மக்களுக்கான தலைவர் யார் ?

/files/political-2021-03-05-10:52:02.jpg

மக்களுக்கான தலைவர் யார் ?

  • 16
  • 0

செல்வமணி.T

தேர்தல் ஆணையம் வருகிற 2021 க்கான சட்ட தேர்தல் தேதியை  அறிவித்துள்ளார்கள் , ஏப்ரல் 6யில் ஒட்டுப் பதிவும் ,மே 4 ஓட்டு எண்ணிக்கையும் என்கிற செய்தி தான் அலுவலகம் ,வீடு ,கல்லூரி ,டீ கடை ,சாலை என எங்கும் எதிலும் தேர்தல் பற்றிய பேச்சு தான் .

இத்தனை நாள் எங்கு இருந்தார்கள் என்றே தெரியவில்லை பல காட்சிகள் ,அவைகள் காட்சிகளோ என்று கூட தெரியவில்லை திடீரென புற்றீசல் போல் முளைத்து எனக்கு இத்தனை சீட் உனக்கு அத்தனை சீட் என பேரம் நடந்து கொண்டு இருக்கிறது .

எங்கும் கூட்டணி பேச்சுவார்த்தை ,தொகுதி பங்கீடு செய்தி தாளை எடுத்தாலும் ,செய்தி சேனலை பார்த்தாலும் வருகிற சட்ட மன்ற தேர்தலை பற்றிதான் ,ஒருவகையில் இது தமிழகத்திற்கு மிக முக்கியமான தேர்தல் .

ஏனென்றால் காமராஜர் ,அண்ணா ,கலைஞர் ,ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் தமிழகத்தில் முதல்வராக இருந்தார்கள் ,மத்தியில் கூட்டாட்சி ,மாநிலத்தில் சுயாட்சி என்கிற முழக்கத்தை முன்னெடுத்து மத்திய அரசுக்கு அடிமை பட்டு கிடைக்காமல் ,இந்தியாவுக்கே முன்னோடியாக ,மாநில முதல்வர்கள் எப்படி சுதந்திரமாக நடந்து கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்தி காட்டிய வாத்தியார்களாக திகழ்ந்த முதல்வர்களை பார்த்த தமிழகம் தற்போது மத்திய மோடி அரசின் தலையாட்டி பொம்மையாக செயல்பட்டு ,மன்னியுங்கள் செயலிழந்து இருக்கிறார்கள் என்பதை இந்த நாடே பார்த்து நகைத்து வருகிறது .

ஆக இந்த தேர்தல் முடிவு தான் மாநிலத்தின் சுயமரியாதையை சோதித்து பார்க்கப் போகிறது .

ஆனால் இந்த  தேர்தல்கள் மட்டும் தான் அரசியலா ? ஒட்டு பேரம் ,தொகுதி பேரம் ,கட்சி பேரம் எல்லாம் நடக்கிறதே இது தான் ஜனநாயகமா ?

ஒரு கட்சியின் தலைவர் அரசு வேலையை விட்டு விட்டு ,தனது சுய வாழ்வை துறந்து,ஒடுக்கப்படும் மக்களுக்காக கட்சி ஆரம்பித்து  கடந்த 25 வருடங்களுக்கு மேலாக ஓய்வறியாது தினம் பல போராட்ட களங்களில் களமாடுகிறார் .கடந்த ஒரு வருடத்தில் அவர் தலைமையில் நடந்த போராட்டங்கள் 


சனவரி 01, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கோளமிட்டு முதல் களம் அமைத்த தலைவர்.


பிப்ரவரி 22, குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து தேசம் காப்போம் பேரணி.


மார்ச் 03, தலைநகர் டெல்லியில் மதவெறியாட்டம் இசுலாமியர்கள் படுகொலையை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்.


மார்ச் 04, தலைநகர் டெல்லியில் புரட்சியாளர் அம்பேத்கர் இயங்கங்களின் சார்பில் சலோ டெல்லி பேரணி.


மார்ச் 08, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு - சமூகநீதி பாதுகாப்பு மாநாடு 


மார்ச் 14, கோவை மேட்டுப்பாளையம் தீண்டாமை சுவரில் உயிர் பலியானவர்களுக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்.


ஏப்ரல் 22, மருத்துவர்களுக்கு உரிய பாதிகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி மெழுகுவர்த்தி ஏந்து ஆர்ப்பாட்டம்.


