இலங்கைத் தமிழர்கள் இந்துக்கள் இல்லையா?- சென்னை நியூ கல்லூரி மாணவர்கள் போராட்டம்

/files/detail1.png

இலங்கைத் தமிழர்கள் இந்துக்கள் இல்லையா?- சென்னை நியூ கல்லூரி மாணவர்கள் போராட்டம்

  • 0
  • 0

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நியூ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் டிசம்பர் 09ஆம் தேதி இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்போடு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இச்சட்டத்தின் மூலம், ”ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத பிரச்னை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். அந்த மூன்று நாடுகளிலிருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர்,  பார்சி, ஜெயின்ஸ், மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்குப் பொருந்தாது. ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தாது” என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது. அசாம் போன்ற மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அவ்வகையில், நேற்று (டிசம்பர் 13) சென்னை நியூ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அப்போது, “இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கும் இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிராக உள்ளது என்று கூறினர். மேலும் அந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நரேந்திர மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறினர்.

Leave Comments

Comments (0)