சென்னையின் சினிமா சரணாலயம் :

/files/Sized-2022-04-18-10:53:19.jpg

சென்னையின் சினிமா சரணாலயம் :

  • 10
  • 0

தவ.செல்வமணி


உங்களுடைய செல்போனை எடுத்து கொள்ளுங்கள் அதன் கூகுள் செயலியில் இந்தியாவில் சினிமா புத்தகங்கள் என்று டைப் செய்யுங்கள் நிச்சயம் திரையில் வருவது ப்யூர் சினிமா புத்தக அங்காடியாகத் தான் இருக்கும்.

ஆக இந்தியாவில் தற்போது சினிமாவிற்க்கென்றே பிரத்தியேகமாக இயக்குதலில் உள்ள ஒரே புத்தக நிலையமாக இருப்பது தமிழ் ஸ்டுடியோவின் ப்யூர் சினிமா புத்தக அங்காடி தான்.


நல்ல சினிமாவையும் நல்ல படைப்பாளிகளையும் உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் தொடங்கப்பட்ட தமிழ் ஸ்டுடியோ.காம் தற்போது தமிழ் ஸ்டுடியோவாக பெரும் மக்கள் இயக்கமாக உருப்பெற்றுள்ளது.


பெரு முதலாளிகளின் கைப்பாவையாக சினிமா எனும் கலை மூழ்கிட கூடாது அது மக்களுக்கான கலை எளிய மக்களும் அதில் பங்கு பெற வேண்டும் என்கிற நோக்கில் தமிழ் ஸ்டுடியோ எனும் இயக்கம் கடந்த 16 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது,சுயாதீனமாக மாற்று சினிமாவை முன்னெடுக்கும் ஒரு களமாக இருப்பதால் குறும்பட திரையிடல்கள்,பவுர்ணமி இரவு திரையிடல்,இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழா,இந்தியாவின் முதல் தலித் திரைப்பட விழா,இந்தியாவின் முதல் பெண்கள் திரைப்பட விழா ,சினிமாவிற்கென தீமெட்டிக் சிறப்பிதழ் படச்சுருள்,சினிமாவிற்கென்றே பிரத்தியேக பதிப்பகம் பேசாமொழி,சினிமாவிற்க்கென்றே தனி புத்தக நிலையமாக பியூர் சினிமா புத்தக அங்காடி,இந்திய மக்களின் சமூக விடுதலைக்கு தன் வாழ்வை அர்ப்பணித்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 14,2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.ஏன் 2016 ஆம் ஆண்டு என்பது தமிழ் சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்ட ஆண்டாகும்,தமிழ் சினிமா 100 வருடங்கள் இயங்கிய பின்பு தான் தமிழ் சூழலில் ஒரு சினிமா புத்தக நிலையமே உருவாகிறது,அதையும் கட்டமைத்த பெருமை தமிழ் ஸ்டுடியோ என்னும் மக்கள் இயக்கத்தையே சேரும்!


நீங்கள் சினிமா கற்றுக் கொள்ள வேண்டுமா,சினிமாவில் நுழைய ஆசை படுபவரா,நடிகராக வேண்டுமா ? இயக்குனராக வேண்டுமா ? ஒளிப்பதிவாளராக வேண்டும் சினிமாவில் எந்த துறையில் சாதிக்க விரும்பினாலும் நீங்கள் ப்யூர் சினிமா புத்தக அங்காடிக்கு வாங்கல் புத்தகங்கள் வாங்குங்கள் உங்கள் சினிமா அறிவை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.


கிட்ட தட்ட 70 க்கும் மேற்பட்ட புத்தகங்களை பேசாமொழி  பதிப்பகமே வெளியிட்டுள்ளது,அது மட்டுமல்லாது சினிமாவின் அனைத்து விதமான புத்தகங்களும் இங்கே கிடைக்கும்.

சினிமா வாய்ப்பு தேடி வீதி வீதியாக அலைபவர்கள் நேரத்தை வீணாக்காமல்  ப்யூர் சினிமாவை நோக்கி வாருங்கள் உங்கள் நோக்கத்தை நோக்கிய பாய்ச்சல் வீரியப்படும்.இத்தகைய அழகான பிரமாண்டமான சினிமா புத்தக நிலையம் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வடபழனியில் இயங்கி வந்தது,கொரோனா கொண்டு வந்த பெரும் நெருக்கடிகளால்,பொருளாதார இழப்பீடுகளால் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,தற்போது வளசரவாக்கத்தில்  ப்யூர் சினிமா புத்தக நிலையம் இயங்கி வருகிறது,இது போல எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் தமிழ் ஸ்டுடியோவின் மக்கள் பணி என்பது எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.


பல்வேறு மொழிகளில் வெளியான சினிமா தொழில் நுட்ப புத்தகங்கள் பலவும் தமிழ் மொழியில் சிறந்த மொழி நடையில் மொழி பெயர்க்கப்பட்டு நம் தமிழ் வாசகர்களுக்காக வெளியிட்டுள்ளோம்.


கலை மக்களுக்கானது,அந்த கலை எளிய மக்களின் கைகளில் தவழ்ந்தால் தான் அது மக்களுக்கானதாக இருக்கும்,அந்த நோக்குடன் தான் தமிழ் ஸ்டுடியோ களமாடி வருகிறது,சமூக சினிமா என்கிற தனி சினிமா வகை தமிழ் சினிமாவில் உருவாகும் அதற்க்கு அடிப்படை காரணமாக தமிழ் ஸ்டுடியோ இயக்கம் செயலாற்றும்.
சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரும் ப்யூர் சினிமாவுக்கு வாங்க,உங்க சினிமா அறிவையும்,ரசனையையும் வளர்த்து கொள்ளுங்கள்,வழிகாட்டல் இல்லாத மற்றவர்களுக்கும் வழிகாட்டுங்கள்.


கினோ,

கினோ 2.0

இந்திய நடிப்பு இலக்கணம்

நிறமி 

படத்தொகுப்பு 

திரைக்கதை எனும் பூனை 

ஒளி எனும் மொழி 

மான்டேஜ் 

ஷாட் பை ஷாட் 

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் 


இந்த பத்து புத்தகங்கள் உங்களை முழுமையான ஒரு பிலிம் மேக்கராக மாற்றும்.

Leave Comments

Comments (0)