அநீதிக் கதைகள் வெளியீட்டு விழா !

/files/q4-2021-01-09-21:18:59.jpg

அநீதிக் கதைகள் வெளியீட்டு விழா !

  • 52
  • 0

T.செல்வமணி

துப்பாக்கிகள் போராட்டங்களை துவக்கி வைக்கலாம் ஆனால் புத்தகங்களே போராட்டங்களை முடித்து வைக்கும், தீர்வை நோக்கி நம்மை வழி நடத்தும். 

காட்டுமிராண்டிகளாக தோன்றிய மனித சமுதாயத்தை பண்படுத்தியது, பதப்படுத்தியது, மனிதநேய உணர்வும் மனிதத்தை விதைத்த படைப்புகளும் தான்.

மக்களுக்கான எழுத்து, பேச்சு, ஓவியம் போன்ற கலை படைப்புகள் தான் இன்று நாம் வாழும் நவீன உலகுக்கு வித்திட்டது.

உலகின் சீரழிவுக்கு காரணம்  இவைகளில் ஏற்பட்ட அறத்திற்குப் புறம்பான பார்ப்பனிய, கார்ப்பரேட் கொள்ளையர்களின் இடைச்செருகல் தான். 

இந்த தேசம் எங்கும் தினம்தோறும் பல போராட்டங்கள் நடந்த வண்ணம் இருந்தாலும், சாதிய சண்டைகள், ஆணவ படு கொலைகள், தீட்டு, தீண்டாமை என நம்மை சூழ்ந்தாலும், பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்கொடுமைகள்  அரங்கேறினாலும், 

நித்தமும் நம் தமிழ் ஆர்வலர்கள் கம்பரையும், பாரதியையும் தூக்கி வைத்து கவியரங்கம் நடத்துவார்கள், நம் படைப்பாளிகள் காதலையும், காமத்தையும் கவிதை நயத்தையும், புனைவையும் எழுதி சிலாகித்து நகையாடுவார்கள்..

பல ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போல அவ்வப்போது சில படைப்பாளிகள் இந்த மண்ணில், மக்களின் அடிப்படை உரிமைக்காக, சமூக நீதிக்காக, சமூகத்திற்காக ஓங்கி முழங்குவார்கள், அதிகாரத்திற்கு ஏங்காமல் அறத்திற்கு ஊறு விளையும் போது வெகுண்டெழும் படைப்பாளிகளின் குரலே புரட்சியின் குரல்கள்அப்படியான ஒரு படைப்பு தான் இந்த கோரோனா காலத்தில் தமிழ் ஸ்டுடியோ அருண் மோ அவர்களால் எழுதப்பட்ட அநீதி கதைகள்... 


கடந்த பதிமூன்று வருடங்களுக்கு மேலாக தமிழ்ச் சூழலில், தமிழ் சினிமா உலகில் மாற்று சினிமாவை, சுயாதீன திரைப்படங்களை, மக்களுக்கான கலைப்படைப்புகளை உருவாகிட வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்தியாவிலேயே சினிமாவுக்கு என்று தனி புத்தக நிலையம், படிமை பயிற்சி மையம், பல்வேறு திரையிடல் நிகழ்ச்சிகள், உதவி இயக்குனர்களுக்கு காண வகுப்புகள், மாஸ்டர் கிளாஸ் என பல அரும்பெரும் முன்னெடுப்புகளை தமிழகத்தில் நிகழ்த்தி வரும் கட்சி சாராத, பெரு முதலாளிகள் சார்பற்ற, மக்களுக்காகவே இயங்கும் ஒரு இயக்கமாக சமரசம் இல்லாமல் இயங்கி வரும் தமிழ் ஸ்டுடியோவை வழிநடத்தி வரும் இவர், இந்த நெருக்கடி காலத்தில் மக்களுக்கான ஒரு படைப்பை சிறுகதைகளை எழுதி, வெளியீட்டு விழாவை வருகிற 10-1-2021 அன்று தோழர்கள் முன்னிலையில் உங்களோடு பிரசாத் லேபில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது..கடந்த 30 நாட்களுக்கு மேலாக வட இந்திய விவசாயிகள் பெரும் போராட்டத்தை லட்சக்கணக்கான மக்கள் கூடி நடத்தி வருகிறார்கள், ஊடகங்கள் பெரு முதலாளிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு மவுனம் காக்கிறார்கள், பெரும் பிரபலங்களும் படைப்பாளிகளும் தானுண்டு தனது பிழைப்பு உண்டு என்று அடித்தட்டு மக்களால் பெரும் புகழ் அடைந்தவர்கள் அம்மக்கள் பெரும் துயரில் முழுகும் போது வாய் கூட திறக்காமல் கள்ள மௌனிகளாகி போகிறார்கள்,  தமிழகத்தின் மூன்று பெரிய எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் என புகழ படுபவர்கள், ரஷ்ய உலக இலக்கியங்களை எல்லாம் கரைத்து குடித்த அந்த மேதைகள் இந்திய விவசாயிகளின் போராட்டத்தை பற்றி ஏதேனும் எழுதினார்களா? பதி விட்டார்களா? இல்லை அவர்களுக்கு பணம் சம்பாதிப்பது மட்டும் தானே எழுத்தின் பணி..


இப்படி வீணர்களாய் விழ்ந்துவிடாமல் சமூக நீதி வீரர்களாய், கலை என்பது காசு பார்க்கும் தொழில் என்று எண்ணுதல் மடமை என உரைத்து, இந்த முட்டாள்தன கட்டமைப்பை உடைக்க தான் தமிழ் ஸ்டுடியோ இத்தனை ஆண்டுகள் உழைத்துக் கொண்டிருக்கிறது. இந்த மாத படச்சுருளை இந்திய விவசாயிகளுக்காக வெளியிட்டுள்ளது. 


தீட்டு, அசுரர்கள், பசி, சாவித்திரி, டோல்கேட், சோசியோபோபியா, சூனியக்கார கிழவி பூட்டி பூட்டு, இந்த சிறுகதைகளின் தொகுப்பே அநீதிக் கதைகள், இவைகள் ஒவ்வொன்றும், சமூக நீதியை, சாதிய நோயை, பெண் அடிமை தனத்தை, காவல் துறை ஆணவத்தை, சமூக சீர்கேட்டை சாடும், சனநாயகத்தை நாடும் கதைகளாகவே படைக்கப்பட்டுள்ளன...


உழைக்கும் மக்களுக்கான படைப்புகள் ஓங்கினால் தான் வெகுசனத்திடம் பார்வையாக்க பட்டால்தான் அடித்தட்டு மக்களின் உரிமைகள் காக்கப்படும், அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படும், அரச அதிகார அவலங்களுக்கு முடிவு கட்டப்படும்...


இப்புத்தகம் தேவைப்படுவோர் அழைக்க 98406 44916

Leave Comments

Comments (0)