கொரோனா மரணங்களும் கையாலாகாத அரசுகளும் !
April 18, 2021 - selvamani T
April 20, 2021,7:26:31 PM
தவ.செல்வமணி
வருகிற 6 ஆம் தேதி தமிழக சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.ஐந்து ஆண்டுகள் என்னவெல்லாம் நடந்தது,எத்தனை அநீதிகள் அரங்கேறியது,ஆளும் அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என எல்லாவற்றையும் அடியோடு மனதில் இருந்து அழித்து விட்டு கூகுள் பேயிலும்,அக்கவுண்டிலும்,கையிலும் வாங்கிய பணத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்கிற உன்னத வாக்காளர்களே கொஞ்சம் பின்னோக்கி பாருங்கள்!
கடந்த ஐந்து ஆண்டுகள் தமிழத்தை ஆட்சி செய்தது அதிமுக அரசு, முதல் வருடம் மட்டுமே ஜெயலலிதா அவர்கள் ஆட்சி செய்யப்பட்டது அவர் மறைவுக்கு பின் ஒபிஸ்,அதன் பிறகு கடந்த 3 வருடங்களாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வராக நீடித்தார்.
கலைஞர்அவர்கள் மீதும் ஜெயலலிதா அவர்கள் மீதும் ஆயிரம் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவர்களின் இறுதி காலம் வரை மாநில சுயவுரிமையை கட்டி காத்தனர் என்றே சொல்ல வேண்டும்.
இந்தியாவிலேயே ஒரு மாநில முதல்வர் தேசிய கொடியை ஏற்றலாம் என்பதை நடைமுறைக்கு கொண்டு வந்த முதல் மாநில முதல்வராக கலைஞர் அவர்களும்,பிரதமரே வீட்டிற்கு வந்து தமிழக பிரச்சனைகள் குறித்த அறிக்கையை வாங்கி சென்றார் ஜெயலலிதா அவர்களிடம் இருந்து இப்படியானா முதல்வர்களின் மறைவுக்கு பின் கூனி,குறுகி பிரதமரின் கைப்பாவையாகவே தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி அவர்களும்,தமிழக துணை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் அவர்களும் இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே அவர்கள் குனிந்து மட்டுமல்லாது தமிழத்தின் மாநில சுயவுரிமையையும் சேர்த்து குனிய வைத்தார்கள்,மத்திய ஆளும் அரசுக்கு அடகு வைத்தார்கள்.
ஒரு மாநிலத்தின் அடிப்படை பாதுகாப்பான மாநில சுயாட்சி பறிபோனது அதனோடு கூடிய அவலங்கள் எத்தனை எத்தனை !
இரண்டு நாட்களுக்கு முன்பு பன்னீர்செல்வம் அவர்கள் பேசுகிறார் ஜல்லிக்கட்டின் உண்மையான நாயகர் நரேந்திர மோடி என்று !
இளைஞர்கள்,மாணவர்கள் ,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள்,கர்ப்பிணிகள் என ஒட்டு மொத்த தமிழக மக்களும் சாதி,மதம் கடந்து ஒரு மாதத்திற்கு மேலாக போராடினார்கள்,வெயிலிலும், கடும் பனியிலும் இரவு பகல்பாராமல் போராடினார்கள்,உலக நாடுகளே பேசும் விதமாக நடந்திட்ட அந்த போராட்டத்தை பற்றி வாய் திறக்காதவர் தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
ஜல்லிக்கட்டிற்காக போராடிய இளைஞர்களை காவல்துறை தடியடி நடத்தியது,தடுக்க சென்ற மீனவர்களையும் கொடூரமாக தாக்கியது இந்த அநீதிகளை ஏவியது யார் என்றால் பீட்டா எனும் கார்ப்பரேட் பெரு நிறுவனமும் அதன் கைக்கூலிகள் மத்திய மோடி அரசும் அவரின் கைப்பாவை ஒபிஸ் அவர்களும் தான்.
