அரசின் அடியாட்களா ? வருமானவரித்துறை !

/files/TAPSEE-2021-03-06-16:03:14.jpg

அரசின் அடியாட்களா ? வருமானவரித்துறை !

  • 13
  • 0

செல்வமணி.T

பொதுவாக நாம் நிறைய திரைப்படங்களில் இப்படியான காட்சிகளை பார்த்திருப்போம் ! கோட் சூட் அணிந்து மிக இறுக்கமான ,பள பள உடையில் நான்கு இந்து பேர் காரில் இருந்து இறங்குவார்கள் ,மிகப்பெரிய அரசியல்வாதிகள் ,தொழில் அதிபர்கள் வீடு புகுந்து ஆய்வு செய்வார்கள் ,மிகவும் வித்தியாசமாக விசித்திரமாக ,சுவற்றை உடைப்பார்கள் ,கழிவறையை கிளறுவார்கள் அவர்கள் தேட தேட பணமும் ,நகையும் கொட்டிக் கிடக்கும் ,இதெல்லாம் ஏமாற்று வழியில் ,வரி ஏய்ப்பு செய்த கருப்பு பணங்கள் ,அவர்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் .

இப்படியான நிகழ்வுகளை சினிமா காட்சிகளாகத் தான் நாம் நிறைய பார்த்திருக்க முடியும் .

நிஜத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக இறங்கி அதிகாரத்தை எதிர்த்து வேலை செய்கிறார்களா ?அல்லது அரசாங்க சம்பளத்தை வாங்கி கொண்டு கடமைக்கு இருக்கிறார்களா? சினிமாவில் வரும் அக்காட்சிகள் போல எப்போதாவது அத்தி பூத்தார் போல செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வரும் .


ஆனால் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் மிகச்சசிறப்பாகவே வேலை செய்கிறார்கள் ,அதுவும் மத்திய பாரதிய ஜனதா அரசின் கீழ் மிகச்சசிறப்பாக செயல்படுகிறார்கள் .


2014 யில் இருந்து தற்போது வரை இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் பிஜேபி அரசே ஆட்சி செய்கிறது ,உலக அளவில் ஓரு கொடிய ஆட்சியாளர் யார் என்றால் எல்லோரும் ஒப்பாக ஹிட்லரை சொல்வார்கள் ,இந்தியாவில் சர்வாதிகாரத் தன்மையில் மக்கள் ஒடுக்கப்பட்ட காலகட்டமாக இந்திரா காட்சியின் அவசர நிலையை சொல்வார்கள் ,இந்த இரண்டையும் இணைத்தது போல ஒரு ஆட்சி மத்திய மோடி அரசின் ஆட்சி என்றே மக்கள் கூறிவருகிறார்கள் .ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களிடமும் ,மக்கள் பிரதிநிதிகளிடமும் கருத்து கேட்காமல் ஜனநாயகத்துக்கு ஒவ்வாத பல சட்டங்களை தங்களது தனிப்பெரும்பான்மையை வைத்து இரு அவைகளிலும் நிறைவேற்றி விடுகிறார்கள் .


மத்திய அரசின் சேவகராக இருக்கும் குடியரசு தலைவரும் அனைத்திற்கும் ஒப்புதல் வழங்கி விடுகிறார் .


முற்போக்கு இடதுசாரி இயக்கங்களும் ,மக்களுமே தெருவில் இறங்கி போராடிக் கொண்டு இருக்கிறார்கள் .


வலுவான எதிர்க்கட்சியும் இந்திய அளவில் இவர்களின் இந்த சர்வாதிகார போக்கை வலுவாக எதிர்க்கவில்லை ,எனும் போதும் அவர்களின் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கூட அவ்வப்போது .

அவர்களின் சர்வாதிகார சட்டங்களை எதிர்த்தே நின்றார்கள் .


கலையை வியாபாரமாக்கி கொடிகளை குவித்த சினிமா துறையில் உச்சம் தொட்டவர்கள் பலரும் ஆளும் அரசுக்கு அடிபணிந்து மவுனமாக சிலரும் அரசியல் புரிதல் அற்றோ அல்லது அரசுக்கு ஆதரவாக நின்றாள் தான் நமக்கு இலாபம் என்றோ எண்ணி ,மக்களுக்கு எதிரான சர்வநாச சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும் அதை ஆதரித்து பேசியே வந்தனர் .


