ஒரு வாரத்திற்கு சினிமா புத்தகங்களுக்கு 10 முதல் 40 சதவீதம் வரை தள்ளுபடி

/files/detail1.png

ஒரு வாரத்திற்கு சினிமா புத்தகங்களுக்கு 10 முதல் 40 சதவீதம் வரை தள்ளுபடி

  • 0
  • 0

 

எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை தமிழ் ஸ்டுடியோவில் சினிமா புத்தகங்கள் 10 முதல் 40 சதவீதம் வரை தள்ளூபடி விலையில் கிடைக்கும்.

பியூர் சினிமா புத்தக அங்காடியில் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை தமிழ் ஸ்டுடியோவின் பேசாமொழி பதிப்பகம் வெளியிட்ட சினிமா தொழில்நுட்பம் சார்ந்த நூல்கள் 40 சதவீதமும், மற்ற பதிப்பகத்தின் சினிமா நூல்கள் 10 சதவீத தள்ளுபடி விலையிலும் கிடைக்கும். பதிப்பகங்கள், கல்லூரிகள், மற்ற விற்பனையாளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் நேரில்வந்து வாங்குபவர்களுக்கே இந்த சலுகை பொருந்தும். இயக்குநர் மிஷ்கின் நூல்கள், யமுனா ராஜேந்திரனின் நூல்கள், இயக்குநர் வஸந்த், ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங், சாரு நிவேதிதா, தீஷாவின் மிக முக்கிய நூல்கள் அனைத்தும் 40 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

நூல்களை முன்னமே வாங்கியிருந்தாலும் தற்போது மீண்டும் வாங்கி மற்ற நண்பர்களுக்குப் பரிசளிக்கலாம். அல்லது தமிழ்நாட்டின் மற்ற பகுதியில் புதிதாக நூலகம் அமைக்கும் நண்பர்களுக்கும் வாங்கிக்கொடுக்கலாம். தமிழ் ஸ்டுடியோவே நூல்களை அந்தந்த நூலகங்களுக்கு அனுப்பி வைக்கும்.

திரண்டு வந்து அள்ளி செல்லுங்கள். தமிழ் ஸ்டுடியோவிற்கு நிதி திரட்டும் முயற்சிக்குத் தோள் கொடுங்கள்.

முகவரி: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
தொடர்புக்கு: 9840644916, 044 48655405

Leave Comments

Comments (0)