சரஸ்வதி படுகொலை ! ஆண் மைய சமூகத்தின் அவலம் !

/files/A1-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-2021-04-18-11:23:13.jpg

சரஸ்வதி படுகொலை ! ஆண் மைய சமூகத்தின் அவலம் !

  • 23
  • 0

தவ.செல்வமணி


பெண் பாலினம் தான் உலகில் உயிர்களை சுமந்து பெற்றடுக்கக் கூடிய தன்மை பொருந்தியது.

எங்கும் எதிலும் எதற்கும் இந்த சமூகத்தின் மையம் பெண் தான்,யார் எந்த தவறினை இழைத்தாலும் அங்கே குற்றம் சுமதத்தப்படுவதும்,தண்டனைக்கு உரியவளாக கட்டமைக்கப்படுவதும் பெண் தான்,உலகில் எங்கு வன்முறை,கலவரங்கள்,இனப்படுகொலைகள் நடந்தாலும் அதில் பெரும்பான்மையாக பாதிக்கப்படுவது பெண்களும்,குழ்நதைகளும் தான்.

தெலுங்கானாவில் பிரணவ் என்கிற ஆணும் அம்ருதா என்கிற பெண்ணும் காதலித்து மணம் முடித்து கொண்டார்கள்,பிரணவ் பட்டியல் சாதியை சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் வீட்டில் இவர்களின் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை!


கடந்த 2019 ஆம் ஆண்டு பிரணவ்,அம்ருதா,பிரணவ் தாயார் மூவரும் அம்ருதா கருவுற்று இருப்பதால் மருத்துவமனைக்கு சென்றனர்,மருத்துவமனை பரிசோதனை முடிந்து மூவரும் வெளியே வந்த போது கர்ப்பிணி மனைவி மற்றும் தாயார் முன்பாகவே பிரணவ் வெட்டி கொலை செய்யப்படுகிறார்.புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் இடையவலசை கிராமத்தை சேர்ந்த சாவித்திரியும்,அதே மாவட்டம் தோப்புக்கொல்லை கிராமத்தை சேர்ந்த விவேக் என்கிற இளைஞரும் ஒருவரையொருவர் விரும்பியுள்ளனர்,பையன் மாற்று சாதி என்பதால் இவர்களின் திருமணத்துக்கு பெண் வீட்டார் தீவிரமான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்,கடந்த 11.06.2020 சாவித்திரியின் குடும்பத்தினரே கொலை செய்து ,எரித்துள்ளனர்.2019-ஆம் ஆண்டில் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் தம்மை காதலிக்க மறுத்த திலகவதி என்கிற பெண்ணை ,ஆகாஷ் என்பவன் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளான்.


விழுப்புரத்தில் நவீனா என்ற மாணவியை காதலிக்க மறுத்தததை காரணம் காட்டி ஒரு கயவனால்  உயிருடன் தீயிட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.


16-4-2021 அன்று உளுந்தூர் பேட்டை தேவியானந்தா புரத்தை சேர்ந்த சரஸ்வதி என்கிற பெண் காதலிக்க மறுப்பு தெரிவித்ததலால் ,ரங்கசாமி என்பவரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்!


இவ்வாறு ஒரு பெண் காதலித்தாலும் சரி,காதலிக்க மறுத்தாலும் சரி கொல்லப்பட்டு கொண்டே வருகிறாள்,அவள் விருப்பம் கொண்டு இணைந்து வாழ்ந்தால் அந்த பெண்ணின் குடும்பத்தாலே கொலை செய்யப்படுகிறாள்.


காதலை ஏற்க சொல்லி கட்டாயப்படுத்தும் ஆணிடம் எனக்கு விருப்பம் இல்லை என்றால் அந்த ஆதிக்க வெறி கொண்ட ஆணாலும் கொலை செய்யப்படுகிறாள்.


இது எதனால்! பெண்கள் கடவுள்கள்,புனிதர்கள்,என்று சொல்லும் சமூகம்,நதிகளின் காட்டை கடவுளை அனைத்தையும் பெண்ணாக பார்க்கும் இதே மண்ணில் பெண் ஏன் கொலை செய்யப்படுகிறாள்,அடிமையாக வாழ்கிறாள்,இழிவு படுத்தப்படுகிறாள்.


இவை அனைத்திற்கும் ஒற்றை காரணம் தான் பார்ப்பனியம் ,பார்ப்பனிய கட்டமைப்பை தாங்கிய மனுதர்ம சாஸ்திரமும்,அதன் மதமும் தான்.