மே 05, தமிழக மதுக்கடைகளை திறப்பதை கண்டித்து வாசலிருப்பு ஆர்ப்பாட்டம்.


மே 16, பெண்கள் சிறுமிகளுக்கு மீதான வன்கொடுமையை கண்டித்தும், சிறுமதுரை சிறுமி ஜெயஸ்ரீ-க்கு நீதிகேட்டு கண்டன வாசலிருப்பு ஆர்ப்பாட்டம் 


மே 17, முள்ளிவாய்க்கால் நினைவு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு.


மே 31, தமிழகம் தழுவிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க கோரி வாசலிருப்பு ஆர்ப்பாட்டம்.


சூன் 08, மருத்துவக் கல்வியில் ஒபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்காக மத்திய அரசை கண்டித்து மாவட்டந்தோறும் கண்டன ஆர்ப்பாட்டம்.


சூலை 08, பெண்கள் - சிறுமிகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் வாசலிருப்பு ஆர்ப்பாட்டம்.


சூலை 09, சமூக நீதிக்கு எதிரான கிரிமி லேயர் முறையை கைவிடக் கோரி சூம் செயலி மூலம் கண்டன ஆர்ப்பாட்டம்.


ஆகத்து 10, அக்கா வான்மதி அவர்களுக்கு இணைய வழி இரங்கல் கூட்டம்.


ஆகத்து 12, தலித் - பழங்குடியினர் ஊராட்சிமன்றத் தலைவர்கள் இணைய  மாநாட்டில் தலைவர் எழுச்சித்தமிழர் தொடக்கவுரை.


ஆகத்து 21, கேரளா மூணார் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரை நேரில் சென்று ஆறுதல்.


ஆகத்து 22, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தலைவர் வைகோ அவர்களின் சட்ட போராட்டமும் மக்கள் போராட்டமும் இணையவழியாக தலைவர் எழுச்சித்தமிழர்  சிறப்புரையாற்றினார்கள்.
ஆகத்து 24, தமிழகத்தில் மத்திய அரசுப்பணியில் தமிழக அரசு வேலை தமிழர்களுக்கே என்ற கோரிக்கையோடு வாசலிருப்பு ஆர்ப்பாட்டம்.


ஆகத்து 31, நீட் தேர்வை முற்றிலுமாக நிறுத்தக் கோரி முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் இணையவழி ஆர்ப்பாட்டம்.


ஆகத்து 31, அருந்ததியர் உள்ஒதுக்கீடு தீர்ப்பும் தீர்வும் இணையவழி கருத்தரங்கில் தலைவர் எழுச்சித்தமிழர் சிறப்புரை.


செப்டம்பர் 17, பன்னாட்டு பெரியார் கூட்டமைப்பு சார்பில் இணையவழிக் கருத்தரங்கம்.


செப்டம்பர் 28, கடலூரில் வேளாண் சட்டத்தை திரும்ப பெறக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


அக்டோபர் 02, உபி-யில் மனிஷா பாலியல் பலாத்காரம் செய்து தொடரும் வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.


அக்டோபர் 16, புதுவையில், வங்கி அதிகாரிகளுக்கான தேர்வை மத்திய அரசு இரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர் எழுச்சித்தமிழர்  கலந்து கொண்டார்கள்.


அக்டோபர் 24, காலம் காலமாக பெண்களை இழிவு செய்யும் மனு நூலை தடை செய்யக் கோரி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்.


அக்டோபர் 28, எஸ்.சி - எஸ்.டி. - ஓபிசிக்கான மருத்துவக்கல்வியில் 50% நடப்பாண்டே தரக்கோரி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்.


அக்டோபர் 31, தமிழகத்தில் சாதிவெறியை தூண்டும் சனாதனக் கும்பலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.


நவம்பர் 03 - 05 வரை மகளிர் மீட்சி மக்கள் எழுச்சி கருத்து பரப்பியக்கம்.


நவம்பர் 27 மாவீரர் தினம் வீரவணக்கம் தின இணையவழிக் கூட்டம்.


திசம்பர் 07, எஸ்.சி - எஸ்.டி போஸ்ட் மெட்ரிக் காலெர்சிப் திட்டத்தை நிறுத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.


திசம்பர் 10 வேளாண் சட்டத்தை திரும்ப பெறக் கோரி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்.


