படச்சுருள் 5ஆம் ஆண்டு தொடக்க விழா- முழுநாள் நிகழ்வு

/files/detail1.png

படச்சுருள் 5ஆம் ஆண்டு தொடக்க விழா- முழுநாள் நிகழ்வு

  • 0
  • 0

 

தமிழ்ஸ்டுடியோவின் படச்சுருள் இதழ் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், எதிர்வரும் 30ஆம் தேதி தமிழ்ஸ்டுடியோவில் இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. மாலை 5 மணிக்குப் படச்சுருள் வாசகர்களுக்கான கலந்துரையாடல். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் ராஜூமுருகன் பங்கேற்றுப் படச்சுருள் குறித்துப் பேச இருக்கிறார்.

இயக்குனர் ராஜூமுருகன் தவிர்த்து முழுக்க முழுக்க படச்சுருள் வாசகர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக வாசகர்களே சிறப்பு விருந்தினராகப் படச்சுருள் பற்றிப் பேசும் நிகழ்வையும் ஒருங்கிணைக்கிறோம். 

பாலுமகேந்திரா திரைப்படங்கள் திரையிடல்

காலை 10:00-11:45 - அழியாத கோலங்கள்(1:45:17)
காலை 11:50 -1:30 - சந்தியா ராகம் (1:40:12)

01:30 - 2:15 - உணவு இடைவேளை (மதிய உணவு: சிக்கன் பிரியாணி வழங்கப்படும்), சைவம் மட்டும் உண்ணும் நண்பர்களுக்குச் சாம்பார் சாதம் வழங்கப்படும். ஆனால் அலுவலக அலைப்பேசியில்  அழைத்து சைவம் என்று முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

மதியம் 2:15 - 3:55 வீடு (1:40:16)
மாலை 4:00-4:20 - பிரசாதம்(குறும்படம்)-20:13:00
மாலை 4:25-4:50 - ஒரு மனுஷி(குறும்படம்) - 21:22:00

மாலை 5 மணிக்குப் படச்சுருள் வாசகர்களுக்கான கலந்துரையாடல்

நாள்: 30.06.2019 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி முதல் இரவு 9 வரை.

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7 மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி
(வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்)

அனைவரும் வாருக... அனுமதி இலவசம்...

தொடர்புக்கு: 9840644916

Leave Comments

Comments (0)