பெண்கள் படிக்க கூடாது,பெண்கள் முக்காடு போட வேண்டும்,ஒரு பெண் ஆண்துணை இல்லாமல் வெளியே போகக்கூடாது,பெண்கள் வேலைக்கு செல்ல கூடாது,அவர்களின் மாதவிடாய் தீட்டு,மாதவிடாய் நேரத்தில் அவர்களை வீட்டை விட்டே ஒதுக்கி வைக்க வேண்டும் .இந்த பார்ப்பனியத்தின் தொடர்ச்சி தான் பெண்களை போக பொருளாக காட்சி படுத்தும்,நூறு ஆண்களுக்கு முன்பு பெண்களை ஆட விடுவது எப்படி மதுபானம் போதை பொருளோ அப்படி பெண்களையும் சினிமாவில் பாடல்களில் காட்டினார்கள்.


ஆணின் சொத்து ஆண் அடைந்து கொள்ள கூடிய பொருளாக பெண்கள் பாவிக்கப்படுகிறார்கள்.


மனித சமூகம் தோன்றிய  ஆரம்ப கட்டத்தில் பெண்கள் தான் அந்த சமூகத்தை,குடும்பத்தை வழிநடத்துபவர்களாகவும் வேட்டைஒயாடுபவர்களாகவும் இருந்துள்ளார்கள்,அப்படி பெண் வழி சமூகமாக இருந்த மனித ஆதி சமூகம் ஆணாதிக்கம் பெற்றது எப்போதும்.


பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த ஆசியா கண்டத்தினுள் பண்பாட்டு நாகரீக வளர்ச்சி பெற்ற திராவிட இனக்குழுவை அடிமை படுத்த வர்ணத்தை கொண்டு வருகிறார்கள்,அந்த சாத்திய வர்ணத்தை ஏற்க்கத்தவர்களை அவர்ணாஸ் என்கிறார்கள் அவர்கள்தான் பட்டியல் சமூக மக்கள்.


அப்படிதான் பெண்வழி சமூக கட்டமைப்பை உடைக்க பெண்களை தீட்டு என்று சொல்லி சடங்கு,சம்பரதாயங்களை பெண்களுக்கு எதிராக கொண்டு வந்து அவர்களை அடிமை படுத்துகிறார்கள்.


இப்படி இன்றும் பெண் அடிமையாக போக பொருளாக பார்க்கப்படுகிறாள்,கொலை செய்யப்படுகிறாள் என்றால் அதற்க்கு அடிப்படை காரணம் பெண்ணை இழிவு படுத்தும் பார்பனியமும்,மனுவும்.


இந்து மதம் மட்டுமல்ல பவுத்தம் தவிர்த்து மற்ற அணைத்து மத கோட்பாடுகளுமே பெண்களுக்கு எதிரானதே!


இந்து,கிறிஸ்துவம்,இஸ்லாத் எதுவென்றாலும் சரி அதில் மத குறு என்றால் அது ஆணால் மட்டும் தான் ஆக முடியும்.


பெண் இரண்டாம் தரமானவள்,ஆணுக்கு அடிமை தொழில் செய்ய படைக்கப்பட்டவள் தான் என்று குரானும்,பைபிளும்,பகவத் கீதையும்,மனுவும் சொல்கிறது.


இப்படி பெண்களுக்கு எதிரான இந்த மத கோட்பாடுகளை அந்த அறமற்ற கட்டமைப்பை உடைத்தால் தான் பெண் நிம்மதியாக இம்மண்ணில் வாழுவாள்,பெண் விடுதலை என்பது சாத்தியப்படும்.உளுந்தூர் பேட்டையை  சேர்ந்த சரஸ்வதி என்கிற பெண்ணை கொலை செய்த கொடூரன் ரங்கசாமி என்பவனுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.


எப்படி சாதியை கரணம் கட்டி நடத்தப்படும் கொலைகளுக்கு எதிராக ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் அமைக்கப்பட வேண்டுமோ ! அதைப்போல இந்த ஆணாதிக்க படுகொலைகளுக்கும் தனி சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.


சட்டத்தின் மூலம் மட்டுமே முழுமையான அறத்தை நிலைநாட்டிட முடியாது அது இந்த சமுகத்தின் கைகளில் தான் உள்ளது.


பெண் என்பவள் சக மனுஷி,சக உயிர் அவளுக்கென்று தனி உணர்வுகளும் உரிமைகளும் உள்ளது என்கிற புரிதலை,பார்வையை இந்த சமூகத்தில் கொண்டு வர அனைத்து முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்.


பெண்ணுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கும் பெற்றோர்கள் தங்களுடைய ஆண்பிள்ளைகளையும் திரும்பி பாருங்கள்,பெண் ஒரு சக மனுஷி என்கிற அடிப்படை புரிதலை ஏற்படுத்துங்கள்.


இனியும் இந்த மண்ணில் ஆண் ஆதிக்க வெறியில் பெண்கள் மாய வேண்டாம்.

Leave Comments

Comments (0)