திசம்பர் 14 அதானி அம்பானி பொருட்களை புறக்கணிக்கும் ஆர்ப்பாட்டம்.


திசம்பர் 18, சென்னையில் விவசாய திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர்  ஆர்ப்பாட்டம்.


திசம்பர் 23, கிருத்துவ சமூக நீதி பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா.


திசம்பர் 24, சமூகநீதிக்கான கி.வீரமணி விருது.


திசம்பர் 25, மனு சட்டமும் - அம்பேத்கர் சட்டமும் கருத்தரங்கம். வெண்மணி போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வு.


திசம்பர் 26, விருது வழங்கும் விழா.


திசம்பர் 30, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5000 குடும்பங்களுக்கு முதல்கட்டமாக 5 கிலோ அரசி நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்..!


( இவைகள் தலைவர் தலைமையில் நடைபெற்றவைகள் மட்டுமே... கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டம், ஆர்ப்பாட்டம்.... வேறு)


இப்படியான தலைவர்களும் நம்மோடு நம் தமிழத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் .

அந்த தலைவரின் பெயர் டாக்டர் தொல் .திருமாவளவன் .

தனி நபர் புகழ் பாடும் பதிவல்ல இது ,இதை அவரும் விரும்ப மாட்டார் ,அணியமாக்குங்கள் ,அமைப்பாய் திரளுங்கள் என்று மக்கள் சக்தியை ஒருங்கிணைக்கும் ,வழிநடத்தும் பணியை தான் செய்து வருகிறார் .நல்ல தலைவர் இல்லை ,நல்ல தலைவர் இருந்தால் நாங்கள் நிச்சயம் அவருக்கு வாக்களிப்போம் என்று பேசும் நடுநிலையாளர் கண்களுக்கு இவர் தெரிய மாட்டார் ஏனென்றால் சாதி என்னும் கொடிய அழுக்கு படிந்த ,நாற்றமடிக்கும் கண்ணாடியை அணிந்து கொண்டு இவரை பார்க்கிறார்கள் ,கடந்த தேர்தலில் இவர் எப்படி வென்றார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.


25 வருடங்களுக்கு மேலாக சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக ,மருத்துவர்கள் ,மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,அரசாங்க ஊழியர்கள் ,விவசாயிகள் ,தமிழக பிரச்சனைகள் ,தமிழ் ஈழ பிரச்சனைகள் ,இந்திய பிரச்சனைகள் என அனைத்திற்கும் முதல் ஆளாக நிற்கும் இவருக்கும் ,இவர் கட்சிக்கும் தேர்தலிலும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை ,மக்களிடமும் இன்னும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை ,


இவற்றையெல்லாம் அவர் எதிர்பார்த்து நின்றிட மாட்டார் அவர் உடலில் உயிர் உள்ளவரை அவர் குரல் ஒடுக்கப்படும் ஒவ்வொரு மக்களுக்காகவும் ஒழித்து கொண்டே தான் இருக்கும் ,மனித குலத்திற்கு எதிரான பாசிச சக்திகளை எதிர்த்து தீவிரமாக போராடி கொண்டே இருப்பார் ,பலத்தை காட்டுகிறேன் ,என்று வீம்புக்கு ஓட்டை பிரிக்கும் தனித்து 234 தொகுதிகளும் நிற்ப்பேன் என்று நாடகம் நடத்திட மாட்டார் ,ஜனநாயகமே கூட்டாட்சி தான் கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் அனைவரின் குரலும் ஒலிக்கும் என்பதில் உறுதியாக இருப்பதோடு ! மட்டுமல்லாது அவரே அதற்க்கு முன்னெடுப்புகளையும் எடுப்பார் .அரசியல் என்பது வியாபாரமோ ? பார்ட் டைம் வேலையோ ,பணம் கொழிக்கும் தொழிலோ அல்ல ,அதில் வியாபாரமாக ,தொழிலாக என்னும் பலர் தங்களது சீட்டுகளை பேரம் பேசி வாங்கி விட்டு நிம்மதியாக வீட்டில்  உறங்கி கொண்டு இருக்கும் தருணம் ,நாளை எந்த மக்களுக்காக எங்கு போராட்டம் நடத்த வேண்டும் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார் .

Leave Comments

Comments (0)