இலங்கையில் இன்று 545 கைதிகள் விடுதலை

/files/detail1.png

இலங்கையில் இன்று 545 கைதிகள் விடுதலை

  • 0
  • 0

இலங்கையின் 71வது சுதந்திரம் இன்று சிங்கள மக்களால் கோலாகாலமாகக் கொண்டாடப்படுகின்றது. 

இந்நிலையில், 545 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்றனர் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் தமிழ் அரசியல் கைதிகள், மற்றும் பொதுபலனோ அமைப்பின் பொதுச்செயலாளர் பொதுச்செயலாளர் கலாகொட அத்தே ஞானசரா தேரர் ஆகியோருக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதா என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

இலங்கையில் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனைத் தமிழர் தாயகத்தில் கறுப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.  இதற்கு அரசியல் கட்சிகளும்  பொது அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சுதந்திர தினத்தில் இலங்கை ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் நாடுமுழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 545 கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாறான கைதிகள் விடுவிப்பு ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் வழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிப்பார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் தெரிவித்திருந்தபோதும் அவர் விடுவிக்கப்பட்டரா என்று அறிவிக்கப்படவில்லை.

மேலும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர்களின் விடுதலை குறித்தும் சிறைச்சாளைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருந்த்போதும் வவுனியா மாவட்டத்தில் மூன்று தமிழ் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave Comments

Comments (0)