18 வருடங்களாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் உழவர் சந்தை

/files/5e14088c-f26a-42ec-b86e-01d1cae3f81b 2020-06-06 11:59:55.jpg

18 வருடங்களாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் உழவர் சந்தை

  • 2
  • 0

வாடிக்கையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒன்றுபோல பலனளித்து வருகிறது இந்த உழவர் சந்தை. இந்த திட்டத்திற்கான யோசனை முதலில் மதுரையில் இருந்து தான் தோன்றியது. முன்னாள் முதலமைச்சர் மு.கருனாநிதியின் திட்டங்களில் மிகவும் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றான உழவர் சந்தை, 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மாநிலத்தின் முதல் உழவர் சந்தை மதுரையில் உள்ள அண்ணா நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
தொடங்கப்பட்டு 18 வருடங்கள் ஆனாலும், பரந்து விரிந்துள்ள அண்ணா நகர் உழவர் சந்தை இன்றும் தினமும் 5000-க்கும் மேற்பட வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. இங்குள்ள நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து காய்கறிகளையும் பழங்களையும் மக்கள் வாங்கி வருகிறார்கள்.
“தங்கள் பொருட்களுக்கு 15% அதிக விலை பெறுகிறாரக்ள் விவசாயியகள். மக்களுக்கும் மற்ற வெளி சந்தையை விட 20% குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறது. ஆகவே இது இரு தரப்பிற்கும் பலனளிக்கிறது. இதன்மூலம் பல விவசாயிகள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை கொடுத்து வருகிறார்கள். சிலரது குழந்தைகள் பொறியியல் படித்து வருகிறார்கள்” என்கிறார் இணை நிர்வாக அதிகாரி ஆசைதம்பி. கய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகளை விவசாயத்துறை அதிகாரிகள் முறைப்படுத்துகிறார்கள்.
“1999-ம் ஆண்டு முதல் இந்த சந்தைக்கு வந்த அனைத்து விவசாயியகளும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். இதற்கு காரணம் என்னவென்றால், இங்கு விவசாயியகள் யாரும் தங்கள் கடைக்கு வாடகை கொடுக்க வேண்டியதில்லை. மேலும் மின் எடையை இலவசமாக அரசு வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல், விவசாயியக்ள் தங்கள் பொருட்களை அரசு பேருந்துகளில் கொண்டு வருவதற்கு சலுகையும் வழங்குகிறது” என்கிறார் உழவர் சந்தையில் பழங்களை விற்கும் 67 வயதான முருகன்.
உழவர் சந்தையின் நிர்வாக அதிகாரி மாசனன் கூறுகையில், “மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து குறைந்தபட்சம் ஆறு பேருந்துகள் விவசாயிகளுகென்று தனியாக வருகின்றன. விற்கப்படாத பொருட்களை பேனுவதற்காக குளிர்சாதன வசதியும் செய்து கொடுத்துள்ளோம். சந்தையில் இயற்கை விவசாய பொருட்களை விற்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதிவுசெய்யப்பட்டுள்ள 114 விவசாயிகளில், தினமும் 100 பேராவது சந்தைக்கு வருகிறார்கள். மாட்டுத்தாவனிக்கு அருகே ( மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில்) மத்திய காய்கறி சந்தை வருவதற்கு முன்புவரை, கூடாரங்களுக்கு வெளியே தரையிலும் கூட விவசாயிகள் தங்கள் கடையை விரித்திருப்பார்கள். இப்போதும் தினசரி 16,000 முதல் 19,000 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகிறோம். வார இறுதிகளில் ஏழாயிரம் வாடிக்கையாளர்களுக்கு மேல் இங்கு வருவார்கள்” என்றார்.
