14 வயது தலித் சிறுமி 5 நாட்களாக பாலியல்  வன்கொடுமை

/files/detail1.png

14 வயது தலித் சிறுமி 5 நாட்களாக பாலியல்  வன்கொடுமை

  • 0
  • 0

தாராபுரத்தில் 14 வயது தலித் சிறுமி கடத்தி செல்லப்பட்டு 5 நாட்களாக வைத்து பாலியல்  வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நடந்திருக்கிறது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ளது பொட்டிக்காம்பாளையத்தை சேர்ந்தவர் 14 வயது மதிக்கத்தக்கத் தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி. இவரைச் சுப்பிரமணியன் என்பவர் கடத்தி, அந்த சிறுமியின் காலில் அணிந்திருந்த கொலுசைக் கழற்றி விற்று பாலக்காட்டுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள ஒரு குடோனில் வைத்து ஐந்து நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

சிறுமியைக் காணவில்லை எனப் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமி கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. அங்கிருந்து சிறுமியை மீட்ட காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
 

Leave Comments

Comments (0)