திருப்பு முனையை ஏற்படுத்தியதா ? சென்னை சர்வதேச  திரைப்பட விழா !

/files/62067551-1613376352-2021-02-26-23:07:01.jpg

திருப்பு முனையை ஏற்படுத்தியதா ? சென்னை சர்வதேச  திரைப்பட விழா !

  • 2
  • 0

செல்வமணி .T

விழாக்கள் என்பது ஓர் ஒன்றுகூடல் ,ஓர் அழகியல் ,ஓர் அன்பு பகிர்வு ,அப்படி வேற்றுமைகள் களையப்பட,பாகுபாட்டில் பாழ்பட்டுப் போன மானுடம் தனது களைகளை கலைந்து விட்டு ஒன்றிணைந்து கொண்டாடுவது .

அதன் கலை வடிவ நீட்சி தான் திரைப்பட விழாக்கள் ,உலகில் அதிக பார்வையாளர்களை கொண்ட ஒரு கலை வடிவம் சினிமா தான் .உலகெங்கும் உள்ள பல நாடுகளின் தலைசிறந்த படைப்புகளை பார்க்கின்ற மக்கள் அறிவு வளத்தை ,அறத்தை ,சினிமா கலையை கற்றுக் கொள்வதற்கான பள்ளிக்கூடமாகவும் ,பறந்து பட்ட மானுட பார்வையையும் அது நிச்சயம் கொடுக்கும் .பல்வேறு நாடுகளின் பண்பாடு ,கலாசாரங்களை நாம் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் .

அதுவும் உலகில் அதிக திரைப்படங்கள் எடுக்கப்படும் நாடு இந்தியா ,உலகில் அதிக சினிமா பார்வையாளர்களை கொண்ட நாடும் இந்தியா தான் .நம் தென்னிந்தியாவின் சினிமா தலைநகராக விளங்கும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா 18 வது ஆண்டாக நடந்து முடிந்துள்ளது ,தங்கராஜ் என்னும் நபரின் கடின உழைப்பில் தொடங்கி தமிழக அரசின் உதவியுடனும் அமைப்பிகளின் உதவியுடனும் நடந்தேறிவருகிறது .


18 ஆண்டுகளுக்கு முன்பு நம் தமிழ் மண்ணில் சினிமா ரசனையை மக்கள் மனதில் விதைக்க ,உலக சினிமாவை நம் மக்களுக்கும் கொண்டு சேர்க்க இவர்கள் எடுத்துக் கொண்ட இந்த முயற்சி பெரும் மாற்றத்தின் வித்து .


கொரோனா தொற்றினால் கால தாமதமாகவே இந்த ஆண்டு பிப்ரவரி 18 முதல் 25 வரை ஒரு வாரம் நடைபெற்றது .


திரைப்பட விழாவின் நோக்கமாக இருக்க வேண்டியது என்னவெனில் அது உலக சினிமாவை வெகு சனத்திடம் கொண்டு சேர்க்க வேண்டும் .

அந்த நிலையை இவ்விழா நிறைவேற்றியதா ! என்று நாம் கேட்டோமானால் 90 சதவீத பார்வையாளர்கள் சினிமா துறை சார்ந்தவர்களாகவும் ,திரைப்பட கல்லூரி மாணவர்களாகவுமே இருந்தார்கள் .இதை குறையென்று குறிப்பிட வில்லை வெகு சனத்தை சென்று சேர்ந்தால் தான் அது நிறையாகும் .


சில பார்வையாளர்களின் குற்றச்சாட்டு என்னவெனில் இந்த ஆண்டு ,திரைப்பட தேர்வு சரியில்லை ,சப் டைட்டில் சரிவர பொருத்தப்படவில்லை என்றும் கடிந்துங் கொண்டனர் ,மற்றபடி பலரும் பல திரைப்படங்கள் தங்களை கவர்ந்ததாகவும் ,நிறைய கற்றுக் கொண்டதாகவும் சிலாகித்தார்கள் .


சிறந்த எழுத்தாளர்களையும் ,திரைப்பட கலைஞர்களையும் கூட்டி வந்து இந்த முறை முதல் முறையாக மாஸ்டர் கிளாஸ் நடத்திய விதம் நன்று .


இந்த வருடத்தின் மிக முக்கிய சிறப்பு என்னவெனில் பல புதிய இயக்குனர்கள் ,தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது உண்மையில் சினிமா ஜனநாயக தன்மை அடைவதற்கான ஆரம்ப முயற்சிகளில் இதுவும் ஒன்று .


இன்றைய இணைய உலகில் எல்லோரும் ஒரு கைபேசியில் வாழ்வை நடத்திக் கொண்டு இருக்க ,எப்படி திருட்டு விசிடிக்கள் சினிமாவுக்கு நோயாக அமைந்ததோ ! அதை போல இணையதளம் மூலம் படம் பார்ப்பது சினிமா துறையை பெரிய அளவில் சீரழித்து வருகிறது.

