இலங்கை கடற்படையினரால் 11 தமிழக மீனவர்கள் கைது

/files/detail1.png

இலங்கை கடற்படையினரால் 11 தமிழக மீனவர்கள் கைது

  • 0
  • 0

 

புதுக்கோட்டை  மாவட்ட கடல் பகுதியிலிருந்து மீன்பிடிக்கு கடலுக்கு சென்ற 11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

ஜெகதாப்பட்டிணம் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி தமிழக மீனவர்கள் பயன்படுத்திய படகுகள் மற்றும் வலைகளையும் அவர்கள் பறித்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 11 தமிழக மீனவர்களும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் 8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Leave Comments

Comments (0)