கொரோனா மரணங்களும் கையாலாகாத அரசுகளும் !

/files/A1-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-2021-04-18-11:31:52.jpg

கொரோனா மரணங்களும் கையாலாகாத அரசுகளும் !

  • 25
  • 0

தவ.செல்வமணி


182 அடி உயரத்திற்கு 3000 கோடி செலவில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுடைய சிலை எங்குள்ளது என்று தெரியுமா !


ஒன்றரை இலட்சம் மக்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவுக்கு 800 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ள,உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் எங்கேயுள்ளது என்று தெரியுமா !இந்த படத்திலே உள்ளது போன்ற தலைசிறந்த மருத்துவ வசதி உள்ள மாநிலம் தான்.


இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்ல வந்த மீட்பர் என்று பாரதிய ஜனதா கட்சியினரால் பரப்பப்படும்,நரேந்திர மோடி 15 ஆண்டுகள் ஆட்சி செய்த குஜராத் மாநிலம் தான்.


இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது பரவிவருகிறது,ஆயிரனக்கான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.


நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தோற்றும் அதிகரித்து கொண்டே போகிறது.


இது ஒன்றும் முதல்முறை அல்ல,சென்ற ஆண்டின் தொடக்கத்தில் பரவி பின் விஸ்பரூபமெடுத்த ஒரு தொற்று நோய் அப்படி இருக்க  அரசுகள் எப்படி இருக்க வேண்டும் ! 


என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ! ஒரு வைரஸ் என்றால் நிச்சயம் இரண்டாவது அலை மூன்றாவது அலை என நிச்சயம் பரவும் இதை மத்திய சுகாதாரத்துறை ஆய்ந்து நடவடிக்கை எடுத்ததா !


சென்ற ஆண்டே நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உலகை அச்சுறுத்திய கொடிய வைரசுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ன தெரியுமா !


எல்லோரையும் ஒன்று கூடி கைதட்ட சொன்னது,இன்னொரு நாள் எல்லோரும் தன வீட்டு முன்பு விளக்கை ஏற்றி வைத்தார்கள்.


பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்களே கொரோனாவுக்கு மாட்டு மூத்திரத்தை தடுப்பு மருந்து என்றார்கள்! ஒரு மத்திய அமைச்சர் கோ கொரோனா கோ கொரோனா என்று கோஷமிட்டார்.


இப்படி மருத்துவரீதியில் மிகச்சிறப்பான நடவடிக்கை என்று சொல்லிக் கொள்ளும் படியாக ஏதும் இல்லாமல் மூட நம்பிக்கையுடன்,அடிப்படை அறிவற்ற செயல்களே அரங்கேறின அதோடு மட்டுமல்லாது,நிர்வாக சீர்கேடுகளால்,அரசின் கையலகத்தனத்தால் இலட்சத்திற்கும் மேற்பட்ட புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்தே தனது சொந்த ஊரை சென்றடைந்தனர்,மத்திய அரசு எந்த வித போக்குவரத்து வசதியையும் ஏற்படுத்தி தரவில்லை.தற்போது கொரோனா இரண்டாவது அலையை எடுத்துக் கொண்டோமானால்,பல இலட்சம் பேர் கூடும் கும்பமேளா நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்து நடத்தி வருகிறார்கள்,இதுவரை 30 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள்,எந்த வித பாதுகாப்பு நடவடிக்கையும் இன்றி அதில் கலந்து கொண்டுள்ளார்.


குஜராத்,உத்திரபிரதேசம்,உத்தரகாண்ட் போன்ற வடஇந்திய மாநிலங்களில் உள்ள மருத்துவமனையில் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பது அவலத்திலும் அவலம்.


அதுவும் நோயாளிகளுக்கு கட்டில் கூட இல்லாமல் ஒரே கட்டிலில் மூவர் நால்வர் கூட படுக்க வைக்கப்படுகிறார்கள்.


அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் பல மரணங்கள் நடக்கிறது.


வடஇந்தியாவில் காசியாபாத்தில் நோயாளிகள் ரோட்டோரத்தில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.இதோடு மட்டுமல்லாது நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை மறைந்து காவல்துறையை கொண்டு மறைமுகமாக கொரோனாவில் இறந்த பலரை ,வேகவேகமாக மறைவாக வைத்து எரித்து விடுகிறார்கள்.


இதை தான் இவர்கள் குஜராத் மாடல் குஜராத் வளர்ச்சி என்கிறார்களா !


ஒவ்வொரு உயிரும் எத்தனை விலைமதிக்க முடியாதது அது இந்த மதவாத அடிப்படை அறிவற்ற கையாலாகாத பாரதிய பந்தாவின் மத்திய மணிலா அரசின் அலட்சியத்தால்,அறிவின்மையால் போய்க்கொண்டே இருக்கிறது.திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சில வீணர்கள் கதை காட்டுகிறார்கள்,இந்தியாவின் வாடா இந்திய மாவட்டங்களில் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்ட வண்ணமும்,அதை கட்டுப்படுத்த முடியாத கையாலாகாத அரசும் இருக்கும் நிலையில் தமிழத்தில் உலக தரத்தில் மருத்துவ கட்டமைப்புகளும்,அனைத்து வித அடிப்படை வசதிகளும் கொண்டுள்ளது என்பதை மறவாதீர்.


தமிழத்தின் வளர்ச்சியை,அடிப்படை கட்டமைப்பை நெருங்கிட தான் இந்தியாவின் பல மாநிலங்கள் முயற்சிக்க வேண்டாம்னே தவிர,தமிழகம் எந்த மாநிலத்தையும் பின்பற்ற வேண்டியதில்லை.கோவில் கட்டுவதிலும் சிலை வைப்பதிலும்,மைதானம் கட்டுவதிலும் முனைப்பு காட்டும் மோடி அவர்களின் அரசு முதலில் அடிப்படை வசதிகள் கொண்ட மருத்துவமையை கட்ட வேண்டும்.


சமீபத்தில் கூட இந்தியா முழுவதும் நிதி திரட்டி மக்கள் பணத்தில் ராமர் கோவில் கட்ட போகிறார்கள்,அதற்க்கு இந்திய பிரதமரும் காய் எடுத்து கொடுத்துள்ளார்,அதன் பூஜை நிகழ்ழியில்.


மக்களின் பாதுகாப்பில்,சுகாதாரத்தில்,வாழ்வாதாரத்தில் துளியும் அக்கறை இல்லாத மோடி அரசு மதவாதத்திலும்,கார்ப்பரேட்,பார்ப்பனிய நலனை மட்டுமே தனது பணியாக கொண்டுள்ளது.


இத்தகைய பாரதிய ஜனதா கட்சியின் முட்டாள்தனத்தை,மடமையை இந்திய மக்கள் உணரவேண்டும்.

Leave Comments

Comments (0)