ஏப்ரல் 14 : எல்லோரும் வாருங்கள் !

/files/Sized-2022-04-08-18:41:56.jpg

ஏப்ரல் 14 : எல்லோரும் வாருங்கள் !

  • 1
  • 0

தவ.செல்வமணி

வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் பேரியக்கமான தமிழ் ஸ்டுடியோ சமூக நீதி திரைப்பட விழாவை தமிழ் நாடு முழுக்க நடத்த திட்டமிட்டுள்ளது,அதன் அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.


இப்படியான திரைப்பட விழாக்களின் தேவை என்ன ! இப்படியான திரைப்பட விழாக்களை ஏன் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நடத்தி வருகிறது ! என்பதனை பார்ப்போம்.விழாக்கள்,கொண்டாட்டங்கள் பண்டிகைகள் என்பதே மக்கள் ஒன்று கூடி மகிழ்ந்திருப்பதற்கும்,கூடி உணவு உண்ணவும்,மனிதர்களுக்கான புத்துணர்ச்சியை பெற்றுக்கொள்ளவுமே.


ஆனால் தற்போதைய பண்டிகைகள் கொண்டாட்டங்கள் சாதி சார்ந்தும்,மதம் சார்ந்தும் கொண்டாடப்படுகிறது அவைகளின் கருப்பொருள் மூட நம்பிக்கைகளை வளர்ப்பதாகவும்,வன்முறைக்கு வழி கோலுவதாகவுமே உள்ளன ஆக அப்படியான பண்டிகைகளுக்கு மாற்று தான் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும்,விடுதலையையும் பேசும் புதிய புரட்சிகரமான பண்டிகைகள் ,அவைகளை ஏற்படுத்துவதே சுதந்திர சமுதாயத்தை கட்டயமைக்கும் வழிமுறை.


ஆக எல்லா கலைகளுக்கும் பேராற்றலாக வளர்ந்து நிற்கும்,மக்கள் மனதில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் சினிமாவின் மூலம் அதை கொண்டு செல்வது சிறப்பிலும் சிறப்பானதாகவும்,பெரிய அளவிலான வீச்சையும் கொடுக்கும்.


கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் தமிழ் ஸ்டுடியோ தமிழ் சூழலில்  புரட்சியை விதைப்பதற்காக பல முன்னெடுப்புகளை எடுத்துவருகிறது,சினிமா,கலை,இலக்கியம் ,அரசியல் என அனைத்து தளங்களிலும் தனது பரப்பை விரிந்து மக்கள் பணியை ஆற்றி வருகிறது.


அவைகளில் மிக முக்கியமான முன்னெடுப்பு தான் தொடர்ச்சியான திரையிடல்கள் !


ஈரானிலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் வெளி வரும் படங்களை போல ஒரு படம் கூட தமிழ் மொழியில் வருவதில்லையே என்கிற ஏக்கத்தை போக்க முதலில் நம் மக்களிடையே அப்படியான படைப்புகளை எப்படி அணுகுவது,அவைகளை பார்த்து தங்களது ரசனையை வளர்த்து கொள்வது என்கிற கற்றல் நம் தமிழ் மக்களிடையே கொண்டு வர வேண்டும் என்பதற்காக,சாமிக்கண்ணு திரையிடல்,உலக நாடுகளில் நடைபெற்றது போல மொட்டை மாடியில் நிலா வெளிச்சத்தில் திரையிடல் நடைபெறும் பவுர்ணமி இரவு திரையிடல்,இந்தியாவில் முதல் முதலாக அரங்கேறிய சென்னை சுயாதீன திரைப்பட விழா,இந்தியாவில் முதன் முதலாக நடத்தப்பட்ட தலித் திரைப்பட விழா,பெண்கள் திரைப்பட விழா என இவைகளை நம் தமிழ் நாட்டுக்கு அறிமுகப்படுத்தி,கடுமையான பொருளாதார நெருக்கடியிலும்,தொடர்ந்து செயல்படுத்தி வருவது என்பது தமிழ் ஸ்டுடியோ இம் மக்கள் மீது வைத்துள்ளது காதலையே காட்டுகிறது.இத்தகைய திரையிடல்களின் மூலம் மக்களின் சிந்தனை வளம் மேம்படும்,தொடர்ந்து கமர்ஷியல் மசாலா படங்களை பார்த்து வந்த மக்களுக்கு இப்படங்கள் புதிய எண்ணங்களையும்,புதிய சிந்தனைகளையும் நிச்சயம் கொடுக்கும் .குறிப்பாக ஏப்ரல் 14 நடக்க விருக்கும் சமூக நீதி திரைப்பட விழாவின் நோக்கமே !

