ஊடகங்களை கட்டுபடுத்துவோம்!மிரட்டும் பேச்சு?

/files/1-2021-07-19-20:42:40.jpg

ஊடகங்களை கட்டுபடுத்துவோம்!மிரட்டும் பேச்சு?

  • 10
  • 0

தவ.செல்வமணி


சமீபத்தில் தமிழ் நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல் முருகன் அவர்கள் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார், அவருக்கு பிறகான மாநில தலைவர் யார் என்கிற கேள்விக்கு பதிலாக முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை அவர்களை தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. 


அவர் பிஜேபில் சேர்ந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை என்று குறிப்பிடத்தக்கது. அவர் மாநில தலைவராக பொறுப்பேற்றவுடன் திருப்பூரில் மக்கள் மத்தியில் பேசியது என்னவென்றால் ஊடகங்கள் அனைத்தும் பொய் செய்தியை வெளியிடுகிறார்கள், இன்னும் ஆறு மாதத்தில் அனைத்து ஊடகங்களை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து விடுவோம், நீங்கள் யாரும் கவலை பட வேண்டாம்  நம்முடைய எல். முருகன் அவர்கள் தான் ஒளிப்பரப்பு ஊடக அமைச்சராக ஆகியுள்ளார் எல்லா ஊடகங்களும் இனி அவருக்கு கீழே தான் வேளை செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார்.


ஊடகம் என்றால் அவர் என்னவென்று நினைத்துள்ளார்!

அவருடைய பேச்சு வெளிப்படையாக செய்தி ஊடகங்களை, பத்திரிக்கையாளர்களை மிரட்டுகிற தொனியிலே உள்ளது. ஊடகங்கள் நினைத்தால் உலகையே மாற்றலாம் என்பார்கள் அது உண்மை தான் நாட்டில் ஆட்சி மாற்றத்தையே உருவாக்க கூடிய அளவிற்கு சக்தி நிறைந்தது ஊடகங்கள், பெரும்பான்மை மக்களின் எண்ண போக்கை தீர்மானிப்பதே ஊடகங்கள் தான் ஆனாலும் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பான்மை ஊடகங்கள் ஆளும் கட்சிகளுக்கும், ஆதிக்க பார்பனிய சக்திகளுக்கும் ஆதரவு செய்திகள் வெளியிடுவது தான் பெரும்பான்மையாக உள்ளது. 


ஆனாலும் பெரிய அளவில் பிரபலமாகாத பல முற்போக்கு, ஊடகங்கள், சமத்துவ, சமூக நீதி சிந்தனை கொண்டு ஜனநாயக பாணியில் பயணித்து ஆதிக்க சக்திகளை எதிர்த்து அடித்தட்டு மக்களின் வலிகளை பேசிக் கொண்டு தான் இருக்கின்றன. 


அப்படிபட்ட ஊடகங்களை குறிவைத்து தான் இவர் பேசுகிறார், ஊடகங்கள் சுதந்திரமான, தன்னிச்சையான அமைப்பு, அவர்கள் யாரும் அடிமைகள் அல்ல, எத்தனையோ களத்தில் அறத்தின் பக்கம் நின்றவர்கள். 


ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்களை கட்டுப்படுத்துவேன் என்று சொல்வது ஜனநாயக விரோத செயல் இப்படி நேரடியாக பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை கைது செய்யப்பட வேண்டும்.

 பத்திரிக்கையாளர்களிடம் பகிரங்கமாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே அறம் பேசும் அனைத்து ஊடகத்தினரின் கோரிக்கையாகும். 

.அவர் இதற்க்கு முன்பே அரசியல் மேடையில் மிக அநாகரிகமாக செந்தில் பாலாஜியை அடித்து பல்லை உடைப்பேன் என்று மிக வன்முறையாகவும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது, 

தமிழ் நாடு அரசும் காவல்துறையும் இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஜனநாயக சக்திகளின் கோரிக்கை.

Leave Comments

Comments (0)