தினமலர் எரிப்பு போராட்டம் !

/files/1-2021-07-17-21:19:07.jpg

தினமலர் எரிப்பு போராட்டம் !

  • 4
  • 0

தவ.செல்வமணி


எப்போதும் தலைப்பு செய்திகளை செய்தி நாளிதழ்களில் தான் வெளியிடுவார்கள் ஆனால் நாளை நாளிதழ்களில் தலைப்பு செய்தி என்னெவென்றால் தினமலர் நாளிதழை எரித்து நடைபெற்ற போராட்டங்கள் தான், இன்று மட்டுமல்ல இதற்க்கு முன்பும் ஒரு முறை தினமலர் நாளிதழை எரித்து மக்களும் இயக்கங்களும் போராட்டம் நடத்தினார்கள் 


இந்த உலகமானது சாதி,மதம்,இனம்,மொழி,நிறம்,பாலினம் போன்ற எந்த பேதங்களும் அற்று சக மனிதர்களை மனிதர்களாய் பார்க்கும் பார்வை வர வேண்டும், மக்கள் அனைவரும் சமத்துவதுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது தான் அறிவுள்ள அறம் கொண்ட ஒவ்வொருவரின் எண்ணமும்  ஆனால் இந்திய ஒன்றியத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் சுக போக வாழ்வு வாழ மற்றெல்லா மக்களையும் அடிமை என்றும் கீழானவர் என்றும் கூறி நால் வர்ணமாக பிரித்து அனைத்து மக்களின் உழைப்பையும் சுரண்டி ஒரு சாரர் மட்டும் வாழ்ந்து வந்தனர் அவர்களுக்கென்று கட்சியும் அவர்களுக்கென்ற ஊடகமும் இன்று வரையிலும் அவர்களின் அந்த கொடிய சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்த துடிக்கின்றன.அந்த திட்ட நடவடிக்கையை தான் தினமலர் தினசரி செய்து வருகிறது,பாரதிய ஜனதா அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டும் திமுக ஆட்சிக்கே வரக்கூடாது என்கிற நோக்கில் ஆதாரமற்ற செய்திகளை தலைப்பு செய்தியாக சென்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிட்டது அதற்க்கு மக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பும் தினமலரை எதிர்த்தும் போராட்டங்கள் நடந்தது.


முன்னாள் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை முதல்வராக இருக்கும் போதே மாண்புமிகு என்று கூட குறிப்பிடாமல் முதல்வர் பழனி என்று மொட்டையாக தலைப்பிட்டு எழுதி இருந்தார்கள்.


பெண்களை பற்றி இழிவாகவும்,பட்டியல் சமூக மக்களை கொச்சை படுத்துவதும்,சிறுபான்மையினருக்கு எதிராகவும்,சாதிய வன்மத்தோடும் தொடர்ந்து செய்தி வெளியிடுவதே தினமலர் நாளிதழின் வாடிக்கையாக உள்ளது.


ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே ரேஷன் கார்டு என்று சொல்லும் ஒன்றிய அரசு (பாரதிய ஜனதா ) தற்போது தமிழ்நாட்டுக்குள் ஒரு பகுதியை தனி மாநிலமாக பிரிக்க போகிறார்களாம்,அது தனி யூனியன் பிரதேசமாக்கப்படுமாம்!இதற்க்கு காரணம் என்ன சொல்கிறார்கள் என்றால் நீட் தீர்வின் பாதிப்பை கண்டறிய குழு அமைத்தது,ஒன்றிய அரசு என்று சொல்வது,ஜெய் ஹிந்த் என்று சொல்லாதது என்றெல்லாம் பள்ளிப்பிள்ளைகள் கிள்ளிவிட்டான் என்று ஆசிரியரிடம் சொல்வது போல மாநில அரசின் உரிமை செயல்பாடுகள் எல்லாம் ஒன்றிய பாரதிய ஜனதா அரசை நோகடிக்கிறதாம்.


ஒன்றிய அரசை மத்திய புண்படுத்தி விட்டதாம் அதற்காக ஒன்றிய அரசு மாநில அரசின் ஒரு பகுதியையே பிரிக்க போகிறதாம்,இந்த செய்தியை ஒரு செய்தி என்று ஒரு நாளிதழ் தலைப்பு செய்தியாக வெளியிடுகிறது.


இந்த செயல் மிக வன்மமான கீழ்த்தரமான செயல்பாடாக உள்ளது.


எவ்வித ஆதாரப்பூரவமற்று ஒரு மாநிலத்தை உடைப்போம் பிரிப்போம் என்று செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை எரித்து தமிழ் நாடு முழுவதும் பல இடங்களில் பெரியாரிய இயக்கங்கள் போராட்டம் நடத்தினர்.


தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் கோவையில் பெரியார் படிப்பகம் முன்பும்,திருச்சி தினமலர் அலுவலகத்தை முறையிட்டு போராடினர்,போராட்டத்தில் மே 17 இயக்க தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் கலந்து கொண்டு தினமலர் நாளிதழை கொளுத்தினார்.2000 ஆண்டுகளுக்கு மேலாக சாதிய நோய் மக்களை அழித்து கொண்டு தான் வருகிறது அப்படி இருக்க சாதி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்க பட்டால் இந்த நாடு என்னவாகும்.


சாதி அடிப்படையில் தமிழ் நாட்டை துண்டாட நினைக்கும் பாரதிய ஜனதா கட்சியையும்,அதற்க்கு துணை போகும் பார்ப்பனிய பத்திரிகை தினமலரையும்  மக்கள் மன்றத்திலும்,சட்ட பூர்வமாகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.அதுவே ஜனநாயகத்தை காக்கும் மருந்தாகும்.

Leave Comments

Comments (0)