2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையிழப்புகள் அதிகரிப்பு

/files/29 2020-05-29 19:56:09.jpg

2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையிழப்புகள் அதிகரிப்பு

  • 8
  • 0

இந்தியாவில் வேலையிழப்பு சிக்கல் மிக அதிகமாக நேர்ந்த ஆண்டாக கடந்த 2018 மாறியிருக்கிறது. கடந்த வருடத்தில் மட்டும் 11 மில்லியன் இந்தியர்கள் வேலையிழந்து தவித்துள்ளனர்.

மத்தியில் நரேந்திர மோதி தலைமையிலான பாஜக ஆட்சி அமைப்பதற்கு முக்கிய காரணம் வேலைவாய்ப்பு தொடர்பில் அவர்கள் அளித்த வாக்குறுதிகள். ஆனால், அதே பாஜக ஆட்சியில் தான் கடந்த ஆண்டு அதிகமான வேலையிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

கடந்த 2017-ஆம் ஆண்டு 397 மில்லியனாக இருந்த வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை, 2018-ல் 407.9 மில்லியனாக அதிகரித்திருக்கிறது. இதனை இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு கிராமப்புறத்தில் இருக்கும் சூழலில், நகரங்களைவிட அங்குதான் அதிகமான வேலையின்மை மற்றும் வேலையிழப்பு ஏற்பட்டிருக்கிறது. மேற்கண்ட 1 மில்லியன் வேலையிழப்பில் 9.1 மில்லியன் இந்தியர்கள் கிராமப்புறங்களில் தான் தமது வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர்.


Leave Comments

Comments (0)