தமிழ்த்தேசியம் மறந்த தமிழரசன் !

/files/A1-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-2021-04-16-13:32:38.jpg

தமிழ்த்தேசியம் மறந்த தமிழரசன் !

  • 7
  • 0

தவ.செல்வமணி


நேற்று (14-04-2021) பலர் பல விதங்களில் கொண்டாடினார்கள்,அதில் ஆக்கபூர்வமும் இருந்தது அறியாமையும் இருந்தது.


சனாதனம் என்னும் மானுடத்திற்கு எதிரான பதரை ஒழித்து சமத்துவம்,சமூக நீதி,சனநாயகம் காக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்து இந்திய தேசத்தில் பெரும் புரட்சியை விதைத்து பல கோடி மக்களின் விடுதலைக்கு வழிகோலிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.


மறுபுறம் தமிழ் பெயரே அல்லாத ஒரு ஆண்டின் பெயர் சொல்லி தமிழ் புத்தாண்டு கொண்டாடும் மக்கள் ஒருபுறம்.


இவ்வாறு இருக்க ஒரு மாபெரும் தமிழ் தேசிய தலைவர் ஒருவரை தமிழகம் மறந்து விட்டது,பொது மக்கள் மட்டுமல்ல,தமிழ் தேசியம் பேசும் குறிப்பாக நாங்கள் தான் தமிழ் உரிமையை மீட்க போகும் மீட்பர்களாக தங்களை கட்டிக்கொள்ளும்,தமிழ் தேசியத்திற்கு அத்தாரிட்டி வாங்கி வைத்து கொண்டிருக்கும் கட்சி தலைவர்கள் கூட வாய் திறக்க வில்லை.14.04.1945 யன்று பிறந்து 01.09.1987 அன்று அதிகார வர்க்கத்தினால் கொலை செய்யப்பட்டவர் தான் தோழர் தமிழரசன்.


தமிழ் தேசியம் என்றால் என்ன அந்த தமிழ்தேசியத்திற்க்கான கருத்துக்கள்,கோட்பாடுகள்,வரையறைகள்,அதன் திட்ட வடிவங்கள் என அனைத்தையும் உருவாக்கி அதற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர் தான் இந்த தமிழரசன்.


கூட்டக் குழு என்ற நக்சல்பாரி அமைப்பில் முக்கிய பொறுப்பு வகித்தார். 

வட தமிழகத்தில்  செயல்பட்ட  இந்த அமைப்பு சிறையில் இருந்து விடுதலையான ஏ எம் கோதண்டராமன் ஐ தங்கள் தலைவராக பின்பு ஏற்றுக் கொண்டது. 

இந்த அமைப்பும் கொண்ட பள்ளி சீத்தாராமைய்யா தலைமையிலான அமைப்பும் இணைந்தே மக்கள் யுத்தக் கட்சி இன்றைய மாவோயிஸ்ட் கட்சி உருவானது.


பின்பு கட்சியுடனான கருத்து வேறுபாடுகளால் வெளியேறியவர் ஆயுதப் போராட்டம் மூலம் தனித் தமிழ்நாடு அடைவதே உழைக்கும் மக்கள் மேல் இங்கு நிகழ்ந்து வரும் சுரண்டலுக்கு தீர்வு என்ற முடிவுக்கு வந்தார். நிலச் சீர்திருத்தம், பெரு நில உடமைகளை ஒழிப்பது, நீண்ட கால மக்கள் யுத்தம் ஆகிய நக்சல் பாரி கொள்கைகளை கைவிடவில்லை.மாவோயிஸ்ட் பாதை, பாட்டாளி வர்க்க அரசு, உழைக்கும் மக்களை கொள்ளை அடிப்பவர்கள் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்களாக இருந்தாலும் மக்கள் விரோதிகளே, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றில் சமரசம் அற்றவராக இருந்தார். 


தமிழ்நாடு விடுதலைக்காக தமிழர் விடுதலை படை என்னும் ஆயுதம் போராட்ட இயக்கத்தை கட்டமைத்தார்.


சாதி தான் தமிழர் விடுதலைக்கு முதல் முட்டுக்கட்டை அதன் ஆணி வேறான பார்ப்பனியத்தை ஒழிக்க வேண்டும் சமத்துவம் மலர வேண்டும் என்பதற்காக பொன்பரப்பில் சாதி ஒழிப்பு தமிழ் தேசிய மாநாட்டை நடத்திக்காட்டினார்,அதில் சாதியை ஒழிக்கும் வழிமுறையை ஆய்வு கட்டுரைகளாக வெளியிட்டார்.


