புதிய ஆண்டை எப்படி வரவேற்பது?

/files/11-2020-12-28-20:21:51.jpg

புதிய ஆண்டை எப்படி வரவேற்பது?

  • 6
  • 0

T.செல்வமணி


2020 யின் இறுதி நாட்களில் தற்போது இருக்கிறோம். 

இன்னும் ஓரிரு நாட்களில் புதிய ஆண்டு தொடங்க உள்ளது.

 

அனைத்து வருடங்களும் முடிந்து புத்தாண்டு தொடங்கும் போது நமக்குள்ளே இனம்புரியாத ஒரு பெருமகிழ்வு மனதில் ஊசலாடும் ,ஆனால் அவைகளை விட இவ்வாண்டு மிகப் புதுமையானது. 


உலக மாந்தர்களே எப்போது 2020 முடியும் என்று ஏங்கி காத்து நிற்கின்றனர். அதற்கு பெரியதொரு காரணம் உண்டு!


மனிதன் தோன்றியதிலிருந்து பல பேரழிவுகளை சந்தித்து வந்தாலும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தொடங்கி தற்போது வரை தொடர்ந்து வரும் மனிதகுலம் சந்தித்ததிலேயே பெரும் பேரிடியான கொரானா தொற்று பல லட்சம் உயிர்களை பலி வாங்கியது, உலகையே ஒரு எட்டு மாத காலம் முடக்கி வைத்தது. 


அதன் பாதிப்பை மக்கள் மறக்கவே இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆகும். 

அதற்காகத்தான் 2020யை மக்கள் வெறுத்து 2021யை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். 2020 யில்   கொரானா மட்டுமே கோரத்தாண்டவம் ஆடியதா? என்றால் வழக்கமாக இந்திய தேசத்தில் தலைவிரித்தாடும் சாதியும், மதமும்  கொரானா காலத்திலும் ஓய்வெடுக்காமல் தன் கொடூரத்தை காட்டிக் கொண்டே வந்தது. 


பெரும் மனித இழப்பை நோய்த்தொற்று கொடுத்து வந்தாலும் சாதி வைரசும் அதன் தாக்கத்தை நாளுக்கு நாள் கொடுத்துக் கொண்டேதான் இருந்தது. 


அதன் நீட்சியாக 27, 12, 2020 

ஒரு சம்பவம் நடந்தேறியது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம் ஜேடார்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலக்கரையில் குறவர் சாதியைச் சார்ந்த லாரி ஓட்டுநர் திரு. சுப்பிரமணியம், அவரது துணைவியார், இவர்களின் இரு மகள்கள், மகன் மற்றும் வயதான அத்தையும் வாழ்ந்துவருகின்றனர். 


இவர்களின் வீடு வன்னியர்கள் வாழும் பகுதியில் கட்டியுள்ளனர் என்ற காரணத்தால், நாம் வசிக்கும் இடத்தில் இவர்கள் வசிப்பதா? நம்மோடு இவர்கள் வாழ்வதா? என்கிற சாதிய மனோ நிலையில். 


கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு விதத்தில் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு அப்பகுதி வன்னிய மக்கள் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். 


வீட்டின் முன்பு குப்பையைக் கொட்டுவது, மாந்திரீகம் செய்து முட்டை, எலுமிச்சம்பழம் பூஜை பொருட்களை வீட்டு வாசலில் போட்டு பயமுறுத்துவது சாதிய பெயர்களைச் சொல்லி இழிவாகப் பேசுவது என இத்தனை வன்கொடுமைகளையும் செய்தே வந்துள்ளனர். இவர்களின் இத்தகைய கொடுமை தாங்காமல் சுப்ரமணியன் குடும்பம் ஜேடார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் 

கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் உச்சமாக நேற்று மதியம்

( 27, 12, 2020 )  2 மணிக்கு அப்பகுதியை சேர்ந்த சாதிவெறியர்கள் சுப்பிரமணி இல்லாத நேரத்தில் அவரின் வீடு புகுந்து கல் மற்றும் கம்புகளை கொண்டு சுப்பிரமணியன் மனைவி, மகள்கள், மகன் மற்றும் வயதான அத்தை என அனைவரையும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தற்போது நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இவர்களின் பக்கத்து வீட்டை சேர்ந்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சாந்தி அவரது உறவினர்கள் ராஜேந்திரன் அவரது மனைவி மகள்கள் உறவினர் சீனு, சரசு, நவீன் ஆகியோரே இந்த வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். இந்த பகுதியில் ஒரே ஒரு குறவர் குடும்பம் மட்டுமே வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு நடந்த இந்த அக்கிரமத்தை அங்கிருந்த ஒருவரும் தடுக்காமல் பாதிக்கப்பட்ட குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே மீண்டும் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா! என வசனம் வைத்தால் வானளாவிய கரகோஷம் எழுப்பும் நம் மக்கள் ஊர், சேரி பிரிவினை என்கின்ற பழைய சாதிய பாகுபாடு!  இல்லை, இல்லை சாதிய பண்பாட்டை இத்தனை வருடங்கள் காத்தே வருகிறார்கள்.


தீட்டு, தீண்டாமை, ஆணவப்படுகொலை, ஊர் சேரி பிரிவினை, தனி சுடுகாடு என அத்தனை கொடுமைகளுக்கும் அச்சாரம் இடுவது இந்து மதம் தான்.. 

இந்துத்துவாவின் அடிவருடிகளாக இருக்கும் சாதி இந்துக்களே நீங்கள் கட்டிய கோவில் கருவறைக்குள் உங்களால் போக முடியுமா? 

நம் மண்ணின் வளங்களை பன்னாட்டு முதலாளிகள் சுரண்டி வருகிறார்களே! 


நமது இட ஒதுக்கீடு உரிமையை,நமது வாழ்வாதாரத்தை, அடிப்படை உரிமைகளை அரசு தர மறுக்கிறதே! இவைகள் குறித்து நாம் சிந்தித்தோமா? 


சமூகத்தை சீரழிக்கும்,நம்மை வேசி மகனே என விளிக்கும் பார்ப்பனியத்தை, நம் உழைப்பை சுரண்டும் கார்பரேட்யை எதிர்த்து நமக்கு கோபம் வந்ததா? 

அவர்களை எதிர்த்து போராடாடினோமா? 


உங்களை நீங்களே ஒரு முறை கேட்டுக் கொள்ளுங்கள் பிறகு புத்தாண்டை எப்படி கொண்டாடலாம் என யோசியுங்கள். 


அனைவருக்கும் புத்தாண்டு தின வாழ்த்தும், அன்பும், முத்தங்களும்.

Leave Comments

Comments (0)