ஸ்டெர்லைட் எனும் நச்சு ஆலையை மூடுங்கள் அல்லது எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள் என்று கையில் பதாகை ஏந்தி சிறுவர்கள் போராடினார்கள்,வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்து தூத்துக்குடியில் இலட்சக்கணக்கான மக்கள் அமைதி வழியில் போராடினார்கள்,மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றனர் காவல்துறையே தீயை பற்ற வைத்து கலவரத்தை தூண்டி 14 அப்பாவிகளை சுட்டுக் கொன்றது அவர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்க வில்லை,இந்த கொடூரத்துக்கு காரணமாக இருந்தார்கள் யாரெல்லாம் என்று உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா ?
வேதாந்த நிறுவனம்,நரேந்திர மோடி ,எடப்பாடி பழனிசாமி இவர்கள் தான்.
பொள்ளாச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் 250க்கும் மேற்பட்டோரை மிரட்டி வன்புணர்வு செய்து அதை காணொளியாக எடுத்து பாலியல் பயங்கரத்தை நடத்திய அந்த குற்றவாளிகளுக்கு இன்று வரை தண்டனை கிடைக்கவில்லை அந்த பிரச்னையை பெரிது படுத்தாதீர்கள் என பேசியவர்கள் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரமுகர்களும்,அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் தான்.
தனது தாயை இழிவு படுத்தி விட்டார்கள் என கண்ணீர் விட்ட பழனிசாமி அவர்கள் 250 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நடந்த கொடூரத்தை மூடி மறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் எனும் பொது நுழைவு தேர்வை இந்தியா முழுவதும் கொண்டு வந்தார்கள் ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருக்கும் போது அந்த தேர்வை மத்திய அரசால் கொண்டு வரவே இயலவில்லை ஆனால் எடப்பாடி அவர்கள் மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை எதிர்க்காமல் அவரின் நலன் கருதி நீட்டை நடைமுறைப்படுத்த ஒத்துழைத்தார்,பல மாணவ மாணவிகள் நீட் எனும் அநீதி தேர்வினால் தற்கொலை செய்து கொண்டார்கள்,தற்போது நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் வாக்குறுதியை தந்துள்ளனர் அதிமுகவினர்.
சாத்தன்குளத்தில் தந்தையையும் ,மகனையும் கைது செய்து காவல்நிலையத்திலேயே போலீஸ் அதிகாரிகள் கொலை செய்தனர் அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தான் இதுவரை கொலை செய்த அந்த காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.
3,4,5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை வைக்கும் புதிய கல்வி கொள்கை,மீனவர்களின் வாழ்வாதாரத்தை கொள்ளை அடிக்க போகும் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகம்,விளை நிலங்களை அழிக்கும் எட்டு வழி சாலை,இஸ்லாமியர்கள்களை கொன்ற கும்பல்கள் கொலைகள்,இந்தியா முழுவதும் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான கொடுமைகள் கொலைகள் என எந்த ஒன்றுக்கும் நியாயம் கேட்காது இத்தனை அநீதிகளுக்கு துணை நின்றவர்கள் தான் பிஜேபி ,அதிமுக ,பாமக மற்றும் அந்த கூட்டணி காட்சிகள்.
ஒரு தேர்வுக்கு செல்வதென்றால் பேனா,பென்சில்,ஸ்கெல்,ரப்பர் என்கிற தேர்வுக்கு அத்தியாவசியமான பொருட்கள் அவசியம்,அப்படி தேர்தலுக்கு செல்லும் போது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை எடுத்து செல்வதோடு மட்டுமல்லாது,கடந்த 5 ஆண்டுகளில் நடந்த அக்கிரமங்களையும் மனதில் எடுத்துக் கொண்டு தேர்தலுக்கு செல்லுங்கள்.அனைவரும் வாக்களியுங்கள் அது சனநாயக கடமை.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Leave Comments