உள் ஒதுக்கீடு தேர்தல் தயாரிப்பா ?

/files/A1-2021-04-03-21:21:00.jpg

உள் ஒதுக்கீடு தேர்தல் தயாரிப்பா ?

  • 1
  • 0

தவ.செல்வமணி


வருகிற சட்ட மன்ற தேர்தலில் தீவிர பிரச்சாரங்கள் சற்றே ஓய்ந்துள்ளது என்றே கூறலாம்,தற்போதைய நிலவரம் என்னவென்றால் எந்த கட்சி எவ்வளவு பணம் தருகிறது என்கிற பேச்சே ஊரெங்கும்,ஆனால் அந்த பணத்தை விட பெரிய ஆயுதம் ஒன்று உள்ளது ,பணம் கொடுத்தவருக்கு கூட வாக்களிக்காமல் இருப்பார்கள் ,ஆனால் சாதி என்று வந்து விட்டால் இந்த தமிழ் சமூகம் உண்மையாக நடந்து கொள்ளும் அப்படி அந்த சாதியை வைத்தே மக்களை ஏமாற்றக்கூடிய வித்தையை நம் அரசியல் தலைவர்கள் மிக சிறப்பாக செவருகின்றனர்.


ஈரான் ஐரோப்பிய நாடுகளில் இருந்து நாடோடியாக வந்த மக்கள் உழைக்காமல் மக்களின் உழைப்பை சுரண்டி வாழ நடைமுறைப்படுத்திய நயவஞ்சகம் தான் சாதி அந்த பார்ப்பனீயம் பார்ப்பனர் தவிர்த்து அனைவரையும் அடிமை என்றது கல்வியை ,அதிகாரத்தை ,பொருளாதாரத்தை என அனைத்தையும் தன் வசப்படுத்திக் கொண்டது அப்படி பார்ப்பனரை தவிர்த்த அனைத்து சாதியை சார்ந்த மக்களும் புறக்கணிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டார்கள்.
இந்த இழி நிலையை போக்க பல தலைவர்கள் தோன்றினார்கள் ,பல இயக்கங்கள் தோன்றியது.


அப்படிதான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும்,ஆதிராவிடர்,பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகளும் தோன்றிய தங்களுடைய சமூக மக்களின் உரிமையை கல்வியை வேலைவாய்ப்பை ஆட்சி அதிகார பங்கை கோரி குரல் எழுப்பின,போராட்டங்கள் செய்தன பல உயிரிழப்புகளையும் கூட சந்திக்க வேண்டிய சூழலுக்கு உட்பட்டு இடஒதுக்கீடு உரிமைகளையும்,பெற்றனர்.


கல்வியிலும் ,வேலைவாய்ப்பிலும் வாய்ப்புகளை பெற தொடங்கினர் அனைத்து சாதியினரும் அனைத்து துறைகளிலும் வாய்ப்புகளை பெற தொடங்கினர்,இவ்வாறு சமூக நீதியும் சமத்துவமும் நிலைபெற தொடங்கின ஆனால் எந்த ஒன்றையும் சுய இலாப நோக்கோடு,வியாபாரக்க முயலும் கூட்டத்தினர்,


பெரு முதலாளிகள்,ரவுடிகள்,கொலை ,கொள்ளையில் ஈடுபடுபவர்கள் எல்லாம் தங்களை தற்காத்து கொள்ள சாதியின் பெயரில் கட்சி ,சாதி சங்கங்களை உருவாக்குகிறார்கள் இன்னொரு விதம் என்னவென்றால் சமூக மக்களின் உரிமைகளை மீட்பதற்காக இயக்கம் ஆரம்பித்து விட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு கோடி கோடியாக தனது குடும்பத்திற்கு பணம் சேர்க்க அரசியலில் தங்களது செல்வாக்கை காட்ட தங்களது சாதி மக்களை பகடை காயாக மாற்றி அதன் மூலம் மக்களை சுரண்டுகிறார்கள்.


மத்திய பாரதிய ஜனதா அரசு பல் மருத்துவ படிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் காண இடஒதுக்கீட்டை ரத்து செய்தது ,பிறப்படுத்த பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் சமூக மக்களின் வாய்ப்பை பறிக்கும் சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது.
இந்த சம்பவங்களின் போதெல்லாம் பெருத்த அமைதி காத்து விட்டு தேர்தலுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு அரசியல் செய்வதற்கான கருத்தாக்கம் இல்லாத பற்றாக்குறையை போக்க வீட்டில் அமர்ந்த படியே வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் அறிவிக்கிறார்.


வன்னிய சமூக மாணவர்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்பை இல்லாமல் செய்த ,BC,MBC மாணவர்களின் இடஒதுக்கீட்டை ரத்து செய்த பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டு மவுனம் காத்தவர்.


தேர்தல் அலாரம் அடித்த உடன் போராட்டம் அறிவிக்கிறார்,போராட்டம் அறிவித்ததை மக்கள் மறக்கும் முன்பாகவே அதையும் வாபஸ் வாங்கி கொள்கிறார் தமிழக முதல்வர் உடனான பேரத்துக்கு பின் இல்லை விவாதத்துக்கு பின் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்படுகிறது.


20 சதவீதம் என்கிற கோரிக்கை 10 சதவீதமாக மாறியது ,அதிமுக பாமக கூட்டணி உறுதியானது.


பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த மக்களை பற்றியோ! மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த மக்களை பற்றியோ மருத்துவர் ராமதாசுக்கு கவலை இல்லை இவர்களுக்களின் உரிமைகள் பறிக்கப்படும் போதோ ! இவர்களின் இடஒதுக்கீடு பற்றியோ அவர் குரல் கொடுக்கவே மாட்டார்.
வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு என்பது தவறல்ல,இடஒதுக்கீடு என்பது சலுகை பிச்சை இழிவென்று சொன்னவர்கள்,இடஒதுக்கீட்டுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தது சரிதான்.

இடஒதுக்கீடு என்பது உரிமை ,சமத்துவம் ,சமூக நீதி என்பதை புரிந்து கொண்டதே அறம் தான் ஆனால் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமுக மக்களும் சரியான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் தான் ஆனால்,தேர்தலுக்கான அவசர ஏற்பதாக அதிமுகவும் பாமகவும் கூட்டாக சேர்ந்து இதை அறிவிப்பாக வெளியிட்டனர்,அது வெறும் சட்ட ஆவணமாக உள்ளதே தவிர அதை நடைமுறையும் படுத்த வில்லை.


ஆனால் தற்போது அதிமுகவே சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார்,அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோர் கூறிவந்தனர்.

தற்போது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்களே வன்னியர்களுக்கான 10 சதவீத உள் ஒதுக்கீடு என்பது தற்காலிகமானதே என்றும் அறிவித்துள்ளார்.


ஆக கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பொருளாதாரத்திலும் அனைத்து தரப்பிலும் நலிந்த சரியான அங்கீகாரம் இல்லாத வன்னிய சமூக மக்களை ஏமாற்றி விளையாடும் வேலையையே பாமகவும்,அதிமுகவும் செய்துள்ளது.

தங்களின் உரிமையை கேட்டு களம் காணும் அவர்களை தனது அரசியல் வியாபாரத்துக்காக பகடை காயாக்கும் கயவர்களை நிச்சயம் அவர்கள் புறந்தள்ள வேண்டும்.

Leave Comments

Comments (0)