சென்னை ஐஐடி முற்றுகை தோழர்கள் கைது!

/files/1-2020-12-22-21:26:02.jpg

சென்னை ஐஐடி முற்றுகை தோழர்கள் கைது!

  • 14
  • 0

T.செல்வமணி


கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஐஐடியில் அரங்கேறும் அவலம் என்கிற தலைப்பில் சென்னை ஐஐடியில் ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்ற படாமல் SC, ST, BC, MBC சமுகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதையும், பார்பனர்களின் அதீத ஆக்கிரமிப்பையும் அவர்களால் சமூக நீதி குழியில் புகைக்கபடுவதையும் விளக்கி ஆதாரங்களுடன் கட்டுரையாக எழுதி இருந்தேன். 


தற்போது இடஒதுக்கீட்டின் மூலம் மிச்சம் இருக்கும் சிறிது அளவிலான ச‌மூக‌ நீதியையும் அழிக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வந்துள்ளது. 


இந்தியா முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிலையங்களில் பேராசிரியர்கள்,இணை பேராசிரியர்கள்,உதவிப் பேராசிரியர்கள் ஆகிய நியமனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,அட்டவணை சாதியினர் மற்றும் அட்டவணை பழங்குடியினர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பணிகள் வழங்கக் கூடாது என்று பேராசிரியர் ராம் கோபால் ராவ் பாஜக அரசிடம் பரிந்துரை செய்துள்ளார். 


ஏற்கனவே ஐஐடி கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசில் உள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் ஒரு சதவீத பிற்படுத்தப்பட்டோரே பணியில் உள்ளனர்,


SC, ST ஆ‌சி‌ரிய‌ர்களுக்கான பணிகளும் நியமனம் செய்யாமல் உயர் சாதி பார்பனர்களே அதையும் அனுபவித்து வருகிறார்கள். 


இந்த நிலையில் பேராசிரியர் ராம் கோபால் ராவ் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால் சமூக நீதி குழி தோண்டிப் புதைக்கப்படும். 


இதற்க்கு முந்தைய நிலையை பார்ப்போம், 


பழங்குடியினருக்கான பணியிடங்கள் 51 அதில் வெறும் மூன்று நபர்களையும், பட்டியல் இனத்திற்கான 30 பணியிடங்களில் வெறும் 7 நபர்களையும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான  பணியிடங்கள் 186 அதில் வெறும் 66 பேரை நிரப்பி உள்ளார்கள் ஆனால் பொதுப்பிரிவில் (OC) 342 பணியிடத்தில் 599 பேரை நிரப்பி உள்ளார்கள்..
பழங்குடியினருக்கான மொத்த இடத்தில் வெறும் 6.7% இடங்களும், பட்டியலினருக்கான மொத்த இடத்தில் வெறும் 23.3 % இடங்களும் (OBC) பிரிவினருக்கு 31.9% மட்டுமே பணியிடங்களை நிரம்பியுள்ளனர். இப்படி BC, MBC, SC, ST  மக்களை வஞ்சித்து பொதுபிரிவினர்  175% பணியிடங்களில் தங்களை  நிரப்பி கொண்டுள்ளனர்.


இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும் போதே இந்த நிலையெனில் 

ரிசர்வேஷன் அடிப்படையில் பணி நியமனம் கூடாது என்கிற பேராசிரியர் ராம் கோபால் ராவ் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உழைக்கும் மக்களின் நிலை என்னவாகும்! 


BC, MBC, SC, ST மக்களை பாதிக்கும் இந்த குழுவின் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்த கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை ஐஐடியை முற்றுகையிடும் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (22--12--2020) நடைபெற்றது. 


முற்றுகை போராட்டத்திற்கு கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை.ராமகிருட்டிணன் அவர்கள் தலைமை தாங்கினார். 


போராட்டத்தில் ஈடுபட்ட 69 தோழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


மேலும் கடும் தள்ளுமுள்ளோடு பொதுச்செயலாளர் கோவை.இராமகிருட்டிணன் அவர்களையும்,ஏனைய தோழர்களையும் கைது செய்து அதிகாரத் திமிருடன் நடந்து கொண்ட காவல்துறையின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.
ஐ.ஐ.டி யில் நடக்க போகும் அநீதியை தட்டிக் கேட்க வாய் திறக்காத மாநில அரசு மக்களுக்காக போராட்டம் செய்யும் தோழர்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது.

Leave Comments

Comments (0)