கொரோனா மரணங்களும் கையாலாகாத அரசுகளும் !
April 18, 2021 - selvamani T
April 20, 2021,7:05:41 PM
தவ.செல்வமணி
தமிழக சட்ட மன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சிகளும் பல தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகின்றன,ஒவ்வொரு குறிப்பிட்ட துறைக்கென பிரத்தியேக ஏற்பாட்டுடன் பல விதங்களில்,பல விதமான சலுகைகளை வாரி வழங்கியுள்ளனர்.
ஆனால் ஒரு கட்சியுடைய தேர்தல் அறிக்கையானது அந்த கட்சியினுடைய வெற்றிக்கே வழிவகுக்க வேண்டும் ஆனால் ஒரு கட்சியினுடைய தேர்தல் அறிக்கையானது பெருத்த அதிர்ச்சியையும்,அக்கட்சிக்கே பாதகமாவும் அமைந்துள்ளது அதன் சாராம்சங்களை பார்ப்போம்!
ஹிந்தி கட்டாயம் :
இந்தியாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன பல மாநிலங்களில் பல விதமான மொழிகளை மக்கள் பேசி வருகிறார்கள்,ஒவ்வொரு மக்களுக்கும் தனித்தனியான தாய் மொழி உள்ளது,ஆனால் இந்த மொழியை தான் அனைவரும் கற்க வேண்டும்,என கட்டாய மாக்குவது என்பது பாசிச அடிமை முறையே ! தாய் மொழியை ,பண்பாட்டை சிதைக்கும் நடவடிக்கையே !
சென்னை யூனியன் பிரதேசம் :
சென்னை என்பது இந்தியாவிலேயே மிக முக்கியமான நகரமாகவும் தமிழகத்தின் தலைநகராகவும் உள்ளது.
எப்படி புதுச்சேரி ,கோவா போன்ற யூனியன் பிரதேசங்களை மத்திய பாரதிய ஜனதா அரசு கைப்பற்றியதோ அதே போலவே சென்னையையும் யூனியன் பிரதேசமாக மாற்றி கைப்பற்றவே முனையும் திட்டமே இது.
பசுவதை தடை சட்டம் :ஒரு மனிதன் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை அந்த மனிதன் தான் முடிவு செய்ய வேண்டும்,எந்த மதமோ,அரசோ,இயக்கமோ எதுவோ கட்டாய படுத்த கூடாது மாட்டுக்கறி உண்பது என்பது அவரவர் தனிநபர் உரிமை,இந்தியா தான் உலக அரங்கில் அதிக அளவில் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்கிறது இப்படி கார்ப்பரேட் நிறுவங்கள் கோடி கோடியாக குவிக்கும் மாட்டுக்கறி ஏற்றுமதியை தடுக்காமல் இஸ்லாமிய மக்களும்,பட்டியல் சமூக மக்களும் உணவாக பயன்படுத்தும்,அவர்களின் வாழ்வாதாரமான மாட்டுக்கறியை தடை செய்வது அவர்களின் மதவாதத்தையே காட்டுகிறது.
தக்ஷிண பிரதேசம்:
மெட்ராஸ் மாகாணம் என்று இருந்த பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் தமிழர்களின் தாய் மொழியிலேயே நம் மாநிலத்தின் பெயர் ஒழிக்க வேண்டும் என்று 50 நாளுக்கு மேலாக சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தார் அதன் பிறகு அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றினார் அப்படிப்பட்ட ஒரு பெயரை அழித்து புழக்கத்தில் இல்லாத,சமூக இழிவை விதைக்கும் சம்ஸ்கிருத மொழிக்கு பெயர் மாற்றுவேன் என்று சொல்வது எத்தகைய அநீதி!
நீட் கட்டாயம் :
இந்தியா முழுக்க ஒரே மொழி இல்லாதா போது,இந்தியா முழுக்க ஒரே கல்வி முறை இல்லாத போது இந்தியா முழுக்க ஒரே பொது நுழைவு தேர்வு என்பது எப்படி சாத்தியப்படும் ! சரியானதாக அறமாக இருக்கும் ஏற்கனவே நீட் மருத்துவ தேர்வினால் பல மாணவர்கள் தற்கொலை செய்த பிறகும் பல மாணவ அமைப்புகள்,காட்சிகள் போராட்டங்கள் நடத்தியும் 12 வருடங்களில் படித்து 12 வகுப்பிலும் பொது நுழைவு தேர்வை சந்தித்த பின்பும் ஒரு பொது நுழைவு தேர்வு என்பது சமூக நீதிக்க எதிரானது என பெரும் குரல்கள் எழுப்பிய பின்பும் அதை நடைமுறை படுத்துவோம் ! அதுவும் கட்டாயமாக என்பது எத்தகைய கொடூரம் !
3,5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு :
இந்த கல்விமுறையை மாணவர் சமூகத்துக்கு பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தும் நிலையில் 3 ஆம் வகுப்பு 5 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொது தேர்வு என்பது பெரும் அவலமே! அது அந்த சிறார்களை பெரும் மனஅழுத்தத்துக்கு ஆளாக்கும் !
வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை :
ஏற்கனவே இங்கு வேலைவாய்பினையும் ,தமிழக வேலை வாய்ப்புகளில் பல இடங்களை வெளி மாநிலத்தவருக்கு முறைகேடாக வழங்கிவரும் நிலையில் அதை இனி இவர்கள் சட்ட பூர்வமாகவே நடைமுறைப்படுத்துவார்கள் !
இப்படி பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளானது ஒவ்வொன்றும் தமிழக மக்களுக்கு எதிராகவும்,பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது,அவர்களின் வாக்குறுதிகளே அவர்கள் தோற்கடித்து விடும் என்றே மக்கள் பேசுகிறார்கள் !
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Leave Comments