மீண்டும் ஒரு சாதிய படுகொலை !

/files/Capture-2021-04-16-13:44:48.JPG

மீண்டும் ஒரு சாதிய படுகொலை !

  • 5
  • 0

தவ.செல்வமணி


சமீபத்திய தலைப்பு செய்திகள் என்னவென்றால்! கொரோனா இரண்டாவது அலை தான் எங்கு பார்த்தாலும் கொரோனா ! அனைத்து செய்தி ஊடகங்களின் தலைப்பு செய்தி இதுதான்.

மறுபுறம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவரும் செய்தி!


தடுப்பூசி இருக்கக்கூடிய ஒரு நோயை கண்டே இத்தனை அச்சம் நம் சமூகத்தில் நிலவுகிறது ஆனால் தடுப்பூசியே இல்லாத நோய்க்கு !


நேற்று (14-4-2021) புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாள்,கொரோனாவை விட கொடிய வைரஸான சாதியை எதிர்த்து சமத்துவம் என்னும் மானுட மான்பை மீட்க களமாடிய ஒரு களப்போராளி!


அவருடைய பிறந்த நாளுக்கு ஒரு நாளைக்கு முன்பு ஒரு சாதிய படுகொலை நடந்துள்ளது,சமீபத்தில் தான் அரக்கோணத்தில் சாதிய வன்மத்தில் இரண்டு தலித்துகள் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள்.அதற்க்கு சரியான தீர்வு வராத நிலையில்! தற்போது காஞ்சிபுரம் ஸ்கிராப் ஏலம் எடுக்கும் தொழில் போட்டியில் பறையர் சமூக வழக்கறிஞர் அழகரசனை, 

வன்னியர் பறையர் இருவரும் சேர்ந்து வெட்டிப்படுகொலை!  செய்துள்ளனர்,இதற்க்கு பின் சாதிய வன்மமும் அடங்கியுள்ளது.


பூவை,மழையை வர்ணிக்கும் ரசிக்கும் இந்த தமிழ் சமூகம்,யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழ் சமூகம் மானுடத்தை மறந்து சக மனிதனை வெறுத்து ! சாதிய படுகொலையில் ஈடுபடுவது வன்கொடுமையிலும் பெருங் கொடுமை.இதற்க்கு அதிகாரத்தின் காவல்துறையின் அலட்சியமும்,சாதிய பார்வையும் மிக முக்கிய தூண்டுதலாகவே உள்ளது.


சாதியம் என்கிற கொடூரம் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தது நம் அனைவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் ஒரு நிலையே!


அறிவியலுக்கு அறத்திற்கு புறம்பான,மனித நேயத்துக்கு முற்றிலும் எதிரான சாதிய பார்ப்பனிய படிநிலை என்பது உயர்சாதியினர் என்று சொல்லப்படும் ஒரு பிரிவினர் மற்றெல்லா மக்களையும் சுரண்டி உழைத்து வாழ விரும்பாத ஒரு கூட்டத்தின் திட்ட மிட்ட கட்டமைப்பே !


அந்த கயமை தனத்தை இனியும் பின்பற்றி வருவது நம்மை நாமே குழிதோண்டி புதைத்து கொள்வதற்கு சமம்.


சாதிய படுகொலைகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கையை அரசும் காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும்,பாரபட்சமின்றி சாதிய படுகொலையை நிகழ்த்தும் அனைத்து குற்றவாளிகளும் கைதுசெய்யப்பட வேண்டும்.

Leave Comments

Comments (0)