ஸ்டெர்லைட்-ஆலை-இயங்கலாம்-என்று-அறிக்கை

/files/19 2020-05-29 19:20:05.jpg

ஸ்டெர்லைட்-ஆலை-இயங்கலாம்-என்று-அறிக்கை

  • 5
  • 0

கடந்த மே 22ஆம் தேதி, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று மனு அளிக்கச்சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதன்பிறகு, ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு மூடி சீல் வைத்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாந்தா நிறுவனம் டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கினை விசாரித்த, தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை நியமித்து உத்தரவிட்டது. தீர்ப்பாயத்தின், உத்தரவுப் படி, அந்தக் குழுவும் தூத்துக்குடிக்குச் சென்று ஸ்டெர்லைட் ஆலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தி அந்த அறிக்கையைப் பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது. அந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், 'ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் மீண்டும் செயல்பட அனுமதி தரலாம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு நேற்று (டிசம்பர் 07) தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழக அரசு, மாசுக் கட்டுபாட்டுவாரியம், தலையீட்டாளர்கள் நாங்கள் ஆலைக்கு எதிராக முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளும் உண்மை என அந்த அறிக்கையில் தருண் அகர்வால் தலைமையிலான குழு உறுதி செய்துள்ளது. ஆலைச் செய்திருக்கும் அத்துமீறல்களை அந்த அறிக்கை பதிவு செய்திருக்கிறது. நாம் முன்வைத்த 5 குற்றச்சாட்டுகளில், 3 குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது. மக்களும் அரசும் சமூக ஆர்வலர்களும் சொன்னது உண்மை என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஆலை இயங்கலாம் என்ற பரிந்துரையையும் குழு தெரிவித்துள்ளது. இது கேலிக்கூத்தானது. மேகதாதுக்கு எதிராக சிறப்புச் சட்டமன்றத்தைக் கூட்டியதுபோல, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். அதேபோல் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடந்த வேண்டும். ஆலையைத் திறக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினா
து. 

Leave Comments

Comments (0)