16 முன்னாள் போராளிகள் கைது – அச்சத்தில் பொது மக்கள்  

/files/detail1.png

16 முன்னாள் போராளிகள் கைது – அச்சத்தில் பொது மக்கள்  

  • 1
  • 0

இலங்கை அரசால் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலி முன்னாள் போராளிகள் 16 பேர் அரச படைத்தரப்பால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச படைப்புலனாய்வாளர்களினால் அழைப்பாணை விடப்பட்டு ஜனவரி மாத ஆரம்பத்திலிருந்து முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் 9 பேரிற்கு அழைப்பாணையும் விடப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் உட்பட 15 ஆண்கள் அடங்குவர். படைப் புலனாய்வுப்பிரிவினால் விசாரணைக்கான அழைப்பாணை விடப்பட்டவர்கள் மிகவும் அச்சத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரசு தனது படையினரை தொடர்ந்தும்  வடக்கில் தக்கவைத்திருப்பதற்கான  திட்டமாகவே அண்மைக்காலங்களில் தொடர் ஆயுதங்கள் கைப்பற்றுதலும்,  இவ்வாறான கைது நடவடிக்கைகளும் என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிந்த பின் 12ஆயிரத்திற்கும் மேலான போராளிகள் சரணடைந்தனர், அவர்களின் பெரும்பாலானோரை போரில் ஈடுபட்ட அரச படை கைதும் செய்தது.

இவ்வாறு சரணடைந்து, கைதுசெய்யப்பட்டவர்களில் நுாற்றுக்கணக்கானவர்கள் காாணமல் போயுள்ளனர். இதில் 12ஆயிரம் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவித்தவர்களில் பலர்  திடீரென மயக்கமுற்று இறந்துள்ளனர். மேலும் பலர் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். முன்னாள் போராளிகளின் திடீர் மரணங்கள் தொடர்பில் இலங்கை அரசு மீது குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றது,

புனர்வாழ்வளிக்கப்பட்டு முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு விட்டார்கள் என்று கூறும் இலங்கை அரசு, அந்த போராளிகளை அச்சமின்றி நடமாட முடியாமல் தொடர் கைது நடவடிக்கைகளையும் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றது. அவர்கள் திறந்தவெளிச்சிறைச்சாலையில் உள்ளது போன்றே விடுதலைசெய்யப்பட்ட பின்பும் உணர்கின்றனர்.

Leave Comments

Comments (0)