நடிகை ரோகிணி தேர்தல் பிரச்சாரம்!

/files/164065121_140996647938034_5741349717857848544_n-2021-03-31-22:18:11.jpg

நடிகை ரோகிணி தேர்தல் பிரச்சாரம்!

  • 6
  • 0

தவ.செல்வமணி


இந்த தலைப்பை பார்த்தவுடன் பலருக்கு ஆச்சர்யமாக இருக்கும்,இந்த நடிகை யார்! 

இவர் எப்போது எந்த கட்சிக்கு பிரச்சாரம் செய்தார் !

எந்த செய்தி தொலைக்காட்சிகளிலும் இந்த நடிகையை பற்றி வரவில்லையே என தோன்றக்கூடும்.


ஆம் பாஜக சார்பில்  தேர்தலில் நிற்கும் நடிகை குஷ்பூ,மக்கள் நீதி மய்ய வேட்பாளர் கமலஹாசன் அவர்களுக்கு ஒட்டு கேட்கும் அவரின் உறவினர் நடிகை சுகாசினையையும்,பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் நடிகைகள் நமீதா மற்றும் கெளதமி,காயத்திரி ரகுராம் பற்றியும் தான் தொலைக்காட்சிகளில் காட்டினார்கள் அதைத்தான் நாமும் பார்த்தோம்!நடிகை ரோகிணி அவர்கள் தென்னிந்திய திரைப்பட நடிகை ,தமிழ் ,மலையாள படங்களில் நடித்தவர்,தேசிய விருது பெற்ற நடிகையும் கூட,நடிகை ,பாடலாசிரியர்,பின்னணி குரல் கொடுப்பவர் என்று பல வேலைகளை செய்து வந்தாலும் இவருக்கு புடித்தது என்னவோ !


சமூக பணி தான், அனைவரும் சமம் என்னும் கொள்கையில் சமரசமற்ற எண்ணம் கொண்டவர்,சமூகநீதியோடு சமூகத்தில் நிலவும் அவலங்களை,சாதிய,மதவாத,அரச பயங்கரவாதங்களை எதிர்த்து எப்போதும் மிக தைரியமாக குரல் கொடுப்பவர்.


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினராக பல ஆண்டுகளாக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து குரல் எழுப்புவர்.எல்லோருக்கும் சமமான கல்வி கிடைத்தால் நீட் வைப்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அந்த மாதிரி எந்த கல்வி திட்ட முறையும் நம்ம ஊர்ல இல்ல. அப்படிங்கிற போது நீட்டிற்கான அர்த்தமே இல்லை.


அதனை விலக்க வேண்டுமென்றால் இந்த குழந்தையின் உயிர் பறிபோனதுக்கு அப்புறம்தான் செய்யணுமா? அப்பவாவது விலக்குவார்களாக என்று தெரியவில்லை!

நாங்கள் போராடினோம், அனிதா இறப்பதற்கு முன்பாக நீட் தேர்வு வேண்டாம் என்று பல இடங்களில் கூட்டம் போட்டு போராடினோம். ஆனால் அதற்கு எந்த விளைவும் கிடையாது.


என்று நீட் தேர்வை எதிர்த்து சென்னை லயோலா கல்லூரியில் போராட்ட களத்தில் பேசினார்.


விவசாய நிலங்களை பறிக்கும் எட்டு வழி சாலை,தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக அற வழியில் 100 நாட்களுக்கும் மேலாக போராடியவர்கள் மீது தடியடி நடத்தி 14 அப்பாவி தமிழ் மக்களை கொன்ற போலீஸ் துப்பாக்கி சூட்டுக்கு எதிரான போராட்ட களம்,பொள்ளாச்சியில் 250க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து காணொளிகள் எடுத்து மிரட்டிய பெரும் கொடூரத்தை எதிர்த்த போராட்ட களம் என்று ஒவ்வொரு காலத்திலும் நின்றவர்.இந்த 2021 தமிழக சட்ட மன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார் இதை பற்றி அவர் கூறியது.


பொதுவாக நான் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்வதில்லை. ஆனால், தவறுகளைக் கண்டிப்பதில் மட்டுமல்ல, மவுனமாக இருப்பதும் குற்றம்தான். எனவே, நாம் அதிமுக கூட்டணியை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்.


பாஜகவுக்குப் பாடம் புகட்ட நல்ல சந்தர்ப்பம் நமக்கு வாய்த்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் நாம் பெரிய பாதிப்பைச் சந்திப்போம்''.


''தேசிய கல்விக் கொள்கையானது மாணவர்களுக்கு, பெற்றோர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியது மட்டுமின்றி, மாணவர்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்கும்.

அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்காமல் இருந்தாலே பாஜகவை எதிர்ப்பதாக இருக்கும். 


இவ்வாறு பேசி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஊர் ஊராக பிரச்சாரம் செய்து வருகிறார்.இந்த உலகம் கெடுவது கெட்டவர்களால் அல்ல தவறை தட்டிக் கேட்காமல் இருக்கும் நல்லவர்களால் தான் ஆக தமிழ் சினிமாவில் வீர வசனங்கள் பேசி 100 பேரை அடித்து துவைக்கும் கதாநாயகர்கள் மக்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்து வாய் திறப்பதும் இல்லை,மக்கள் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்க கூடிய தேர்தலில் தனது நிலைப்பாட்டை கூட வெளியில் சொல்ல அஞ்சி நடுங்குகிறார்கள்,இவர்களை கொண்டாடி தீர்க்கும் மனிதர்களுக்காக இல்லாவிட்டாலும் ஒரு சக மனிதனாக கூட குரல் எழுப்பாமல் பயந்து ஒடுங்கி கிடக்கும் அந்த நடிகர்களால் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிஞ்சித்தும் பயனில்லை.


தமிழ் சினிமாவில் கதாநாயகர்களாக  ஆண்களை தான்  பெரும்பாலும் காட்டுவார்கள் ஆனால் நடிகை ரோகிணி போன்றோர் தான் உண்மையான நாயகர்கள் !

Leave Comments

Comments (0)