இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து

/files/detail1.png

இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து

  • 0
  • 0

 

இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து என்று பீகார் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

”எதிர்க்கும் குரல் இல்லாமல் ஜனநாயகம் செயல்பட முடியாது. அரசை விமர்சிப்பதால் மட்டும் ஒருவர் தேசத்துரோகி, அர்பன் நக்சல் என முத்திரை குத்தப்படுவதை ஏற்க முடியாது. இந்திய அரசியலமைப்பு கருத்துச் சுதந்திரத்தை மக்களுக்கு வழங்குகிறது. நாட்டின் ஒரு குடிமகன் கூட தனது சொந்த நாட்டில் உயிர் பயத்தில் வாழும் நிலை கூடாது. இஸ்லாமிய மக்கள், சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தோடு நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்களை நிறுத்த வேண்டும்” என்று அடூர் கோபால கிருஷ்ணன், அபர்னா சென், அனுராக் காஷ்யாப், கொங்கொனா சென், சவுமிதா சாட்டர்ஜி, ராமச்சந்திர குஹா போன்ற 49 பேர் கடிதம் எழுதிக் கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், இவர்களுக்கு எதிராகப் பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் அடிப்படையில் நீதிபதி சூர்யகாந்த் திவாரி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அக்டோபர் 03ஆம் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (அக்டோபர் 09) இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து என்று பீகார் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். புகார் அளித்த நபர் தவறான தகவல்களைக் கொடுத்ததால்தான் 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொய் புகார் அளித்தவர் மீது  82வது சட்டப்பிரிவின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave Comments

Comments (0)