ஆன்லைன் சூதாட்டம் விளையாட தடை! ஆன்லைன் சூதாட்ட நிறுவங்களுக்கு?

/files/sdf-2020-11-22-19:01:09.jpg

ஆன்லைன் சூதாட்டம் விளையாட தடை! ஆன்லைன் சூதாட்ட நிறுவங்களுக்கு?

  • 8
  • 0


- T.செல்வமணி


ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டு மிக எளிதாக எல்லோர் கைகளிலும் கிடைத்து வருகிறது. விளையாட்டு மக்களை உற்சாகப்படுத்தவும், பொழுது போக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மனதைப் புத்துணர்ச்சியாக்கவும் உருவானது. எந்த ஒரு நல்ல செயல்பாட்டிலும் தீமையை விதைக்கும் நயவஞ்சக உலகில் விளையாட்டிலும் சூது என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள் அது பலரது வாழ்வை அழித்து, பல பெண்களை பாதித்தது, அதை அரசுகள் தடை செய்தது. சில நாட்களுக்கு முன்பு வரை ஊர்களில் ஏதோ ஒரு மூலையில்  பதுங்கி, பதுங்கி ஒரு சிலர் விளையாடி வந்தனர். அப்படி விளையாடிய ஒரு சூதாட்டத்தை இப்போது நவீன உலகில் பேராற்றல் கொண்ட கயவர்கள் இணையதளத்தில் மிக எளிதாக அனைவரும் விளையாடும் விதத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை அறிமுகப்படுத்தினார்கள். யாருக்கும் பயந்து, பதுங்கி விளையாட வேண்டிய அவசியமே இல்லை என்கிற நிலையில் தன் மீதும் சமுதாயம் மீதும் அக்கறை இல்லா நம் இளைய தலைமுறை ஏதேனும் ஒரு போதையில் மூழ்கி கிடப்பதையே விரும்பியது அப்படிப்பட்டவர்கள் இதற்க்கு அடிமையாகவே மாறிப்போனார்கள். 



இந்தப் சூதாட்ட பிணி பலரை சூழ்ந்துகொண்டது. இந்திய பிரபலங்கள் விராட் கோலி, தமன்னா உள்ளிட்டோர் இது சம்பந்தமான விளம்பரத்தில் நடித்தார்கள். ஏன் உலக அளவில் புகழ்பெற்ற ஐபிஎல் போட்டியையே ட்ரீம் லெவன் எனும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனம்தான் எடுத்து நடத்தியது. பல இளைய தலைமுறையினர் அதில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர் பலர் பணத்தை  இழந்துள்ளார்கள், பலர் பெரும் மன உளைச்சலுக்கு, மன அழுத்த நோய்களுக்கு ஆளானார்கள் சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்  விளம்பரத்தில் நடித்து வரும் தமன்னா மீதும் விராட் கோலி மீதும் மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வழக்கை தொடுக்கவி‌ல்லை ஆன்லைன் சூதாட்டதின் நிருவாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே நீதிமன்றத்திடம் முறையிடப்பட்டது, அவர்கள அவர்களை நடிக்கச் சொன்னா அந்த நிறுவனத்தின் மீது என்ன இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,இன்று 21 ,11 ,2020 ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்திருக்கிறது, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விளையாடுபவர்களுக்கு அபராதமும் விதித்துள்ளது. இது ஒரு நல்ல விஷயம் தான் ஆனாலும் தவறு செய்பவர்களை விட தவறு செய்பவர்களை தூண்டி விடுபவர்கள் தான் அதிக தண்டனை கொடுக்க வேண்டும் என்பது சரியான கருத்தாக இருக்கும்போது ஆன்லைன் விளையாட்டு விளையாடுவார்கள் மீது அபராதம் விதிக்கும் இந்த அரசு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களை தடை செய்தால் என்ன? பல சூதாட்ட நிறுவனங்கள் இன்னும்  இணையதளத்தில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது, பலரது பணத்தை, உயிரை அழித்த அவற்றின் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்? ஆன்லைன் சூதாட்ட நிறுவனர்களை எப்போது கைது செய்வார்களா? இல்லை எப்போதும் போல பெரு முதலாளிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு நீதி கைகட்டி நிற்கும், எப்போதும் பாதிக்கப்படுவதும், ஏமாற்றப்படுவது அடித்தட்டு மக்கள் தானே...