அப்படி இருக்க அறத்துக்கு எதிராக ஆயிரம் கால்கள் நின்றாலும் ,அறத்தை காக்க ஒரு சில உரிமை கைகளாவது நிச்சயம் உறுதியாக நிற்கும் .


அப்படி இந்தியா முழுவதும் பல எழுத்தாளர்கள் ,கலைஞர்கள் ,படைப்பாளிகள் அரசின் அநீதிகளை மிக தைரியமாக எதிர்த்து கேள்வி எழுப்பினர் .


அவ்வாறு கேள்வி எழுப்பும் கலைஞர்களை அச்சுறுத்த அரசு பயன்படுத்தும் ஆயுதம் தான் வருமானவரித்துறை .


மத்திய மோடி அரசை யார் கேள்வி கேட்டாலும் அடுத்த நாள் அவர்கள் வீட்டின் முன்பு வருமான வரித்துறையினரின் வண்டி நிற்கும் .


அப்படித்தான் மத்திய அரசின் பல மக்கள் விரோத சட்டங்களையும் ,அடக்குமுறையையும் எதிர்த்து குரல் எழுப்பி வந்த நடிகர் டாப்ஸி ,மற்றும் இயக்குனர் அனுராக் காஷியாப் இருவருக்கும் சொந்தமான இடங்களை சோதனை செய்தனர் ,மத்திய அரசின் ஏவலாளிகளான வருமான வரித்துறையினர் .அதற்க்கு பதிலடி தரும் விதமாகவே அனுராக் காஷியப் அவர்கள் வீட்டில் உள்ள ஆயிரக்கணக்கான புத்தங்கள் மற்றும் சீடிக்களுடன் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது .சில நாட்களுக்கு முன்பு ,விசிக தலைவர் திருமாவளவன் அவர்களும் ஒரு மேடையில் இவ்வாறு பேசி இருப்பார் .

எங்களை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சோதனை செய்துக் கொள்ளலாம் ,வருமானவரித்துறையை எங்கள் அலுவலகத்துக்கு அனுப்புங்கள் .அவர்களுக்கு வெறும் காகிதங்கள் தான் கிடைக்கும் அதுவும் சனாதானம் ஒழிக என்று தான் இருக்கும் என இவர்களின் சர்வாதிகார போக்கையும் அதற்கும் பலிகடா ஆகும் வருமானவரித்துறையை பற்றியும் பேசி இருப்பார் .


அடித்தட்டு மக்களுக்கு எதிரான கிஸ்தி ,கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்கிற பெயரில் டெமோனிஷாட்டின் ,சிறுபான்மை மக்களுக்கு எதிரான குடியுரிமை சட்ட திருத்தும் ,விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் .


இவ்வாறு மக்களுக்கு எதிரான கார்ப்பரேட் ,பார்பனீயத்துக்கு ஆதரவான  சட்டங்களை இவர்கள் நிறைவேற்றிக் கொண்டே போகிறார்கள் .

பொது மக்களையும் இயக்கங்களையும் காவல் துறை கொண்டும் ,படைப்பாளிகளை ,கலைஞர்களை வருமான வரித்துறை கொண்டும் ஒடுக்க பார்க்கிறார்கள் .


நியாயம் கேக்குறவங்கள எல்லாம் தேச விரோதிகள்னு சொன்ன எப்படி சார்னு இமைக்கா நொடிகள் படத்தில் இயக்குனர் அனுராக் காசியப சொல்லியிருப்பார் ,தேச விரோத சக்திகளிடம் ஆட்சி இருந்தால் மக்களுக்காக நிற்கும் ஒவ்வொருவரும் தேசவிரோதிகள் எனவே முத்திரை குத்தப்படுவர் ,இதை வெகு சனம் புரிந்து கொண்டு அவர்களுக்கு எதிராக முத்திரை குத்துவதும் ,அவர்களை முற்றிலும் புறக்கணிப்பதுமே இந்த ஜனநாயக படுகொலைகளுக்கு தீர்வு !

Leave Comments

Comments (0)