தற்போது எல்லா துறைகளையும் கட்டுப்படுத்தி வைத்திருப்பவர்களும்,எல்லா துறையிலும் கோலோச்சுபவர்களுமாக இருப்பது சாதிய,மதவாத,பார்ப்பனிய ,முதலாளித்துவ சிந்தனா வாதிகளே அப்ப்டியானவர்களின் படைப்பு பலரையும் அந்த புதைகுழிக்குள் இழுக்கும் அந்த சமூக அநீதிகளுக்கு மாற்று தான் சமூக நீதி திரைப்பட விழா !


இத்தகைய முக்கியமான ஒரு முன்னெடுப்பு நம் தமிழ் ஸ்டுடியோ மக்களுக்காக மக்களிடம் முன் வைக்கிறது அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,இந்த செய்தியை எல்லோரிடமும் கொண்டு சேருங்கள் !


குறிப்பாக இப்படியான விழாக்கள் சென்னையில் மட்டும் தான் நடக்கும் நாம் இப்படியான நிகழ்வுகளை பார்க்க வேண்டும் என்றால் அதற்க்கு சென்னை தான் செல்ல வேண்டும் என்கிற நிலையை மாற்றிய பெருமை தமிழ் ஸ்டுடியோவிற்க்கே சேரும்.


ஏப்ரல் 14 சமூக நீதி திரைப்பட விழா தமிழ் நாட்டின் பல மாவட்டங்களில் நடக்கவுள்ளது,இத்தகைய முன்னெடுப்பு அடுத்தடுத்த ஆண்டு தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடந்திட வேண்டும்,ஏன் இந்தியா  முழுக்க சமூக நீதி திரையிடல் நடப்பதே சமத்துவத்திற்காக ஒரு பெரிய அடித்தளமாக அமையும்.அத்தகைய மாபெரும் முன்னெடுப்பை தமிழ் ஸ்டுடியோ முன்னெடுக்க சமத்துவ சக்திகள் துணை நிற்க வேண்டும் என்பதனையும் கேட்டுக் கொள்கிறோம் !


ஏப்ரல் 14 ,காலை 10 மணி தொடங்கி இரவு 10 மணி வரை திடைப்பட விழா நடைபெறும்.


சென்னையில் இந்த நிகழ்வு இரண்டு இடங்களில் நடைபெறும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

காலை 10 மணியில் இருந்து 4 மணி வரை தமிழ் ஸ்டுடியோவின் புதிய கட்டிடமான திராவிடர் கலையரங்கத்திலும்,மாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் திரையரங்கிலும் நடைபெறும்.


குறிப்பாக ஓ டி  டி தளத்தில் மட்டுமே வெளியாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் முதன் முதலாக திரையரங்கில் திரையிடப்படுவது தமிழ் ஸ்டுடியோவின் சமூக நீதி திரைப்பட விழாவில் தான்,அது மட்டுமல்லாது ஜெய் பீம் திரைப்பட இயக்குனர் மற்றும் அரசியல் கட்சி ஆளுமைகளுடன் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த நல் வாய்ப்பை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்,அனைவருக்கும் அனுமதி இலவசமே!


பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவின் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குனர் ஆனந்த் பட்டவர்தன் அவர்களின் ஆவண படமான ஜெய் பீம் காம்ரேட் படத்தை தமிழ் ஸ்டுடியோ சென்னையில் திரையிட்டு காட்டியது தற்போது வெளியான ஜெய் பீம் படத்தையும் திரையிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


சினிமாவில் சமூக சினிமா என்கிற ஒரு தனி வகையை உருவாக்க வேண்டும்,அதன் மூலம் சினிமா படைப்புகள் மக்களுக்கான படைப்புகளாக கலை நயத்தோடு வெளியாக வேண்டும் என்கிற தமிழ் ஸ்டுடியோவின் இலட்சிய நோக்குக்கு ஆரம்ப அடித்தளம் தான் சமூக நீதி திரைப்பட விழா,இனி எல்லா ஆண்டும் இத்தகைய கலை புரட்சி நடந்தேறும் அதை தமிழ்நாடு  முழுக்க கொண்டு செல்வது உங்கள் கைகளில் ...

Leave Comments

Comments (0)