மதுரையில் ரத யாத்திரை ?

/files/bjp-rath-yatra-2021-03-05-11:36:39.jpg

மதுரையில் ரத யாத்திரை ?

  • 2
  • 0

செல்வமணி .T

இந்த புவியில் மானுடம் தோன்றியது ,மனிதன் தன் தேவைகளுக்காக பலவற்றை கண்டுபிடித்தான் ,உணவு பொருளை சமைக்க நெருப்பு ,பொருட்களை நகர்த்த சக்கரம் இப்படியான கண்டுபிடிப்புகள் ,

பய உணர்வை போக்க கடவுளை ஆதி மனிதன் கண்டுபிடித்து ,அவனாகவே அவன் பயம் கொள்ளும் ஒவ்வொன்றையும் கடவுளாக மாற்றிக் கொண்டான் .

கடவுளை காப்பாற்ற மதம் ,இந்த மதங்களை கட்டமைக்க சாதிகள் ,என ஆதிக்க உணர்வு கொண்டவர்கள் உழைக்கும் மக்களை சுரண்ட இவைகளை கருவியாக இன்று வரை பயன்படுத்தி வருகின்றனர் .

தேர்தல் அரசியல் என்பது மக்கள் பணி செய்ய மக்கள் மக்களுக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் ஒரு செயல்பாடே ,ஆனால் அந்த அரசியல் சாதி அரசியலாகவும் ,மத அரசியலாகவும் உருமாறியுள்ளது .

இறையை நம்புவதும் ,நம்பாததுவும் அவரவர் விருப்பம் ,இறை வழிபாடும் அவரவர் உரிமை அப்படி இருக்க தேர்தலுக்குள் இறைவன் எப்படி நுழைந்தான் ,தங்களது சுயலாப அரசியலுக்காக இறைவனை பயன்படுத்துவதே அயோக்கியத்தனம் தானே.முதன் முதலாக அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி, கடந்த 1990-ம் ஆண்டு அத்வானி தலைமையில் மிகப்பெரிய ரத யாத்திரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் கலவரம் நடந்தது.


அக்கலவரத்தில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும் ,200 க்கும் மேற்பட்ட இந்துக்களும் கொலை செய்யப்பட்டனர் .


ஆர் எஸ் எஸ் அமைப்பும் ,பாரதிய ஜனதா கட்சியும் தங்களது வளர்ச்சிக்காக இந்த ரத்தயாத்திரையையும் ,அதன் பின்னரான கலவரத்தையும் திட்டமிட்டு நடத்தினார்கள் என்பது நாடறிந்த செய்தியே ,அதன் படி அதற்க்கு அடுத்த ஆண்டே பாஜக ஆட்சியையும் பிடித்தது ,பாபர் மசூதியும் இடிக்கப்பட்டது .இந்திய இறையாண்மையை சுக்குநூறாக நொறுக்கும் வகையிலேயே அந்த வழக்கில் தீர்ப்பும் வந்து விட்டது ,பாபர் மசூதி இருந்த அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என ,இதற்க்கு இஸ்லாமிய அமைப்புகளும் ஒப்புக் கொண்டனர் ,வேறு வழியில்லாமல் என்பதே சரியாக இருக்கும் .


சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஆதரவோடு கேரளாவிலும் இன்னும் சில மாநிலங்களிலும் நடத்தினார்கள் .


அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவது, இந்தியாவில் ராம ராஜ்ஜியத்தை நிறுவுவது, ராமாயணத்தை பாடத்திட்டமாகக் கொண்டு வருவது, உலக இந்து தினம் உருவாக்கி கடைப்பிடிப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த யாத்திரை நடைபெற்றது .


இதன் இன்னொரு வடிவமாக தமிழக பாரதிய ஜனதா கட்சி சில மாதங்களுக்கு முன் வேல் யாத்திரை நடத்தி காட்டினார்கள் .அரசு அனுமதி மறுத்தாலும் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி நடத்திக்காட்டினார்கள் .தற்போது ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதி கேட்டுள்ளனர் ,அதற்க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையும் அனுமதி வழங்கியுள்ளது 


ராமர் கோயில் கட்டுமானத்திற்காக ஏற்கனவே பல்லாயிரம் கோடிரூபாய் திரட்டப்பட்டிருக்கும் சூழலில் இந்த ரதயாத்திரை கட்டுமானப் பணிகளுக்காக என்பது படு அபத்தமானது. எனவே, இது மதவாத அரசியலை வலுப்படுத்துவதற்கு நடத்தப்படும் யாத்திரை என்பதே உண்மை. இதை அனுமதிப்பது சமூக அமைதிக்கு ஆபத்தானது.


இந்துத்துவா என்பது சமூகநீதிக்கு எதிரானது ,சமத்துவத்துக்கு எதிரானது ,தலித்துக்களுக்கு எதிரானது ,சிறுபான்மை யினருக்கு எதிரானது ,பெண்களுக்கு எதிரானது ,இதை மிக எளிதாக சொல்லிவிடலாம் இந்துத்துவா அரசியல் பார்பனீயத்துக்கும் ,பெரு முதலாளிகளுக்குமானது ,மக்களுக்கு எதிரானது இதை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .


தேர்தலில் வெற்றி பெற கொள்கையை ,கோட்பாடுகளை பேசலாம் அதை விடுத்து ராமரையும் ,முருகனையும் முன்னே நகர்த்தி ஊட்டு கேட்பது பகுத்தறிவில்லாத மக்களை பலிகடா ஆக்கும் முறையே அன்றி வேறென்ன .


அரசியல் நோக்குக்காக சாதியை ,மதத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் ஜனநாயகத்துக்கு எதிரான இப்படியான நிகழ்வுகளை தடை செய்ய வேண்டும் .இவர்களின் நயவஞ்சகத்தை அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொண்டு அவர்களை புறக்கணிக்க வேண்டும் .

Leave Comments

Comments (0)