கும்பமேளா ! கொரோனா பரவல் !

/files/A1-Recovered-Recovered-Recovered-Recovered-2021-04-17-21:15:13.jpg

 கும்பமேளா ! கொரோனா பரவல் !

  • 5
  • 0

தவ.செல்வமணி


சென்ற வருடம் இதே நாட்களில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது,அப்போது டெல்லியில் இஸ்லாமியர்களின் தப்லீக் ஜமாத் கூட்டம் நடைபெற்றது.


கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி இஸ்லாமியர்கள் ஒன்று கூடியது தவறு தான்,ஆனால் அவர்களை காவல்துறை விரட்டி விரட்டி தாக்கியது,அதன் பிறகு கொரோனா பரவலுக்கே காரணம் இஸ்லாமியர்கள் தான் என்பது போல வன்மத்தை ஊடங்கங்களும்,இந்துத்துவா வாதிகளும் சேர்ந்து கத்தின.


கொண்டாட்டம் என்பதோ!பண்டிகை என்பதோ ! உழைத்து களைத்த மக்கள் ஒன்று கூடி தங்களை ஆற்றுப்படுத்தி கொள்வது தான் ,நம் தமிழ் பாரம்பரிய விழாவான பொங்கல் கொண்டாடுவதற்கான காரணம் நாம் உயிர் வாழ்ந்திட அடிப்படையாக அமைந்திடும் சூரியன்,விவசாயிகள்,மாடுகளுக்கு நன்றி சொல்கிறோம்!

உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு சிறு பயணம் செல்கிறோம்.காணும் பொங்கலில்!


ஆனால் பார்ப்பனிய பண்டிகைகளை பார்ப்போம் ! வன்முறையை தூண்டும் ஆயுதங்களை கொண்டாடும் ஆயுத பூஜை,கொலையை கொண்டாடும் தீபாவளி,அதுவும் பன்றியும் பாற்கடலும் உறவு கொண்டு என்பன போன்ற கட்டுக்கதைகளை காட்டும் தீபாவளி இப்படி அறிவியலுக்கு புறப்பான,நம்பகத்தன்மை துளி கூட இல்லாத கற்பனை கட்டுக்கதைகளை அடிப்படியாக கொண்ட பண்டிகைகள் தான் பெரும்பாலான இந்து மத பண்டிகைகள்.அவற்றில் ஒன்று தான் ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா இது ஒரு நல்ல வியாபாரமாக இருப்பதை உணர்ந்து தற்போது 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று ரூல்ஸ் மாற்றி விட்டார்கள்.


அதற்க்கு பெயர் அர்த்த கும்பமேளா,கும்பமேளா என்றால் கங்கை,யமுனை,சரஸ்வதி என்கிற மூன்று ஆறுகள் சங்கமமாகும் இடமாம்.சரஸ்வதி என்கிற நதி இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை இல்லை,அது வெறும் புராணத்தில் மட்டும் தான் உள்ளது.


கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் பரவி வருகிறது என்பது தான் கடந்த 10 நாட்களாக இந்தியா முழுவதும் உள்ள செய்தி ஊடகங்களின் தலைப்பு செய்தி.


திருமணத்தில் 100 பேருக்கு மேல் கூட கூடாது.!


பள்ளி,கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை!.


கோவில்களில் திறந்து வைக்க தடை !


உணவகத்தில்,தியேட்டரில் பாதி நபர்களுக்கு மட்டுமே அனுமதி!


என்கிற கட்டுப்பாடுகள் இருக்கும் நாட்டில் ஒரு நிகழ்ச்சியில் இது வரை 30 இலட்சம் பேர் கலந்து கொண்டுள்ளார்கள்.


இந்திய பிரதமரும் ,உத்திரபிரதேச முதல்வரும் இந்நிகழ்சிக்கு அனைவரையும் வரவேற்று செய்தியில் விளம்பரம் கொடுக்கிறார்கள்.இந்நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய உத்தரகாண்ட் முதல்வர் திராத் சிங் ராவத் முதல் ஆளாக கும்பமேளா நடக்கும் இடத்தில் நின்றார் அவரது மாஸ்க் முகத்தில் இல்ல, கழுத்தைச் சுற்றி இருந்தது. இதனை அத்தனை தொலைகாட்சிகளும் படம்பிடித்தன. “அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்” ஒன்றும் நடக்கவில்லை.


ஒருவரும் மாஸ்க் அணியவில்லை,எவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை.


தப்லிக் ஜமாத் கூட்டத்தோடு கும்பமேளாவை ஒப்பிடக்கூடாது. தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அந்நியர்கள்,இது உள்நாட்டைச் சேர்ந்தவர்கள். 

தப்லிக் ஜமாத் ஒரு காம்பவுண்டிற்குள் நடைபெற்றது,கும்பமேளா புனித கங்கையின் திறந்தவெளி.

இத்தனை அறிவோடு பேசியவர் உத்திரகாண்ட் முதலமைச்சர் திரத்சிங் ராவத்.


சமீபத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளுக்கு கூட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.


அதிகாரத்தில் இருப்பவர்களை கொரோனா கட்டுப்பாடுகளை தூக்கி எறியலாம் போல ! ஏன் கும்பமேளாவுக்கு வந்துள்ளார்கள் இவர்களை தக்க கூடாது என கொரோனா தாக்காத ! வைரசுக்கு இந்து,முஸ்லீம்,கிறிஸ்டியன் என்று மதங்கள் தெரியுமா !இலட்சக்கணக்கானோர் கூடுவார்கள் என தெரிந்தும் அனுமதி கொடுத்த அவர்களை என்ன சொல்ல !


கும்பமேளாவில் பங்கு பெற்ற 1500 க்கும் மேற்பட்டோருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் பரிசோதனைகள் நடந்து கொண்டே தான் உள்ளது.


மதம் மூடநம்பிக்கை எத்தகைய முட்டாள்தனங்களை விளைவிக்கும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.


முக்தி,மோட்சம் கிடைக்கும்,என்கிற கற்பனையான பகுத்தறிவுக்கு ஒப்பானதா மூடப்பழக்கங்களால் !

எத்தனை உயிர்கள் பலியாகுமோ ! இந்த நாட்டின் அதிகாரம் சாமானிய சிறுபான்மை தலித் மக்களை ஒடுக்குவதற்கு மட்டும் தானா ?

Leave Comments

Comments (0)