என்ன தான் நமது கைகளுக்குள்ளேயே அனைத்து திரைப்படங்களும் வந்து விட்டாலும் ,திரையரங்கு மூச்சு விட்டால் தான் திரைப்படங்களும் உயிர் வாழும்திரையரங்கு கொடுக்கும் அனுபவம் என்பது உயிர்கள் இணைவின் போது கிடைக்க கூடிய இன்பத்திற்கு இணையானது ,நவீன வசதிகளால் ஏற்கனவே முடங்கி கிடந்த திரையரங்கு தற்போது கொரோனாவை காரணம் காட்டி மக்கள் திரையரங்கை தள்ளி வைத்துள்ளனர் என்றே சொல்லலாம் அதை கட்டுடைக்க வேண்டிய பணியை செய்யவேண்டியது திரைப்பட விழாக்கள் தான் உலக நாடுகளே இணையத்தில் பிலிம் பெஸ்டிவளை நடத்தி விட்டு போன போதும் இந்தியாவில் நம் தமிழக மண்ணில் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தில் சென்னை சுயாதீன திரைப்பட விழா நடைபெற்றது அதன் பிறகு திரையரங்கில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட திரைப்பட விழா  சென்னை சர்வதேச திரைப்பட விழா தான் .


வயது என்பது வெற்று எண் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் Indo Cine Appreciation Foundation மற்றும் PVR அமைப்பின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் சுழன்று சுழன்று உழைத்துத் கொண்டிருந்தனர் .அவர்களின் அந்த உழைப்பின் பலனே இந்த நிகழ்வு .


அரசு நிதியில் இந்த விழா நடைபெற்றாலும் அரசுக்கு ,ஆதிக்கத்துக்கு எதிரான திரைப்படங்களையும் திரையிட்டது இவர்களின் நேர்மையையே காட்டியது .அரசு நிதி என்பதே மக்களின் நிதி தான் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று .


ஈரானிய திரைப்படங்கள் ,கன்னிமாடம் போன்ற சமூக நீதி திரைப்படங்களும் இடம்பெற்றது .


என்னதான் நிர்வாகிகளின் உழைப்பு உறுதியாக வெளிப்பட்டாலும் ,உணர்வு ரீதியாக இந்நிகழ்வை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே நிதர்சனம் .


திரைப்படங்கள் ஓடிக்கொண்டு இருக்கும் போதே பார்வையாளர்கள் பாதியில் வெளியேறுவதும் ,பாதியில் வந்து திரைப்படங்கள் பார்ப்பதுமாகஇருந்தனர் .


 இப்படியான மக்கள் மத்தியில் இது போன்ற முன்னெடுப்புகள் இன்னும் தீவிரமாக நடைபெறவேண்டிய தேவையுள்ளது .


மற்றுமொரு விடயம் என்னவெனில் சென்னையை தாண்டி இந்த நிகழச்சி பெரிதாக யாருக்கும் தெரியவில்லை என்பதே நிதர்சனம் .


தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் இப்படியான திரைப்படங்கள் நடந்தால் தான் அது தமிழ் மண்ணில் ஒரு கலை புரட்சியாக மாறும் அந்த புரட்சியை அரசின் ,நிறுவனங்களின் உதவியும் ,ஒத்துழைப்பும் ,ஆதரவும் கொண்ட நீங்கள் நடத்தி காட்டுங்களேன் .


அதுமட்டுமின்றி நிர்வாக பொறுப்பில் அனைத்து தரப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டால் தான்  நிச்சயம் திரைப்பட தேர்வும் ,திரைப்பட விழாவும் பெரிய உச்சத்தை அடையும்.

அது தான் இந்த திரைப்பட விழாவை  ஜனநாயக தன்மையுடன் நடைபெற வழிவகுக்கும் .வானுயர்ந்து நிற்கும் ஆலமரம் ஓர் சிறிய விதையில் இருந்து தான் முளைத்திருக்கும் அப்படி நம் தென்னிந்தியாவில் பெரும் முன்னெடுப்பாக தொடங்கப்பட்ட சென்னை சர்வதேச திரைப்பட விழா என்பது நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியதும் ,பாராட்டுக்கு உரியதும் தான்.


தமிழ் சினிமா துறையில் மாற்று சினிமா துளிர்விட ஆரம்பித்ததற்கு இவர்களின் பங்கும் உண்டு ஆனால் இவர்களின் பணி என்பது இத்தோடு மட்டும் முடிந்துவிட்டதல்ல.


பிள்ளையை பெற்று விட்டோம் வளர்ப்போமே என்பது போல் அல்லாமல் இன்னும் வீரியமாக ,அழுத்தமாக ,சமத்துவ ,சமுகநீதி ,சனநாயக கருத்தியலையும் கலைவழி கொண்டு செல்வதில் முனைப்பு கட்டினால் சென்னை திரைப்பட விழாவும் உண்மையில்  மெச்சத்தகும் ,தமிழ் சூழலில் வாழும் மக்களின் சினிமா ரசனை வளர்வது  மட்டுமின்றி மனிதமும் ,வாழ்வியலும் மேம்படும் அந்த பெரும் பொறுப்பு உங்களுக்கும் உண்டு என்பதை உணருங்கள் .

Leave Comments

Comments (0)