இலங்கையில் வெளிநாட்டுப் பிரஜைகள் 10 பேர் கைது

/files/detail1.png

இலங்கையில் வெளிநாட்டுப் பிரஜைகள் 10 பேர் கைது

  • 0
  • 0

கடந்த அக்டோபர் மாதம் முதல் ஜனவரி 20ம் திகதி வரையில் போதைப்பொருள்  தடுப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் வெளிநாட்டுப் பிரஜைகள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

alt text

அண்மைக்காலமாக இலங்கை போதைப்பொருள் வர்த்தக மையமாக உருவாகி வருகின்றது.  இந்தப் போதைப்பொருள் பயன்பாடு இளையோர் மத்தியில் பெரிதும் ஆக்கிரமித்துள்ளது.  வடக்கு கிழக்கை குறிவைத்து இலங்கையின் முன்னைய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படும் போதைப்பொருள் வர்த்தகம் தற்போது இலங்கை  முழுவதும் பரவியுள்ளது.

alt text

இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி போதைப்பொருள் ஓழிப்பு நடவடிக்கைக்கு தானே தலைமைதாங்க உள்ளதாக தெரிவித்துள்ளதோடு நாட்டு மக்கள் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் முதல் கட்டமாக பாடசாலை மட்டங்களில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

alt text

இந்நிலையில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரை ஈடுபடுத்துவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பரிசீலிக்கபடுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

alt text

கடந்த அக்டோபர் மாதம் முதல் ஜனவரி 20ம் திகதி வரை இலங்கையில் 800 கிரோகிராமிற்கும் அதிக ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

alt text

இந்த காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரம் தொடர்பில் 5,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 10 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

alt text

Leave Comments

Comments (0)