மாவட்டத்தில், வீடுகளை - விளை நிலங்களை அழித்து பெட்ரோலியக் குழாய் பதிக்கும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும் என்று தமிழக உழவர் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் தேவனகுந்திக்கு பெட்ரோல் கொண்டு செல்வதற்காக, கிருட்டிணகிரி மாவட்டத்தின் இருகூர் வழியாக பெட்ரோலியக் குழாய்ப் பதிப்புத் திட்டத்தை இந்திய அரசின் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது.

கேரளாவில் செயல்படுத்துவதைப்போல் சாலை வழியாக பெட்ரோலியக் குழாய்களைக் கொண்டு செல்லாமல், தமிழ்நாட்டில் மட்டும் வீடுகள் - விளைநிலங்கள் வழியாகச் செல்லும் இந்த பெட்ரோலியக் குழாய்கள் உழவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் அழித்துவிடும். இதைச் சுட்டிக்காட்டியும் இத்திட்டத்திற்குத் தங்கள் நிலங்களைத் தர மாட்டோம் எனத் தெரிவித்தும் தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தூ. தூருவாசன் தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 13) காலை கிருட்டிணகிரி மாவட்டத் துணை ஆட்சியர் திரு. ஆர். புஷ்பா அவர்களை நேரில் சந்தித்து உழவர்கள் முறையிட்டனர். த.உ.மு. ஆலோசகர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

கிருட்டிணகிரி மாவட்டத்தின் ஒடையாண்டஹள்ளி, எச்சனஹள்ளி, எதிர்கோட்டை, இராயக்கோட்டை, பழையூர், நெல்லூர், சஜ்ஜலப்பட்டி, பிள்ளாரிஅக்ரகாரம், கொப்பக்கரை, கோனேரி அக்ரகாரம், லிங்கனம்பட்டி, நடுக்காலம்பட்டி, கடவரஅள்ளி, பண்டப்பட்டி, பந்தாரப்பட்டி, சின்னபண்டப்பட்டி, அயர்னப்பள்ளி, ஆலமரத்துக்கொட்டாய், கொடகாரலஅள்ளி, சீபம், துப்புகானப்பள்ளி, உள்ளிட்ட உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த உழவர்கள் இதில் பங்கேற்று மனு அளித்தனர்.
 

Leave Comments

Comments (0)