புதுச்சேரியில் பாலியல் பயங்கரம்! மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்!

/files/child-2020-11-17-18:49:14.jpg

புதுச்சேரியில் பாலியல் பயங்கரம்! மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்!

  • 15
  • 0

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் எடுக்கப்பட்டு மிரட்டி மீண்டும், மீண்டும் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கொடூரத்தை செய்த குற்றவாளிகளுக்கு இன்றுவரை எந்த தண்டனையும், தீர்ப்பும் வழங்கப்படாத நிலையில் அதேபோன்று புதுச்சேரியில் பண்ணை வீட்டில் 5 சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது...


புதுச்சேரியில் உள்ள கீழ் சாத்தமங்களம், பகுதியில் கன்னியப்பன் என்பவர் நடத்தும் வாத்து பண்ணையில் காஞ்சிபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட இருளர் சமூகத்தைச் சார்ந்த சிறுமிகள் வாத்து மேய்க்கும் வேலைக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களை கொத்தடிமைகளாக நடத்தி வந்ததாக புகார் எழுந்ததன் பேரில் அங்கு குழந்தை நல வாரிய அதிகாரிகள் சென்று விசாரித்துள்ளனர். அப்போது அதிர்ச்சி தரும் விதமாக அந்த 5 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு, வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்பதும், அதில் ஒரு 13 வயது சிறுமி கருவுற்று இருப்பதாகவும், மற்ற சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பிறகே உண்மைகள் தெரியவரும் என்றும் தெரியவந்துள்ளதுனர். சரியாக உணவு கூட வழங்காமல், எலும்புத் துண்டுகளைக் கொடுத்து சூடு வைத்து, மிளகாய் பொடி தூவியும், சொல்ல முடியாத வார்த்தைகளை சொல்லி பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


அந்த சிறுமிகளை குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் இந்த தகவலை காவல்துறையிடம் தெரிவித்தவுடன் அவர்கள் விசாரணையை மேற்கொண்டனர். போதை பொருட்களை கொடுத்து இரண்டு வருடமாக அந்த சிறுமிகளை கொடுமை படுத்தியது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாது அதில் மூன்று சிறுமிகளின் தாய் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார், அவரின் சடலம் நல்லவாடு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்ணியப்பன் உள்பட 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளது தலைமறைவான அய்யனார் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 5 வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள செங்கல் சூளை, செம்மறி ஆட்டு பண்ணை, வாத்துப் பண்ணை மற்றும் பண்ணை வீடுகளில் இதுபோன்று குழந்தைகளை வேலைக்கு ஈடுபடுத்தி வந்தாலும் குழந்தைகளுக்கு ஏதேனும் கொடுமைகள் நிகழ்ந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று புதுச்சேரி கட்டுப்பாட்டுத் துறையின் இலவச எண்ணான 100, 112, 1031 இந்த எங்களுக்கு அழைத்து புகார் கொடுக்குமாறும் அவர்களின் பெயர் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் புதுச்சேரி காவல்துறை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இப்படி புதுச்சேரியில் நடந்த நடவடிக்கைகள் இருக்க, நம் தமிழகத்தில் நடந்த அவலத்தை பார்ப்போம், சரியாக ஒரு ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சியில் 273 க்கும் மேற்பட்ட பெண்களை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இதை செய்தியாளர் நக்கீரன் கோபால் அவர்கள் காணொளி ஆதாரத்துடன் செய்தியாக வெளியிட்டார், அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதன் பிறகு நடந்தது என்னவோ செய்தி வெளியிட்ட அவரின் கைது தான். இந்த காணொளி வெளியான பிறகு பெண்கள் தைரியமாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்கள், தாங்கள் பாதிக்கப்பட்டதையும் தெரிவித்தார்கள். வழக்கை வாபஸ் பெறக்கோரி பல பெண்கள் மிரட்டப்பட்டு உள்ளார்கள்,புகார் அளிக்கச் சென்ற பெண்ணை காவலர் அலட்சியப்படுத்தியதாக அந்தப்பெண்ணே தொலைக்காட்சியில் பேட்டி அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய பிறகு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது, பல கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தினார்கள், மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தினர் அவர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்தது. திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார், மணிகண்டன், பார் நாகராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 4 நான்கு பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் திருமா அவர்கள் போராட்டம் செய்தார், தமிழக அரசு சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றியது, இப்போது இந்த வழக்கு சிபிஐ ஆள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தகுந்த ஆதாரம் இல்லை என்று கூறி உயர்நீதிமன்றம் இவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீக்கியது. இந்த சம்பவத்திற்கு எந்த தண்டனையும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. 


