பாமகவினரின் தேர்தல் அராஜகங்கள்!

/files/A1-Recovered-2021-04-08-21:29:12.jpg

பாமகவினரின் தேர்தல் அராஜகங்கள்!

  • 11
  • 0

தவ.செல்வமணி


தேர்தல் என்கிற ஜனநாயக முறைமையை சீர்குலைக்கவே சாதி,மதம்,பணம் என்கிற குப்பைகள் குவிந்து கிடக்கின்றன அதுவும் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதிக்கமும்,வன்முறையை ஏவும் கும்பலும் அனைத்து தேர்தல்களிலும் தனது கயமையை காட்டுகின்றன.


காட்டுமன்னார்குடி வட்டம் கண்டமங்கலம் கிராமத்தில் கள்ள ஓட்டு போட முயன்ற வன்னியர்களை தடுக்க முயன்றதற்காக பட்டியல் சமூகத்தினர் மீது பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.


கண்டமங்கலம் கிராமம் பெரும்பான்மை வன்னியர்கள் பகுதி என்பதால் ஒவ்வொரு முறையும் இப்படி கள்ள ஓட்டு போட முயல்வதும் மற்றும் பட்டியல் சமூக மக்களை வாக்களிக்க முடியாமல் தடுப்பதுமாக வாடிக்கையான நடவடிக்கைகளை பாமக செய்து வருகிறது.தேர்தல் அன்று (6-4-2021 )கள்ள ஓட்டு போடுவதை தடுக்க முயன்ற பட்டியல் சமூக மக்களை தாக்கும் பொருட்டு இரவு நேரத்தில் பாமகவை சேர்ந்த ராஜேஷ் என்பவர்  தலைமையில் வன்னியர் சமூக கும்பல் ஒன்று பட்டியல் சமூக பகுதிக்குள் நுழைந்துள்ளது.ஏற்கனவே பட்டியல் சமூக மக்கள் எச்சரிக்கையாக இருந்ததால்  அவர்களும் திரண்டு இருந்தனர்.இதனை எதிர்பார்க்காத வன்முறை செய்ய வந்த வன்னியர் கும்பல் திகைத்து நின்றது.


இதனையடுத்து பட்டியல் மக்களை தாக்க வந்த வன்னியர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.பிரச்சினை கேள்விப்பட்டு வந்த காவல்துறையோ  வன்முறை செய்ய வந்த வன்னியர்களை விட்டுவிட்டு  போராடிய பட்டியல் சமூக மக்களிடம் கடுமையாக நடந்துள்ளது.


.காட்டுமன்னார்குடியில் முன்னாள் தென்னாற்காடு திமுக மாவட்ட செயலாளரும் இருந்துக்கொண்டு வன்னியர் சங்க தலைவராகவும் இருந்த  கிருஷ்ணமூர்த்தியுடன் ஐயா இளையபெருமாள் அவர்களும் சமாதானத்துக்காக 1986 போட்ட ஒப்பந்தம்.

1991 ல் ராமதாசுடன் ஐயா இளையபெருமாள் போட்ட சமாதான ஒப்பந்தம் என இவ்வளவு இருந்தாலும் கொடுமைகள் ஒருபக்கம் தொடர்ந்துக்கொண்டுதான் உள்ளது.வன்னியர்களின் கள்ள ஓட்டு போடுவதை விசிக பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் தடுத்தபொழுதும் அவர்களின் இந்த தேர்தல் அராஜகங்கள் தொடர்ந்தே வருகிறது.

இது ஒரு புறம் என்றால் !


நேற்று 07-04-2021 மாலை 6 மணி அளவில் சோகனூர்கிராமத்தை சேர்ந்த அப்புன், என்பவர் அருகிலுள்ள குருவராஜ்பேட்டை என்ற இடத்தில் பானி பூரி கடையில் நின்று கொண்டிருக்கும்போது அவ்வழியே தனது நண்பர் இருசக்கர வாகனத்தில் சென்று இருக்கிறார், இதைப் பார்த்த அப்புன், தனது நண்பரை சத்தம்போட்டு அழைத்துள்ளார். 


இதைப் பார்த்த பெருமாள்ராஜ்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்த அஜித், புலி, ஆகியோர் உனக்கு எவ்வளவு திமிர் எங்களை ஏய்  என்று கூப்பிடுவாய்  என்று கூற  அதற்கு அப்புன் நான் உங்களை கூப்பிடவில்லை  எனது நண்பர் சென்றார் அவரைத்தான் நான் கூப்பிட்டேன் என்று பதில் கூறியுள்ளார்.அதனை ஏற்றுக்கொள்ளாத அஜித் மற்றும் புலி என்கிற இருவரும் தகாத வார்த்தைகள் சொல்லி திட்டி   உங்களுக்கு இவ்வளவு திமிர் ஆயிடுச்சா என்று கூறி அப்புன் மற்றும் உடன் இருந்த தம்பிகளை சாதியின் பெயரை சொல்லி அடித்துள்ளனர். 


