இந்தியாவை உலுக்கிய இரயில் மறியல் !

/files/TRAIN-2021-02-19-19:29:47.JPG

இந்தியாவை உலுக்கிய இரயில் மறியல் !

  • 16
  • 0

செல்வமணி .T

கடந்த செப்டம்பர் மாதம் உலகமே கொரோனா  அச்சத்தில் மூழ்கி இருந்த போது அவசர அவசரமாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை மக்கள் மற்றும் மக்களின் பிரதிநிகளிடம் எந்த கருத்தும் கேட்காமல் இரு அவைகளிலும் நிறைவேற்றியது .

அன்று தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் இன்று வரை நடைபெற்று வருகிறது இந்த சட்டங்களை அரசு வாபஸ் பெரும் வரை நாங்கள் போராடி கொண்டே இருப்போம் என விவசாயிகளும் சூளுரைத்துள்ளனர் .

இந்த மூன்று சட்டங்களும் நிறைவேற்றப்பட்டால்!

1,அத்தியாவசிய உணவு பொருட்களை பெரு முதலாளிகளும் ,கார்பரேட்களும் எவ்வளவு வேண்டுமானாலும் பதுக்கிக் கொள்ளலாம் .

2,விவசாயம் உலக அளவில் ஒரு மிகப்பெரிய வியாபாரமாக மாறும் ,உலக சந்தையில் எதற்கு டிமாண்ட் இருக்கிறதோ அதை தான் விவசாயிகள் விளைவிக்க முடியும் .

3,உணவு பொருட்களை தாராளமாக பதுக்கிக் கொள்ளலாம் என இச்சட்டமே அனுமதி கொடுப்பதால் ,செயற்கையாக பஞ்சத்தை பெரு முதலாளிகளால் உருவாக்க இயலும் .

4,நெல் ,கோதுமை முதலிய அத்தியாவசிய உணவு பொருட்களை தனியார் நிறுவனங்களே எடுத்துக் கொண்டால் எதிர்காலத்தில் ரேஷன் கடை என்ற ஒன்றே இல்லாமல் போகும் .இப்படியான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அறிந்து தான் பஞ்சாப் ,ஹரியானா ,டெல்லி உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர் .


குடியரசு அரசாங்கம் என்பது மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அரசே !


ஆனால் நம் இந்திய நாட்டில் ஆட்சி அதிகாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக பார்ப்பனீயமும் ,கார்பரேட்டும் உள்ளதால் ,அவர்களால் உருவாக்கப்படும் அரசு அவர்களுக்காக செயல்படுவதில் வியப்பேது .


எப்போதும் போராட கூடியவர்களை விலை பேசியும் ,போராட்டங்களில் கலவரத்தை உருவாக்கியும் ,காவல்துறையால் ஒடுக்கி போராட்டங்களை ஒன்றுமே இல்லாமல் ஆக்கும் ஆதிக்க சக்திகளின் அனைத்து முயற்சிகளையும் சுக்கு நூறாக்கி விட்டு இந்திய விவசாயிகள் தொடர் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே தான் உள்ளது .முன்பெல்லாம் திரைப்படங்கள் தான் 100 நாள் ,200 நாள் என்று திரையரங்கில் ஓடி சாதனைப் படைக்கும் .

ஆனால் தற்போது இந்த தேசத்தில் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் சதமடித்துக் கொண்டு இருக்கிறது .


80 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் செய்து வருகிறார்கள் ,பல இலட்ச விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் பனி ,குளிர் ,வெப்பம் என எதையும் பொருட்படுத்தாமல் போராடிக் கொண்டு இருக்கிறார்கள் ,இந்தியாவின் பல அரசியல் தலைவர்கள் ,உலகின் பல பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர் .


ஆனால் 13 முறைகளுக்கும் மேல் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கைவிடுவோம் என்று கூற மறுக்கிறது .வீரம் என்றால் என்ன! ,உரிமை போராட்டம் என்றால் என்ன! என்பதை விளக்கும் விதமாக எந்த ஒரு ஆதிக்கத்துக்கும் அடிபணியாமல் விவசாயிகள் தொடர்ந்து பலவாறு போராட்டம் செய்கிறார்கள் .


இன்று 18-2-2021 அன்று 12 மணி முதல் 4 மணி வரை இரயில் மறியல் போராட்டத்தை நடனத்தினார்கள் .

அமைதியான முறையில் அறவழியில் இந்தியாவின் பல மாநிலங்களில் ,பல இடங்களில் இவர்களின் போராட்டம் நடந்தது .இரயில் மறியலின்  போது இரயிலில் இருக்கும் பொது மக்களுக்கு பசிக்கும் என அவர்களுக்கு பழங்களையும் வழங்கிய இவர்களின்,மனித நேயம் உண்மையில் உன்னதமானது தான் .


நீண்ட இரவுக்கு பின்னே விடியல் பிறக்கும் என்பது போல ,வட இந்திய விவசாயிகளின் இந்த இடைவிடாத போராட்டமே பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயக ஆட்சி இந்தியா முழுமைக்கும் அமைய வழி வகுக்கும் .

Leave Comments

Comments (0)