எல்லாவற்றிலும் பாதிக்கப்படும் அடித்தட்டு மக்களில் ஒருவராக ஒரு இளைஞன் ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கி தன் உயிரை மாய்த்துக் கொண்டார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இறக்கும் தருவாயில் அவர் எழுதிய தற்கொலை கடிதத்தை ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டை விளையாடும் அனைவரும் ஒரே ஒருமுறை படியுங்கள்...அல்லது அப்படி விளையாடும் உங்கள் அன்பு நிறைந்தவர்களுக்கு இதை பகிருங்கள்..





என்னை மன்னிச்சிடு மதி. என்னால ஒன்னும் பண்ண முடியல மதி. தூங்காம கண்ணெல்லாம் மங்கலா தெரியுது. உடம்பெல்லாம் போயி வீக் ஆயிடுச்சி மதி. நான் ஒரு ரூபா ரெண்டு ரூபா விடல மதி. கணக்குப் பாத்தா 30 லட்ச ரூபாய்க்கு மேல விட்ருக்கேன். தப்புதான். போதைமாதிரி விளையாடிட்டே இருந்துட்டேன். ஒரு நாளைக்கு ரூ.50,000 ஜெயிச்சாக்கா மத்த மூனு நாள்ல நம்மக்கிட்ட இருந்து ரெண்டு லட்ச ரூபா வெளில போயிடுது.

அது எனக்குப் புரியவே இல்ல. அது புரியாமலே விட்ட காசை புடிச்சிடலாம், இந்த டோர்னமெண்டுல அடிச்சிடலாம், அடுத்த டோர்னமெண்டுல அடிச்சிடலாம்னு பல டோர்னமெண்ட் விளையாடிட்டேன் மதி. கடைசி வரைக்கும் அவனுங்க நம்மள வச்சித்தான் செஞ்சானுங்கன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சி. தெரிஞ்சும் விளையாடினேன். இப்போக்கூட எனக்கு விளையாடனும்னு தோனுது. அந்த அளவுக்கு அதுக்கு அடிக்ட் ஆகியிருக்கேன். எப்படித்தான் நான் அடிக்ட் ஆனேன்னு தெரியல.


நான் உன்னை அந்த அளவுக்கு லவ் பண்ணேன் மதி. பசங்கள பாத்துக்கோ. ரெண்டு அக்கவுண்ட்லயும் கொஞ்சம் கொஞ்சம் காசு இருக்கும். இப்போக்கூட அந்த ஆன்லைன் ரம்மி மேல் ஆப்ல இருந்து 17,000 ரூபாய் உன் அக்கவுண்டுக்குத்தான் ரீடம் பண்ணிருக்கேன். அது திங்கக்கிழமை உனக்கு கிரெடிட் ஆயிடும். இடத்தை வித்துடு. நகையெல்லாம் வித்துட்டு மதுரையில உங்க அம்மா வீட்டுக்குப் போயி செட்டில் ஆயிடு. ஏன்னா எங்க வீட்டுலல்லாம் யாரும் உன்னை அந்தளவுக்கு பாத்துக்க மாட்டாங்க. என்னை மட்டும் மறந்துடாத மதி (உடைந்து அழுகிறார்). ஒன்றரை வருஷத்துல வாழ்க்கை இப்படி மாறிடுச்சி. எப்படி ஓடி ஓடி சம்பாரிச்சேன் தெரியுமா ? டிஸ்ட்ரிபியூஷன்ல அப்படி இருந்தேன் நான்.



இன்னைக்கு அந்த நெட்வொர்க்ல கேவலமா இருக்கேன். என்னால வேலையே செய்ய முடியல. அந்தளவு லட்சக் கணக்குல சம்பாரிச்சேன். ஆனால் இன்னைக்கு என் மூளை வேலை செய்யல. எல்லாமே மங்கிப் போயிடுச்சி. ஒரு காலத்துல இந்தியன் மொபைல் டிஸ்டிரிபியூஷன் பேரு தமிழ்நாட்டுக்கே தெரியும். அந்தளவுக்கு என் பேரை ஃபேமஸ் பண்ணி வெச்சிருந்தேன். ஆனால் இந்த ரம்மில நான் அடிக்ட் ஆனதால என்னால பிசினஸ் பண்ணவே முடியல. பசங்கள ஒழுங்கா பாத்துக்க முடியல. உன்னை என்னால பாத்துக்க முடியல. என்னைவிட்டு எல்லாமே போயிடுச்சி. என்னால என்னை மாத்திக்க முடியல. எனக்கு இதவிட்டா வேற வழியே தெரியல மதி. அந்த ஐடியாவுல (சிம்கார்டு நிறுவனம்) ரெண்டு லட்ச ரூபாய்க்கு மேல இருக்கு. அக்கவுண்ட்ல கொஞ்சம் கேஷ் இருக்கு. அது இல்லாம வீட்ல அந்த மஞ்சப் பையில கொஞ்சம் கேஷ் இருக்கு. பசங்கள பாத்துக்க மதி. இன்சூரன்ஸ், பாரதியார் பேங்கெல்லாம் க்ளோஸ் பண்ணிடு. ஒரு ரூபா, ரெண்டு ரூபாயா இருந்தாலும் எல்லாத்தையும் சுருட்டி ஒரே அமௌண்டா ஆக்கி எடுத்துட்டு உங்க ஊருக்குப் போயி. 5 லட்ச ரூபாய் இருந்தாலும் அத பேங்க்ல போட்டு அதுல வர்ற வட்டியை வாங்கி பசங்கள பாத்துக்க.


