17 தலித் மக்களின் உயிருக்கு நியாயம் கேட்டுப் போராடிய தோழர்களை விடுதலை செய்ய வேண்டும் 

/files/detail1.png

17 தலித் மக்களின் உயிருக்கு நியாயம் கேட்டுப் போராடிய தோழர்களை விடுதலை செய்ய வேண்டும் 

  • 1
  • 0

 

17 தலித் மக்களின் உயிருக்கு நியாயம் கேட்டுப் போராடிய தோழர்களை காவல்துறையினர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் அருகில் உள்ளது நடூர். சக்ரவர்த்தி துகில் மாளிகை என்னும் பெயரில் இயக்கிவரும் துணிக்கடை உரிமையாளருக்குச் சொந்தமான வீடு இந்த கிராமத்தில் உள்ளது. ஆணவ சாதியைச் சேர்ந்த இவருடைய வீட்டைச் சுற்றியும் ஆணவ சாதி (வன்னியர்) மக்களையும்  தலித் மக்களையும் இரண்டாகப் பிரிக்கும் வகையில் 20 அடி தீண்டாமை சுவரைக் கட்டியுள்ளார்.

alt text

கருங்கல்லால் கட்டப்பட்ட அந்த சுவர் பராமரிப்பின்மை காரணமாக நேற்று (டிசம்பர் 03) காலை பெய்த மழையில் அதிகாலை 5.30 மணிக்குத் தலித் மக்கள் குடியிருப்பின் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று வீடுகள் முழுமையாக நசுங்கி அதிலிருந்த பெண்கள் உட்பட 17 பேரும் உடல் சிதைந்து இறந்துள்ளனர்.17 பேரில் இரண்டு பேர் குழந்தைகள்.

தீண்டாமை சுவரால் இன்று 17 தலித் மக்களை ஆணவ சாதி வெறி கொலை செய்திருக்கிறது. காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்த கொடூரத்திற்குக் காரணமானவர்களைக் கைது செய்யும் பணியில் ஈடுபடாமல், 17 பேரின் கொலைக்கு நீதி கேட்டுப் போராடும் தோழர்கள் மீது தாக்குதல் நடத்தி அடக்குமுறையைச் செலுத்தி அவர்களைக் கைது செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறது கோவை காவல்துறை.

alt text

இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர், “மழையினால் தீண்டாமை சுவர் இடிந்து 17 தலித்துகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டுப் போராடியதற்காகத் தமிழ் புலிகள் கட்சியின் நிறுவனர் நாகை திருவள்ளுவன் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி இருக்கிறது. அவரை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு இருக்கின்றனர். காவல்துறையினரின் இந்த கொடூர நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். காவல்துறையினர் உடனடியாக தோழர்களை விடுதலை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)