மாட்டுக் கறியும் சாகித்திய அகாடமி விருதும் !

/files/IMG_20180116_130005_HDR-2021-02-20-20:43:52.jpg

மாட்டுக் கறியும் சாகித்திய அகாடமி விருதும் !

  • 7
  • 0

செல்வமணி .T


பீப் ப்ரை ,பீப் பிரியாணி ,பீப் சுக்கா என மாட்டுக் கறி விதவிதமான பதார்த்தமாக ,நாக்கில் எச்சில் ஊரும் சுவையுடனும் உண்ண கூடிய உணவுகளில் இதுவும் ஒன்று .


சைவம் சாப்பிடுபவர்கள் மட்டும் தான் சுத்தமானவர்கள் என்று போலி பிப்பத்தை எப்படி உருவாக்கி வைத்திருக்கிறார்களோ ! அதே போல்ஸ் அசைவத்திலும் கறி வகைகளில் கோழி ,ஆடு சாப்பிடுபவர்கள்கள் உயர்வானவர்கள் மாட்டுக்கறி ,பன்றிக்கறி என்கிற வார்த்தைகளை கேட்டாலே முகம் சுளிப்பவர்களும் உள்ளார்கள் .

ஒருவர் என்ன உடை உடுத்த வேண்டும் ,என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் ,அடுத்தவர் தட்டிலும் ,அலமாரியில் இந்த சமூகத்துக்கும் ,அரசாங்கத்துக்கும் ,சாதிக்கும் ,மதத்துக்கும் என்ன வேலை ?மற்றவர்களின் உழைப்பை சுரண்டி வாழும் ஒரு கூட்டத்தாரால் உருவாக்கப்பட்டதே சாதி ,மதம் ,சடங்கு ,சம்பிரதாய மூட பழக்க வழக்கங்கள் எல்லாம் !


இப்படி மக்களை ஒடுக்க ,அவர்களை எழுச்சியுறாமல் வைத்திடவே தீட்டு ,தீண்டாமை ,அசுத்தம் என்றெல்லாம் வழக்குகளை உருவாக்கினார்கள் .


இப்படி பட்டியல்  மக்களும் சிறுபான்மை இஸ்லாமியர்களும் மாட்டுக்கறியை உண்பதாலேயே அந்த உணவை இழிவாக சித்தரித்தும் ,மாட்டுக் கறி உண்ணும் தலித் ,இஸ்லாமியர்கள் மீது கொலை வெறி தாக்குதலையும் நடத்தி வருகிறார்கள் .


அப்படி இந்துத்வவாதிகளால் ஓடும் ரயிலில் மாட்டிறைச்சி உண்டார் என்பதற்க்காக ஹாபிஸ் ஜுனைதீன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்படுகிறார் .இப்படி இந்தியா முழுவதும் இந்துவாவாதிகளால் பட்டியல் மற்றும் இஸ்லாமிய மக்கள் அடித்துக் கொல்லப் படும் நிகழ்வு தொடந்து அரங்கேறிக் கொண்டே தான் உள்ளது.


அதற்க்கு எதிராக மத்திய ,மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்த பாடில்லை !


ஏன் பிரதமரும் ,முதல்வரும் இந்த சம்பவங்களை கண்டித்து ,அப்பாவியாக உயிர் இழந்த அம்மக்களுக்கு இரங்கல் கூட தெரிவிப்பதில்லை .


விருது என்பது உழைப்பின் அங்கீகாரம் தான் என்றாலும் எதற்காக அந்த விருது வழங்கப் படுகிறது ,எவரால் அவ்விருது பெற்றுக் கொள்ளப் படுகிறது என்பதிலேயே அவ்விருதுக்கென்று தனி மதிப்பிற்கும் .அப்படி தனக்கு கிடைத்த சாகித்ய அகாடமி விருது தொகையில் 99,997 ரூபாயை ரயிலில் அடித்து கொலை செய்யப்பட ஹாஃபிஸ் குடும்பத்திற்கு வழங்கியுள்ளார் எழுத்தாளர் ராமானுன்னி .


பரிசுத்த தொகையில் மீதமுள்ள மூன்று ரூபாயை மட்டும் தன் படைப்பிற்க்கான அங்கிகாரம் என்கிறார் .


மேலும் முஸ்லீம் என்ற காரணத்தால் கொல்லப்பட்ட குடும்பத்திற்கு உதவியதால் தான் தான் ஒரு உண்மையான ஹிந்து என்றும் கூறினார் .


உண்மையில் அவர் ஒரு ஹிந்து என்பதை நிரூபிக்க வில்லை அவர் ஒரு உண்மையான மனிதர் என்பதை அறுதியிட்டு உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார் .

இந்த சம்பவம் மனிதநேயம் உள்ளவர்களுக்கும் ,மனிதநேயமற்றவர்களுக்கும் சமர்ப்பணம் .


மனிதத்தை மிஞ்சியது இவ்வுலகில் எதுவுமில்லை !

Leave Comments

Comments (0)