எனக்கு நீ சரிசமமா ?

/files/CIGARATEE-2021-02-20-17:35:44.jpg

எனக்கு நீ சரிசமமா ?

  • 16
  • 0

செல்வமணி .T

புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் !

மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கானது !இப்படி ஒவ்வொரு திரைப்படங்களும் போடும் முன் திரையரங்களில் நல் அறிவிப்பு வாசகமாக அக்காட்சிகள் காட்டப்படும் .


பீடி ,சிகரெட் மற்றும் மதுபான பாட்டில்களிலும் இந்த வாசகங்கள் இடம்பெற்றிருக்கும் .

அதிக அளவில் சுவாச மற்றும் வாய் புற்றுநோய் உருவாவதற்கான முதன்மை காரணமும் இந்த போதை வஸ்துக்கள் தான் இது போல ஏன் இதை விட பல மடங்கு பிரச்சனைகளை ,கலவரங்களை ,மரணங்களை ஏற்படுத்தும் சாதி ,மதத்துக்கு மட்டும் ஏன் வரிவிலக்கு செய்துவிடுகிறோம் .எப்படி அழிவை ஏற்படுத்தும் போதை பொருட்கள் மீது வாசகங்கள் எழுதுகிறோமோ !


அதைப்போல சாத்தியவாதிகள் மீதும் மத வாதிகள் மீதும் சாதி சாக்கடையாக்கும் ,மதம் மனிதனை மிருகமாக்கும் என்னும் வாக்கியங்களை அச்சிடலாமா ?


உண்மையில் நாம் அனைவரும் மரம் நடுவதை பற்றி பேசுகிறோம் ! ஊழல் ,இலஞ்சம் பற்றி பேசுகிறோம் .

அரசியல் மாற்றம் வேண்டும் என்று கேட்கிறோம் ,இவையெல்லாவற்றையும் விட முக்கியமான அடிப்படையில் அழுக்கு படித்த கட்டமைப்பை உடைத்து சீர்திருத்தத்தை ஏற்பட்டும் சாதி ,மத ஒழிப்பு பற்றி இந்த பொது சனம் கவலைப்படுவதே இல்லை .


அதன் விளைவாகவே இன்னும் நாம் பல்லாயிரம் வருடங்களுக்கு பின் தங்கி இருக்கிறோம் .

இது போன்ற அற்ப தனமான இழிவுகளும் இம்மண்ணில் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது .


 கடந்த 16.02.2021 அன்று காலை 8.30 மணியளவில் தேனிக்கு அருகில் உள்ள டொம்புச்சேரி கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பழனிச்சாமி பீடி குடித்துக் கொண்டிருந்திருக்கிறார். அங்கு சாதி இந்துவான அலெக்ஸ் பாண்டி என்பவர் வந்திருக்கிறார். சற்று நேரம் பழனிச்சாமியை முறைத்து பார்த்தவர், சாதி ரீதியாக இழிவாகப்பேசி உனக்கு எவ்வளவு திமிரு இருந்தால் என் முன்னால் சரிக்கு சமமாக உட்கார்ந்து பீடி குடிப்பாய்? என்று கேட்டு ஆபாசமாக பேசி இடுப்பில் வைத்திருத்த கத்தியால் இடது கழுத்திலும், காதிலும், இரண்டு கைகளிலும் வெட்டியிருக்கிறார். இதனால் காயமடைந்த பழனிச்சாமியை அங்கிருந்தோர் உடனடியாக தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.


                


இந்த சம்பவம் ஹரிஹரன், வைரமுத்து என்கிற 2 இளைஞர்கள் கண் எதிரே நடந்திருக்கிறது. வெட்டப்பட்ட பழனிச்சாமிக்கு வயது 45. வெட்டிய அலெக்ஸ் பாண்டிக்கு வயது 25. ஒரு இளைஞர் வயதில் மூத்தவரான தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை பார்த்து ஒருமையில், சாதி ரீதியாக இழிவுபடுத்தி, ஆபாசமாக பேசி கத்தியால் வெட்டியிருக்கிறார்.


 என் முன்னால் எப்படி நீ உட்கார்ந்து பீடி குடிக்கலாம் என்று கேள்வி கேட்டு வெட்டியிருக்கிறார். இது அப்பட்டமான சாதிய வன்மம் மிக்க கொடிய சம்பவம். இது மட்டுமல்லாமல் அலெக்ஸ் பாண்டி மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீஸ் தரப்பில் அலெக்ஸ் பாண்டி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினர்.அறிவும் விஞ்சானமும் ஒரு புறம் அரசு வளர்ச்சி அடைந்து கொண்டு இருந்தால் சாதியையும் ,மதமும் அதற்க்கு ஏற்ப அப்டேட் ஆக்கிக் கொள்கிறது .


இணையத்தில் ஜாதகம் பார்ப்பது ,பேஸ்புக்கில் சாதி சண்டை போடுவது ,ட்விட்டரில் மத பிரச்சனையை தூண்டுவது என 2021 யிலும் மானுடம் பண்படாமல்  ,பக்குவப்படாமல் வெறுப்புணர்வையும் ,வேற்றுமை உணர்வையும் விதைத்துக் கொண்டே உள்ளது .


அறம் வாழ்ந்தால் தான் மானுடம் வாழும் ,அதற்க்கு சமத்துவ ,சமூகநீதி ,சகோதரத்துவம் மிளிர வேண்டும் அதை சட்டம் மட்டுமே நிலைநாட்டிட இயலாது ,இந்த சமூகத்தின் கைகளில் தான் உள்ளது .

Leave Comments

Comments (0)