இதனை அப்புனு தன்னுடைய சகோதரர் ஆனா சூர்யாவிற்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார், இதற்கு இடையில் சூர்யாவிற்கு போன் செய்த பாமகவை சேர்ந்த சிவா என்பவர் சமாதானம் பேசலாம் வா என்று கூப்பிட்டுள்ளார், 

இதனை நம்பி போன சூர்யா அங்கு ஏற்கனவே கொலை செய்யும் நோக்கத்துடன் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன், 

 பெருமாள்ராஜாப்பேட்டை கிராமத்தை சேர்ந்த அஜித், சிவா, புலி, குமரன், மூக்கன், சத்யா, ஆகாஷ், சூடு, கார்த்தி, பாஸ்கரன், முத்து, மணி, டில்லி, ராகுல்,

 சாலைகிராமத்தை சார்ந்த விக்கி, சுரேந்தர், ஆகாஷ், விக்கி, அரக்கோணம் ஓம்பிரகாஷ், 

காட்டுப்பாக்கம்கிராமத்தை சார்ந்த விக்கி நந்திவேடந்தாங்கள் கிராமத்தை சார்ந்த மணிகண்டன், மற்றும் பலர் ஒன்றிணைந்து பேச்சி வார்த்தைக்கு சென்ற சூர்யாவை தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி உள்ளனர்.


 இதில் படுகாயமடைந்த சூர்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.உடன்சென்ற தம்பிகள் செய்வதறியது அங்கும் இங்கும் இருட்டில் ஓடியுள்ளனர், அதில் மதன், வல்லரசு, சௌந்தர், தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளனர். 


ஓடி வந்த தம்பிகள் சூர்யாவை குத்தி விட்டனர் என்று கிராமத்தில் கூறியவுடன் மறுபடியும் சம்பவ இடத்திற்கு சில தம்பிகள் விரைந்து சென்றுள்ளனர், கொலைசெய்துவிட்டு அங்கேயே இருந்த மேற்கண்ட 20 நபர்களும் முதலாவது சென்ற அர்ஜுன் என்ற தம்பியை கத்தியால் குத்தி கீழே தள்ளி பக்கத்தில் இருந்த ஒரு பெரிய பாறையை தூக்கி அர்ஜுன் மீது போட்டு  கொலை செய்துள்ளனர்.

சாதி வெறி பிடித்த பாமகவை சார்ந்த சிவாவின் தூண்டுதலின்பேரில் இந்த படுகொலை நடந்துள்ளது. 

ஏற்கனவே இந்த கிராமத்தில் பாமகவை சேர்ந்தவர்களால் பலமுறை சாதிய மோதல் முன்விரோதம் இருந்தது வழக்குகள் நிலுவையில் இருப்பது  குறிப்பிடதக்கது.


போலீஸ் வழக்கம் போல் தன்னுடைய கடமையை செய்யும் என்று கூறுகின்றனர், 

சம்பவம் நடந்து 14 மணி நேரம் ஆகியும் இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை.


இந்த இரண்டு சம்பவங்கள் மட்டுமல்ல இன்னும் பல சம்பவங்கள் தமிழகத்தின் பல கிராமங்களில் பாமக சாதி வெறியர்களால் நடந்துகொண்டே தான் இருக்கிறது.இதற்கெல்லாம் காரணம் யார்! 

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இந்த இருவரின் அரசியல் சுயலாபத்துக்காக தங்களின் குடும்பத்திற்கு கோடி கோடியாக சொத்துக்களை குவிக்க வன்னிய சமூக மக்களை தூண்டி சாதியை காரணம் காட்டி கைக்கூலிகளாக பயன்படுத்தி பட்டியல் சமூக மக்களை கொலை செய்வதும்,கலவரங்களை,வன்முறைகளையும் ஏவி வருகிறார்கள்.


பட்டியல் சமூக மக்கள் மட்டுமின்றி பாமகவின் சாதிய விஷத்திற்கு இன்றைய இளைய தலைமுறை வன்னிய சமூகத்தினரும் பலியாகிறார்கள்.


இந்த வன்முறை கும்பலை பாட்டாளி மக்கள் கட்சியை தடை செய்தால் தான் தமிழகத்தின் சட்ட ஒழுங்கையும் அமைதியையும் பாதுகாக்க இயலும்.

Leave Comments

Comments (0)