வாக்கிற்கு-பணம்-கொடுக்க-காசில்லாத-கட்சி

/files/abcd-2021-04-03-21:39:27.jpg

வாக்கிற்கு-பணம்-கொடுக்க-காசில்லாத-கட்சி

  • 3
  • 0

தவ.செல்வமணி


எனக்கு 1000,எனக்கு 2000,எனக்கு 3000 என  மக்கள் ஓட்டுக்கு வாங்கிய பணத்தை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்,தேர்தலை இப்படித்தான் அரசியல்வாதிகள் மாற்றி வைத்துள்ளார்கள்.


ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்பதே அக்கட்சியின் வெற்றியையும் நிர்ணயம் செய்கிறது,தேர்தல் செலவு வேறு கோடி கோடியாகஇப்படி இருக்க ஒரு கட்சியில் தேர்தல் நிதியே மக்களிடம் இருந்து தான் பெறப்படுகிறது அதுவும் உண்டியல் குலுக்கி இதையும் நக்கல் அடிக்கும் பிறவியிலும் உண்டு ஆனால் கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடம் இருந்து பணம் வாங்குபவர்கள்,பெரிய தொழில் முதலைகளிடம் பணம் வாங்குபவர்கள் அவர்களுக்காக தானே வேலை செய்வர்,மக்களிடம் நிதி திரட்டும் கட்சி மக்கள் பணி தானே செய்யும்.ஒரு வேட்பாளரின் கணவர் ஆட்டோ ஓட்டுகிறார்.


ஒரு வேட்பாளரின் மனைவி 100 நாள் வேலை செய்கிறார் அந்த பணத்தில் தான் குடும்பம் நடத்துகிறார்கள்.


ஒரு வேட்பாளர் குடிசையில் வசிக்கிறார்.


ஒரு வேட்பாளருக்கு தேர்தலுக்கு டெபாசிட் கட்ட கூட பணம் இல்லாமல் கூட்டணி கட்சிகளும்,மக்களும் நிதி கொடுத்தார்கள்.
இவர்களால் ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்ய இயலாது ,தினசரி நாளிதழில் முதல் பக்க விளம்பரம் கொடுக்க இயலாது,தொலைக்காட்சிகளிலும்,யூ டியூப்பிலும் விளம்பரம் தர இயலாது ஏன் தேர்தலுக்கு சுவரொட்டி வரைய கூட இவர்களிடம் காசு கிடையாது,இவர்களால் ஓட்டுக்கு பணம் கொடுக்கவும் முடியாது ஆனால் இவர்கள் மக்களின் பிரச்சனைக்காக குரல் கொடுப்பார்கள்,மக்களின் பிரச்சனைக்கு களம் இறங்கி போராட்டம் செய்வர்,சனநாயகத்தின் பக்கம் நிற்பர்,எப்போதும் மக்களை பற்றியே சிந்தித்து மக்களோடு நிற்பர்,இவர்களுக்கு பணம் பொருட்டல்ல,புகழ் தேவையில்லை மக்கள் மக்கள் என்றே முழங்குவர் ஆம் இவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

Leave Comments

Comments (0)