மறதி ஒரு தேசிய வியாதி என்பதைப்போல இந்த கொடூர சம்பவம் மக்களால் மறக்கப்பட்டது. இதற்கு நீதி? பணத்தால், அதிகாரத்தால், ஆளும் கட்சியால் மறைக்கப்பட்டது. இதன் பின்னணியில் அதிமுக பிரமுகர்கள் பலர் இருப்பதாகவும் அவர்கள் இதில் நேரடியாக ஈடுபட்டதாகவும் பல செய்திகள் அப்போது வெளியாகின அவர்களை தப்ப வைப்பதற்காக இந்த நால்வர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேசப்பட்டது...


இப்படி பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து கொடுமைகளுக்கும் மூல காரணம் பெண்ணுக்கு எதிரான மதங்கள்தான். பௌத்தம் தவிர்த்து உலகில் உள்ள அனைத்து மதங்களும் பெண்ணை அடிமையாகவும், ஆணை விட கீழானவளாகவும், சாத்தான் என்றும் சித்தரிக்கிறது. வேதம், உபநிடதம், மனு அனைத்தும் பெண் ஆணுக்கு உரியவள் என்றும், ஆணுறுப்பே உயர்வானது என்றும், குழந்தை திருமணத்தை ஊக்குவித்தும், ஆணின் இச்சைக்காக படைக்கப்பட்டவள் பெண் என்றும் கூறும் ஆணாதிக்கத்தை விதைக்கும் மனுதர்மம், மதம் இப்படியான பிரிவுகள் நவநாகரிக உலகத்திலும் சமூகத்தில் உள்ள அனைவரின் மனதிலும் நீடிப்பது இதுபோன்ற பிரச்சனைகளுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. இதுமட்டுமல்லாது பல ஆபாச வலைதளங்கள் பெண்களை ஒரு போகப் பொருளாக காட்சிப்படுத்துவது, அடிமையாக சித்திரவதைக்கு உள்ளாக்குவது போன்றும் காமப்பொருளாக காட்டுவதே இவைகளுக்கு ஒரு முக்கியமான காரணம். பெண்ணுக்கு எதிரான மனநிலையை விதைக்கும் ஆபாச படங்களையும், ஆபாச புராணங்களையும், மனு தர்மங்களையும், மத புத்தகங்களையும் தடை செய்ய வேண்டும் . 


என்கவுண்டர், தூக்குதண்டனை இவைகள் மட்டுமே பிரச்சனைகளுக்கு தீர்வு ஆகிவிடாது. ஆந்திராவில் ஒரு பெண்ணை வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்த கும்பலை போலீசார் என்கவுண்டர் செய்தார்கள் அடுத்த சில நாட்களிலேயே தமிழகத்தில் ஒரு பெண் வன்புணரபட்டால். சட்டம் மற்றும் தண்டனை மட்டும் எந்த ஒரு பிரச்சனைக்கும் முழு தீர்வாகாது. சமூக மாற்றம் தான் இதற்க்கு முழுமையான தீர்வு. பெண்களை அங்கே போகாதே இங்கே போகாதே என்று சொல்லும் சமூகம் ஆண்களை கேள்வி கேட்பதே இல்லை, ஆண் என்றால் அப்படி தான் இருப்பான் என்கிற அகந்தை மனப்பான்மை அனைவர் மனதிலும் ஊறிக் கிடக்கிறது. பெண் ஒரு சக மனுஷி, தனக்கென உணர்வும் உயிரும் கொண்ட ஆண்களைப் போலவே அவளும் ஒரு சகபாலினம் என்கிற உணர்வு எப்போது இந்த சமூகக் கட்டமைப்பில் உள்ள அனைவரிடத்திலும் விதைக்கப்படுகிறதோ அப்போதுதான் இந்த அவலங்களுக்கு முடிவு வரும்...

Leave Comments

Comments (0)