மக்களுக்கான போராட்டத்தில் 30 உயிர்கள் பலி!

/files/werr-2020-12-20-18:51:56.jpg

மக்களுக்கான போராட்டத்தில் 30 உயிர்கள் பலி!

  • 14
  • 0

T.செல்வமணி


கடந்த 25 நாட்களுக்கும் மேலாக மக்கள் விரோத மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் கோடிக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார்கள். 


இந்நிலையில் கடும் குளிருக்கும்,நோய் வாய்ப்பட்டும்,விபத்திற்கு  உள்ளாகியும் இதுவரை 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்ட களத்தில் பலியாகியுள்ளனர். 


இந்திய மக்களின் நலனுக்காக தங்கள் இன்னுயிரை நீத்த விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று  (20/12/2020) 

கோவை பெரியார் படிப்பகம் முன்பாக வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமை தாங்கினார். 


திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் தோழர் வெண்மணி அவர்கள்,புஇமு பொறுப்பாளர் தோழர் மலரவன்,மே 17 இயக்கத்தின் சார்பாக தோழர் ஜீவா,தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தோழர் சிராஜிதின்,தமிழ் சிறுத்தைகள் கட்சியின் அகத்தியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


இந்திய விவசாயிகளின் போராட்டம் வெல்லும் வரை நாங்கள் தொடர்ந்து களத்தில் அவர்களுக்கு ஆதரவாக களம் காண்போம்  என்றும் கூறினர்.

Leave Comments

Comments (0)