“கலைஞரால் தொடங்கப்பட்ட இந்த சந்தை இன்றும் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு காரணம், விவசாயிகளும் வாடிக்கையாளர்களும் சேர்ந்தே இதில் பலனடைகிறார்கள். இது மட்டும் இல்லையென்றால், விவசாயிகள் தங்கள் பொருட்களை குறைந்த விலையில் இடைத்தரகர்களிடம் விற்க வேண்டியிருக்கும். மேலும் சந்தை இருக்கும் அண்ணா நகர் ஆடம்பரமான மக்கள் வசிக்கும் பகுதி என்பதால், எங்கள் பொருட்களை லாபகரமான விலைக்கு விற்பனை செய்கிறோம். வாடிக்கையாளர்களுக்கும் புதிய காய்கறிகள் கிடைக்கின்றன” என்கிறார் முருகன். 
சந்தையின் மற்றொரு நீண்ட கால பயனாளியான 68 வயதாகும் ராஜாத்தி கூறுகையில், “வெளிச்சந்தையில் வியாபரிகளுக்கு அதிக கமிஷன் கொடுக்க வேண்டும். மேலும் போக்குவரத்து செலவுக்கே அதிக செலவாகும். ஆனால் இந்த உழவர் சந்தையால், தினமும் எங்களால் அதிக தொகையை சேமிக்க முடிகிறது. தடங்கள் இல்லமல் வருமானம் வருவதால், இந்த 18 வருடங்களில் கூடுதலாக 1.5 நிலம் எங்களால் வாங்க முடிந்துள்ளது. இதற்கு கலைஞருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என்கிறார். ஆரம்பத்தில் தனது கனவரோடு விவசாய பொருட்களை விற்பனை செய்து வந்த ராஜாத்தி, தற்போது மிளகாய், கொத்தமல்லி இலைகள், கருவேப்பிலை ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறார்.
1998-ம் ஆண்டு விவசாய பொருட்கள் மார்கெட்டிங் வரி மதிப்பாய்வு கமிட்டியை அமைத்தார் முதலமைச்சர் கருனாநிதி. தமிழ்நாடு சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பின் அப்போதைய தலைவராக இருந்த ரத்தினவேலு, இந்த கமிட்டியின் உறுப்பினராக இருந்தார். வரி நடைமுறைப்படுத்துவது குறித்த ஆய்விற்காக பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயனம் செய்தார் ரத்தினவேலு. பிறகு ஒருநாள் சேம்பரின் வைர விழா கொண்டாட்டத்திற்காக கருனாநிதியை அழைக்கச் சென்றபோது, மற்ற மாநிலங்களுக்கு சென்றது பற்றி கருனாநிதி இவரிடம் கேட்டுள்ளார்.
“அப்போது தான் சண்டிகரில் உள்ள அப்னே மண்டியை – நகரத்தில் விளையும் பொருட்களை தங்கள் டிராக்டரில் வைத்து விவசாயிகள் விற்பனை செய்வது - பற்றி விளக்கமாக கலைஞரிடம் கூறினேன். இதேப் போன்ற திட்டம் ஆந்திராவிலும் செயல்பாட்டில் உள்ளது. அங்கு விவசாயிகளுகு கூரை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களிலும் விவசாயிகள் தங்கள் பொருட்களை இடைத்தரகர் உதவியின்றி விற்பனை செய்கிறார்கள்” என்று கூறியுள்ளார் ரத்தினவேலு. உடனடியாக சிறு அறிக்கையை தயார் செய்யுமாறு ரத்தினவேலுவிடம் கூறிய கருனாநிதி, அன்று மாலையே உழவர் சந்தை திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். 
“நவம்பர் 14, 1999 அன்று மதுரையில் முதல் உழவர் சந்தை திறக்கப்படும் என கலைஞர் அறிவித்த அன்று தான், எங்கள் வைர விழா கலையரங்கத்தை திறந்த வைக்க வருமாறு அவரிடம் நேரம் கேட்டிருந்தோம். உழவர் சந்தை என்று பெயர் வைத்தது கருனாநிதியே. ஒரு சாதாரன குடிமகன் கூறிய திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிய பெருந்தன்மை மிக்க உயர்ந்த தலைவர் கருனாநிதி” என நினைவு கூர்கிறார் ரத்தினவேலு. 
தற்போது தமிழ்நாட்டில் 104 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. 

Leave Comments

Comments (0)