சாதி ஒழிப்பு தான் தமிழ் தேசியத்திற்க்கான முதன்மை வழி என்று குரல் எழுப்பினார்.


பொறியியல் படிப்பை படித்த தமிழரசன் அவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள் போல் ஒரு சுகபோக வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம்.


ஆனால் அவரோ மக்களுக்கான போராட்ட வாழ்வை விரும்பி ஏற்றார். அதனாலேயே அவர் அடித்துக் கொல்லப்பட்டார்.தன் உயிர் பிரியும் அந்த இறுதிக் கணத்தில்கூட அவர் மக்களை நேசித்தார். அதனாலேயே அவர் தன் கையில் இருந்த ஆயுதங்களை பயன்படுத்தாமல் மௌனித்தார்.


அவர் விரும்பியிருந்தால் கையில் இருந்த கிரினைட் குண்டை வீசி தப்பிச் சென்றிருக்க முடியும்.


அவர் நினைத்திருந்தால் கையில் இருந்த சப் மிசின்கன் மூலம் பலரை சுட்டுக் கொன்றிருக்க முடியும்.

தன் இறுதிக்கணம்வரை மக்களை நேசித்த அந்த தமிழரசனை மறந்தார்களா! இல்லை திட்டமிடப்பட்டு மறைத்தார்களா!


இந்த அளவிற்கு உண்மையான,உறுதியான தமிழ் தேசிய தலைவராக தமிழ்நாடு விடுதலை படை கட்ட்டமைத்து போராடிய ஒருவரை பற்றி தமிழ் தேசிய கட்சிகள் கொண்டாடுகிறதா !


ஏன் தமிழன் என் பாட்டன் முப்பாட்டன் என் தம்பி மாமா மச்சான் என்று கூப்பாடு போடும் தோழர் சீமான் அவர்கள் ஏன் இவரை பற்றி பேசுவதில்லை !தமிழ் மக்களை கொன்று குவித்த,தமிழ் பெண்களை வன்புணர்ந்த இந்திய இராணுவத்தை வரவேற்ற ம.பொ.சி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் சீமான் தோழர் தமிழரசனை பற்றி பேசாதிருப்பது ஏன் ஏனெனில் அவர் பேசுவது தமிழ்தேசியமே அல்ல அது போலி.


சாதி ஓட்டு வாங்குவதற்கு சாதி சார்பிலான தலைவர்கள் அல்லது இவராக சாதி சார்பு என்று வாக்குக்காக தமிழ் தேசியத்திற்க்கே எதிரான பலரை கொண்டாடும் இவர்கள் உண்மையான சாதி ஒழிப்பு தமிழ் தேசியத்தை பேசியவாறு மறைப்பது என்பது அப்பட்டமான குற்றமே.


உண்மையை மறைப்பதற்கு பெயர் போலி தானே !


இந்த தமிழ் உலகில் வன்னியர் சமூக வாக்குகளாலேயே அரசியல் நடத்தும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்கள் கூட அவரை பற்றி பேசுவதில்லை,அவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் !


ஏனெனில் அவர் சாதி ஒழிப்பு தமிழ் தேசியம் பேசியவர்.தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களே பார்க்க ஆசைப்பட்ட ஒரு போராளி என்றால் அவர் தோழர் தமிழரசன் மட்டும் தான்.


அம்பேத்கர்,பெரியார்,மார்க்ஸ் கொள்கைகளை மக்களிடம் காந்திரமாக கொண்டு செல்ல களமாடியவர்.


என்னும் தமிழ் தேசியம் என்ற விதை விழுந்ததற்கு காரணம் தோழர் தமிழரசன் தான் அவருடைய மீன்சுருட்டி மாநாட்டு அறிக்கை ' சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் என்பதை பலமுறை படித்தேன் அதை ஒவ்வொரு வரும் படிக்க வேண்டும் என்று கூறிய டாக்டர் திருமாவளவன் அவர்கள் இதுவரை 1000 துக்கும் மேற்பட்ட குழ்நதைகளுக்கு தோழர் தமிழரசன் நினைவாக அவரின் பெயரை சூட்டியுள்ளார்.அவரை பற்றி சம காலத்தில் பேசக்கூடிய ஒரு அரசியல் தலைவராக இருப்பவரும் அவரே!தமிழ் நாடு விடுதலைக்கு போராடி உயிர்நீத்த தோழர் தமிழரசன் அவர்களுக்கு நன்றி கூறுவது நம் கடமை அதனுடனே அவரை மறைக்கும் அதிகார வர்க்கத்தின் அடிவருடிகளை தெரிந்து கொள்வதும் மிக முக்கியமான ஒன்றே !

Leave Comments

Comments (0)