பசங்கள என்னை மாதிரி வாழ விடாத மதி. நீ ஏதாவது பண்ணணும் நினைச்சா, இந்த ஆன்லைன்ல நடக்கற விஷயத்த எல்லாம் தடுக்குறதுக்கு யாருகிட்டயாவது சொல்லு. ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் எதுலயாவது போட்டு என் வாழ்க்கை அழிஞ்சி போச்சி, எம்புருஷன் செத்துட்டான்னு போட்டு ஆன்லைன்ல நடக்கற எல்லா கேம்களையும் ஆஃப் பண்ணி விட்டுடு. அது எனக்கு மனத்திருப்தியை அளிக்கும். இன்னைக்கு நான் சாகறதுக்கு முழு காரணமும் அதான். என்னைப் போல பலபேரு அதுல மாட்டிக்கிட்டு இருக்கான். விளையாடிட்டே இருக்கானுங்க. என்ன முடிவுல விளையாடறானுங்கன்னே தெரியல. முடிஞ்ச அளவுக்கு அந்த கம்பெனியை எல்லாம் இழுத்து மூடிடு மதி.



எனக்கு தெய்வம் நீ. என் தெய்வத்தை விட்டு நான் போறேன். பாப்பாவை பாத்துக்க மதி. பாப்பாவை கூட கூட்டிக்கிட்டு போயிலாம்னுதான் பாத்தேன். அந்த காரியத்தை பண்ண தைரியம் இல்ல எனக்கு. அப்பா இல்லாம எம்பொண்ணு எப்படி வாழுவான்னு தெரியல. இந்த ஆவியெல்லாம் உண்மையா இருந்தா உங்க கூடவேதான் இருப்பேன். உங்கள பாத்துக்கிட்டேதான் இருப்பேன். நான் எங்க செத்துக் கெடக்கறேனோ அங்கதான் என் வண்டியும், சின்ன போன், பெரிய போன் ரெண்டுமே என் வண்டிலதான் இருக்கு. சின்ன போனை பிரபு சாருகிட்டக் குடு. அவர் ஈ.சி பண்ணி அதை அமௌண்டா ஆக்கிடுவாரு. என்னை விட்ருங்க சந்தோஷம். எல்லாரும் என்னை முட்டாள், பைத்தியக்காரன்னு என்ன வேணும்னாலும் சொல்லட்டும் மதி. ஆனால் என்னால முடியல.


என் மைண்ட் என்ன விட்டுப் போயிடுச்சி. எனக்காக ஒரே விஷயம் பண்ணு. இந்த ஆன்லைன் கேம் எல்லாத்தையும் தடுக்கற மாதிரி முடிஞ்ச அளவுக்கு எல்லா குருப்லயும் ஷேர் பண்ணி விடு. என்னாலயாவது அது நின்னதா இருக்கட்டுமே. நானே கடைப்சியா இருக்கட்டும். எனக்கு அதாவது சந்தோஷமா இருக்கும். நான் எவ்ளோ அமௌண்ட் விட்டேன்னு நீ தெரிஞ்சுக்க ஆசைப்பட்டா என் ஆந்திரா பேங்க் அக்கவுண்டையும், உன் இந்தியன் பேங்க் அக்கவுண்டையும் எடுத்து நீ செக் பண்ணா உனக்குப் புரியும். வெளிய சொல்ல முடியாத அளவுக்கு அமௌண்ட் அது. 


அதையெல்லாம் என்னால சம்பாரிக்கவே முடியாது. ஆனால் சம்பாரிச்சி விட்டுட்டேன். பச்சையப்பன்கிட்டன் பத்திரம் மாட்டிக்கிட்டு இருக்கு. அத மூட்டு வித்து கடனை அடைச்சிடு. நீ உன் அம்மாகூட பேச ஆரம்பிச்சிட்டா மாறிடுவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ வாழு. பசங்கள பாத்துக்க. ஐ லவ் யூ மதி. நன்றி”.

Leave Comments

Comments (0)